National Pension Scheme: பணி ஓய்வுக்குப் பின்னும் வாழ்க்கை கவலைகள் இல்லாமல் மகிழ்ச்சியாக போக வழிவகை செய்யும் ஒரு வேலை கிடைக்க வேண்டும் என்பதே உழைக்கும் வர்க்கத்தின் கனவாக உள்ளது. இதற்காக பலரும் பல வித பெரிய நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். நன்றாக யோசித்து முதலீடு செய்கிறார்கள், நிதி ஆலோசகர்களுடன் ஆலோசித்து திட்டங்களை தேர்வு செய்கிறார்கள். ஏனென்றால், ஓய்வுக்குப் பிறகு, மக்களுக்குச் செலவுகளுக்கு அதிகப் பணம் தேவைப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடல்நலக் குறைவு, மூப்பு போன்ற காரணங்களால் பல நோய்களுக்கான ஆபத்தும் வயதான காலத்தில் அதிகமாகும். மாதாந்திர செலவுகளில் எந்த வித பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க, பல முக்கியமான விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். இந்த நிலையில், மாதந்தோறும் லட்சக்கணக்கான ரூபாய் ஓய்வூதியப் பலன் கிடைக்கும் ஒரு திட்டம் கிடைத்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு திட்டத்தை பற்றி இந்த பதிவில் காணலாம். 


தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension Scheme)


பணி ஓய்வுக்கு பின்னர் நல்ல தொகையை பெற ஒவ்வொரு மாதமும் சிறிய அளவிலான தொகையை முதலீடு செய்தால் போதும். ஓய்வு காலத்தில் மக்கள் நிதி  பிரச்சனைகளுக்கு ஆளாகாமல் இருக்க அரசால் தொடங்கப்படட் திட்டம் தான் தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension Scheme).


இத்திட்டத்தின் கீழ், மாதந்தோறும், 1 லட்சம் ரூபாய் வரை ஓய்வூதியம் பெறலாம். இதனால், வயதான காலத்தில் எந்த வித பண போராட்டமும் இல்லாமல் வாழ்க்கை கழியும். தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ், 18 முதல் 70 வயதுக்குட்பட்ட குடிமக்கள் தங்கள் முதலீட்டு கனவை நிறைவேற்றிக்கொள்ள முடியும்.


மேலும் படிக்க | சேமிப்பு கணக்குகளுக்கான வட்டியை அதிகரிக்க வலியுறுத்தும் RBI... தயங்கும் வங்கிகள்..!


திட்டம் தொடர்பான முக்கியமான விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்


அரசாங்கத்தால் நடத்தப்படும் NPS மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. இதில் நீங்கள் முதலீடு செய்து நல்ல வருமானம் பெறலாம். தேசிய ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்து பெரும் வருமானம் ஈட்டும் உங்கள் கனவை நீங்கள் நிறைவேற்றலாம். பாதுகாப்பான ஓய்வு காலத்தை எதிர்பார்க்கும் அனைவருக்கும் இது ஒரு பொன்னான வாய்ப்பு என்றே கூறலாம். 


அரசு தொடங்கியுள்ள தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் 70 வயது வரை எளிதாக முதலீடு செய்யலாம். இருப்பினும், துவக்க நிலையிலேயே இதில் முதலீடு செய்ய ஆரம்பித்தால், அதிக லாபம் எளிதில் கிடைக்கும். என்பிஎஸ் 1 ஜனவரி 2004 அன்று தொடங்கப்பட்டது.


இது 2009 இல் தனியார் துறை ஊழியர்களுக்காக திறக்கப்பட்டது. இந்தத் திட்டம் ஒரு தன்னார்வ மற்றும் நீண்ட கால முதலீட்டுத் திட்டமாகும். இது மட்டுமின்றி, மத்திய அரசின் சமூக பாதுகாப்பு முயற்சியாகவும் இது கருதப்படுகிறது. NRI களும் இதில் முதலீடு செய்யலாம். எதிர்காலத்திற்கான முதலீட்டை பொறுத்தவரை இது ஒரு மிக நல்ல திட்டமாக பார்க்கப்படுகின்றது. 


இந்த திட்டத்தில் மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் பிரீமியமாக 30 ஆண்டுகளுக்கு செலுத்தினால், மாத ஓய்வூதியமாக (Pension) ரூ.1 லட்சம் கிடைக்கும். ஓய்வு பெறும்போது, ​​நீங்கள் ஒரு கோடி ரூபாயை எளிதாகப் பெறுவீர்கள். இந்தத் திட்டத்தில் ஈக்விட்டி வெளிப்பாடு 50 முதல் 75 சதவிகிதம் ஆகும்.


5 கோடி கார்பஸ் உருவாக்க ஒருவர் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?


உதாரணமாக, ஒருவருக்கு தற்போது 30 வயது என்று வைத்துக்கொள்வோம். ஓய்வு பெறும்போது 5 கோடி ரூபாய் கார்பஸ் உருவாக்க விரும்பினால், முதலில் அவர் எவ்வளவு வட்டி பெற முடியும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். NPS இல் சராசரியாக 10 சதவிகித வட்டி எளிதாகக் கிடைக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், அவர் ஒவ்வொரு மாதமும் சுமார் 22,150 ரூபாய் என்பிஎஸ்ஸில் முதலீடு செய்தால், 30 ஆண்டுகளில் அவரது பணம் ஆண்டுக்கு 10 சதவீத வட்டி விகிதத்தில் சுமார் 5 கோடி ரூபாயாக மாறும். காம்பவுண்டிங் சக்தியால் இது சாத்தியமாகும். இந்த 30 ஆண்டுகளில் அவரது மொத்த முதலீடு சுமார் ரூ.79.74 லட்சமாக இருக்கும். இதற்கு அவருக்கு 4.21 கோடி ரூபாய் வட்டி கிடைக்கும்.


மேலும் படிக்க | EPF Withdrawal Rules: பிஎஃப் தொகைக்கு வரி கட்ட வேண்டுமா? முக்கிய விதி.. தெரிந்துகொள்ளுங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ