Senior Citizens Saving Scheme: மனித வாழ்க்கையில் எப்போதும் பணத்திற்கான தேவை இருக்கின்றது. வயது அதிகரிக்க அதிகரிக்க நமது வருமான வழிகளும், பணத்திற்கான தேவையும் மாறுபடும். எனினும், ஒரு குறிபிட்ட வயதிற்கு பிறகு நமக்கு இளமையில் இருக்கும் உடல் வலிமையும், வாய்ப்புகளும் இருப்பதில்லை. ஆகையால், முதுமைக்கான செல்வத்தை இள வயதிலேயே ஈட்டுவது நல்லது. இதை மனதில் வைத்து பலர் பணி ஓய்விற்கு  பின் பயன்படும் வகையில் பல முதலீட்டு திட்டங்களில் பணத்தை முதலீடு செய்கிறார்கள். இது தவிர மூத்த குடிமக்கள் தங்களிடம் இருக்கும் பணத்தை பாதுகாப்பாக சேர்த்து வைத்து, வருமானம் ஈட்ட உதவும் சில திட்டங்களும் உள்ளன. அதில் ஒரு சூப்பர்ஹிட்  திட்டம் பற்றி இந்த பதிவில் காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்


தபால் நிலையம் (Post Office) மூலம் வழங்கப்படும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (Senior Citizen Saving Scheme) ஒரு அரசாங்க முதலீட்டுத் திட்டமாகும். இது அஞ்சல் அலுவலகத்தின் சிறு சேமிப்புத் திட்டங்களின் கீழ் வருகிறது. 60 வயதுக்கு மேல் உள்ள அனைவரும் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். மேலும்  விருப்ப ஓய்வு திட்டத்தின் (Voluntary Retirement Scheme) கீழ் விஆர்எஸ் (VRS) வாங்கியவர்களும் அதாவது ஓய்வு பெற்றவர்களும், 55 வயதுக்குட்பட்ட மற்றும் 60 வயதுக்குட்பட்ட ஓய்வு பெற்ற நபர்களும் எஸ்சிஎஸ்எஸ் (SCSS) கணக்கைத் திறக்க முடியும். இது தவிர, பாதுகாப்பு சேவைகளில் இருந்து ஓய்வு பெற்ற 50 வயதுக்கு மேற்பட்டவர்களும் SCSS இல் கணக்கைத் திறக்கலாம்.


குறைந்தபட்ச முதலீடாக எவ்வளவு செலுத்த வேண்டும் (What is the Minimum Investment in SCSS)


இந்தத் திட்டத்தை தொடங்க குறைந்தபட்ச முதலீடாக ரூ. 1000 இருந்தால் போதும். அதிகபட்சமாக ரூ. 30 லட்சம் முதலீடு செய்யலாம். இதில், முதலில் ஐந்து ஆண்டுகளுக்கு கணக்கு துவங்கப்படுகின்றது. அதன் பிறகு, மூன்று ஆண்டுகளுக்கு இதை நீட்டிக்க முடியும். 


வருமான வரி விலக்கு


மூத்த குடிமக்கள் (Senior Citizens) சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்தால், வருமான வரி சட்டத்தின் (Income Tax Act) பிரிவு 80C-ன் பலன் கிடைக்கும். இதன் மூலம் ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம்.


SCSS: முழுமையான கணக்கீடு


- மொத்த வைப்புத்தொகை: ரூ 5 லட்சம்
- திட்டத்தின் கால அளவு: 5 ஆண்டுகள்
- வட்டி விகிதம்: 8.2%
- முதிர்வுத் தொகை: ரூ.7,05,000
- வட்டி மூலம் கிடைக்கும் வருமானம்: ரூ 2,05,000
- காலாண்டு வருமானம்: ரூ 10,250


மேலும் படிக்க | ChatGPTக்கு போட்டி கொடுக்க ஹனுமான் தயார்! இந்திய தொழில்நுட்பத்தை களமிறக்கும் முகேஷ் அம்பானி!


முதியோருக்கான தனிச்சிசிறப்பு வாய்ந்த திட்டம்


அஞ்சல் அலுவலக மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான திட்டமாகும். இந்த திட்டம் விஆர்எஸ் வாங்கியவர்களுக்கும் பொருந்தும். தற்போது இத்திட்டத்தில் 8.2 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில், மூத்த குடிமக்கள் 5 லட்சம் ரூபாய் வைப்புத் தொகைக்கு, வட்டியிலேயே ஒவ்வொரு காலாண்டிலும் ரூ.10,250-ஐ பெறலாம். 5 ஆண்டுகளில் வட்டியில் இருந்து மட்டும் 2 லட்சம் ரூபாய் ஈட்டலாம். 


SCSS திட்டத்தின் முக்கிய நன்மைகள்


- இந்த சேமிப்பு திட்டம் இந்திய அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் ஒரு சிறு சேமிப்பு திட்டமாகும். 


-  ஆகையால் இது மிகவும் நம்பகமான மற்றும் பாதுகாப்பான திட்டமாக கருதப்படுகிறது.


- இந்த திட்டத்தின் கீழ் 3 மாதங்களுக்கு ஒருமுறை வட்டி வழங்கப்படுகிறது. 


- ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மற்றும் ஜனவரி முதல் தேதியில் வட்டி கணக்கில் வரவு வைக்கப்படும்.


- இதன் தற்போதைய வட்டி விகிதம் 8.2% ஆகும், இது அவப்போது திருத்தப்படும். 


- இந்த கணக்கை நாட்டில் எங்கு வேண்டுமானாலும் மாற்றுக்கொள்ளலாம். 


- இந்த திட்டத்தில் முதலீடு செய்தால், வருமான வரிச் சட்டம் பிரிவு 80C-ன் கீழ், ஒவ்வொரு ஆண்டும் ரூ. 1.5 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம். 


மேலும் படிக்க | NPS விதிகளில் ஏப்ரல் 1 முதல் முக்கிய மாற்றம்... உடனே தெரிந்துகொள்ளுங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ