ITR Refund Scan: மோசடி நபர்களின் வலையில் சிக்கினால் லட்சங்களில் இழப்பு.... எச்சரிக்கும் வருமான வரித்துறை
ITR Refund Scam: வருமான வரித்துறை (Income Tax Department) வரி செலுத்துவோருக்கு ஒரு முக்கியமான செய்தியை அளித்துள்ளது. ஐடிஆர் ரீபண்ட் மோசடி மூலம் மக்களை ஏமாற்றும் மோசடி நபர்களிடம் வரி செலுத்துவோர் பலியாக வேண்டாம் என வருமான வரித் துறை எச்சரித்துள்ளது.
ITR Refund Scam: ஐடிஆர் தாக்கல் செய்துவிட்டீர்களா? இன்னும் ஐடிஆர் ரீஃபண்டு உங்களுக்கு கிடைக்கவில்லையா? அப்படியென்றால் உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். ஐடிஆர் ரீபண்ட் தொடர்பாக வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
ITR Refund Scam: எச்சரிக்கும் வருமான வரித்துறை
வருமான வரித்துறை (Income Tax Department) வரி செலுத்துவோருக்கு ஒரு முக்கியமான செய்தியை அளித்துள்ளது. ஐடிஆர் ரீபண்ட் மோசடி மூலம் மக்களை ஏமாற்றும் மோசடி நபர்களிடம் வரி செலுத்துவோர் பலியாக வேண்டாம் என வருமான வரித் துறை எச்சரித்துள்ளது. இப்படிப்பட்ட வழக்குகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதாக எமது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஐடிஆர் தாக்கல் (ITR Filing) செய்பவர்களுக்கு மின்னஞ்சலிலோ அல்லது சமூக வலைதளத்திலோ இதுபோன்ற செய்திகள் வந்தால், அவை போலி செய்தியா அல்லது உண்மையான செய்தியா என்பதை அடையாளம் காண உதவும் சில குறிப்புகளை வருமான வரித்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
மைக்ரோ பிளாக்கிங் தளமான X இல் வருமான வரித்துறை இது தொடர்பான சில ட்வீட்களைப் பகிர்ந்துள்ளது. வருமான வரித்துறை எப்போதும் பாப்-அப் விண்டோக்கள் மூலம் வரி செலுத்துவோரை தொடர்புகொள்ளாது என்பதை தெளிவுபடுத்தியுள்ள வருமான வரித்துறை, இப்படிப்பட்ட பாப்-அப் செய்திகளைக் குறித்து வரி செலுத்துவோர் (Taxpayers) எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. வரி செலுத்துவோர் இதுபோன்ற செய்திகளை உடனடியாக மூடிவிட்டு வருமான வரித் துறைக்கு தெரிவிக்குமாறும் ஐடி துறை கேட்டுக் கொண்டுள்ளது.
1.5 லட்சத்தை இழந்த நபர்
ஐடிஆர் மோசடியின் ஒரு உதாரணத்தையும் வருமான வரித்துறை பகிர்ந்து கொண்டுள்ளது. போலியான ஐடிஆர் ரீஃபண்ட் செய்தியை (Fake ITR Refund Message) கிளிக் செய்து ஒரு நபர் ரூ. 1.5 லட்சத்தை இழந்ததாக வருமான வரித்துறை கூறியது. அவர் அந்த லிங்கை க்ளிக் செய்தவுடன் ஒரு செயலிக்கு டைரக்ட் செய்யப்பட்டதாகவும், அதன் பிறகு அவரது போன் ஹேக் செய்யப்பட்டு அவரது கணக்கிலிருந்து பணம் டெபிட் செய்யப்பட்டதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
வருமான வரித்துறை, மக்களிடம் அவர்களின் தனிப்பட்ட தகவல்களை ஒருபோதும் கேட்பதில்லை என்றும், OTP, வங்கி கணக்கு, பான், ஆதார் போன்ற விவரங்களை யார் என்று தெரியாத நபர்களுடன் பகிர வேண்டாம் என்றும் வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது.
வரி செலுத்துவோர் உண்மையான மற்றும் போலியான செய்திக்கு இடையேயான வித்தியாசத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்றும், அதிகாரப்பூர்வ வருமான வரித் துறை இணையதளத்தில் மட்டுமே தங்கள் வரி விவரங்களை உள்ளிட வேண்டும் என்றும் வருமான வரித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
மோசடியைக் கண்டறிய வருமான வரித் துறை 5 முக்கிய புள்ளிகளை முன்னிலைப்படுத்தியுள்ளது:
- ரீஃபண்ட் அளிப்பதாக உறுதியளிக்கும் அந்நியர்களிடமிருந்து செய்திகள் அல்லது அழைப்புகளுக்கு ஒருபோதும் பதிலளிக்க வேண்டாம்.
- வருமான வரித் துறையைச் சேர்ந்ததாகக் கூறும் வெரிஃபை செய்யப்படாத நபர்களை ஒருபோதும் நம்ப வேண்டாம்.
- OTP, வங்கி கணக்கு, பான் மற்றும் ஆதார் விவரங்கள் போன்ற தனிப்பட்ட விவரங்களை எந்த சந்தர்ப்பத்திலும் யாருடனும் பகிர வேண்டாம்.
- வருமான வரித் துறையுடன் இணைக்கப்பட்டதாகக் கூறும் வெரிஃபை செய்யப்படாத இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம்
- அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலம் மட்டுமே உங்கள் வருமான வரியை ஈ-பே செய்வது நல்லது.
மேலும் படிக்க | PF கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்கான எளிய வழி: முழு செயல்முறை இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ