NPS: ஜாக்பாட் ஓய்வூதிய திட்டம்.. இப்படி சேமித்தால் மாதா மாதம் ரூ.2 லட்சம் ஓய்வூதியம் பெறலாம்

NPS: இன்றைய காலக்கட்டத்தில் மெட்ரோ நகரங்களைப் பார்த்தால், அங்கு நல்ல வாழ்க்கை வாழ மாதந்தோறும் சுமார் 50 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 3, 2023, 06:49 PM IST
  • பணிஓய்வு காலத்திற்கான திட்டமிடல்.
  • ஓய்வு பெறும்போது உங்களுக்கு இரண்டு விருப்பங்கள் இருக்கும்.
  • முதலில் எவ்வளவு கார்பஸ் தேவைப்படும் என்பதைப் புரிந்துகொள்வோம்.
NPS: ஜாக்பாட் ஓய்வூதிய திட்டம்.. இப்படி சேமித்தால் மாதா மாதம் ரூ.2 லட்சம் ஓய்வூதியம் பெறலாம் title=

NPS: அனைவருக்கும் பணிஓய்வு காலத்திற்கான திட்டமிடல் (Retirement Planning) மிகவும் முக்கியமானது. இதற்கு என்.பி.எஸ். (NPS) மிகச்சிறந்த திட்டமாக பார்க்கப்படுகின்றது. பணி ஓய்வு காலத்திற்கு திட்டமிடும்போது, ​​நீங்கள் தலைகீழ் கணக்கீடுகளைச் செய்ய வேண்டும். அதாவது, நீங்கள் எவ்வளவு பணத்தை முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டியதில்லை, மாறாக ஓய்வூ காலத்தில் உங்களுக்கு எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும். இன்றைய காலக்கட்டத்தில் மெட்ரோ நகரங்களைப் பார்த்தால், அங்கு நல்ல வாழ்க்கை வாழ மாதந்தோறும் சுமார் 50 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. இதில் உங்கள் வீட்டு வாடகை, வாகன செலவுகள், உங்கள் உணவு மற்றும் பயணம் ஆகியவை அடங்கும். 

உங்களுக்கு இன்று 30 வயதாகி, 30 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 60 வயதில் ஓய்வு பெற்ற பிறகு, இதேபோன்ற வாழ்க்கையை வாழ விரும்பினால், இன்றோடு ஒப்பிடும்போது அந்த நேரத்தில் உங்களுக்கு 3-4 மடங்கு அதிக பணம் தேவைப்படும். அதாவது ஒய்வு பெறும்போது ஒவ்வொரு மாதமும் சுமார் 2 லட்சம் ரூபாய் தேவைப்படும். ஓய்வு பெறும்போது ஒவ்வொரு மாதமும் ரூ.2 லட்சம் ஓய்வூதியமாகப் பெறுவதற்கு எவ்வளவு பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என்ற கேள்வி இப்போது எழுகிறது.

ஓய்வு பெறும்போது உங்களுக்கு இரண்டு விருப்பங்கள் இருக்கும்

நீங்கள் ஓய்வு பெறும்போது, ​​உங்களுக்கு இரண்டு வாய்ப்புகள் இருக்கும். நீங்கள் உங்கள் பணத்தை ஒரு வருடாந்திர திட்டத்தில் முதலீடு செய்து, அதிலிருந்து ஓய்வூதியம் பெறத் தொடங்கலாம். அல்லது 60 சதவீத தொகையை திரும்பப் பெற்று, மீதமுள்ள 40 சதவீதத்துடன் வருடாந்திர திட்டத்தை உருவாக்கலாம். ஓய்வு பெறும்போது, ​​என்பிஎஸ் -இன் குறைந்தபட்சம் 40 சதவீத தொகையை ஒரு வருடாந்திர திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். 

உதாரணமாக, ஒருவர் தனது முழு கார்பஸையும் ஒரு வருடாந்திர திட்டத்தில் முதலீடு செய்து அதில் ஓய்வூதியம் பெறுகிறார் என்று வைத்துக்கொள்ளலாம். அத்தகைய சூழ்நிலையில் உங்களுக்கு எவ்வளவு கார்பஸ் தேவைப்படும் என்பதையும், அதற்காக ஒவ்வொரு மாதமும் எவ்வளவு பணம் முதலீடு செய்ய வேண்டும் என்பதையும் இங்கே காணலாம். 

மேலும் படிக்க | RBI Repo Rate:வட்டி விகிதங்களை மாற்றுமா ரிசர்வ் வங்கி? கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்?

முதலில் எவ்வளவு கார்பஸ் தேவைப்படும் என்பதைப் புரிந்துகொள்வோம்

தற்போதைய FD விகிதங்களைப் பார்த்தால், அவை சுமார் 6-7 சதவீதமாகவே உள்ளன. நீங்கள் ஓய்வு பெறும்போது குறைந்தபட்சம் 5 சதவீத வட்டியும், அதிக வட்டி கிடைத்தால் அதிக பலன்களும் கிடைக்கும் என்று கருதலாம். அத்தகைய சூழ்நிலையில், உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 2 லட்சம் தேவைப்பட்டால், உங்களுக்கு ஆண்டுக்கு ரூ.24 லட்சம் வட்டி தேவைப்படும். 5 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.24 லட்சம் உங்களுக்கு வேண்டுமென்றால், இதற்காக உங்களிடம் சுமார் ரூ.5 கோடி கார்பஸ் இருக்க வேண்டும். இதன் மூலம் ஆண்டுக்கு 5 சதவீத வட்டியில் சுமார் 25 லட்சம் ரூபாய் கிடைக்கும்.

5 கோடி கார்பஸ் உருவாக்க ஒருவர் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?

உதாரணமாக, ஒருவருக்கு தற்போது 30 வயது என்று வைத்துக்கொள்வோம். ஓய்வு பெறும்போது 5 கோடி ரூபாய் கார்பஸ் உருவாக்க விரும்பினால், முதலில் அவர் எவ்வளவு வட்டி பெற முடியும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். NPS இல் சராசரியாக 10 சதவிகித வட்டி எளிதாகக் கிடைக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், அவர் ஒவ்வொரு மாதமும் சுமார் 22,150 ரூபாய் என்பிஎஸ்ஸில் முதலீடு செய்தால், 30 ஆண்டுகளில் அவரது பணம் ஆண்டுக்கு 10 சதவீத வட்டி விகிதத்தில் சுமார் 5 கோடி ரூபாயாக மாறும். காம்பவுண்டிங் சக்தியால் இது சாத்தியமாகும். இந்த 30 ஆண்டுகளில் அவரது மொத்த முதலீடு சுமார் ரூ.79.74 லட்சமாக இருக்கும். இதற்கு அவருக்கு 4.21 கோடி ரூபாய் வட்டி கிடைக்கும்.

மேலும் படிக்க | 40 சதவிகித ஏற்றுமதி வரி திரும்ப பெறப்படுமா? கண்ணீர் சிந்தும் வெங்காயம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News