Hanooman AI: இந்திய தயாரிப்பாக, கூட்டு முயற்சியில் களமிறங்கவிருக்கும் ’ஹனுமான்’ ஜிபிடி வரும் மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்படும் என ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
ChatGPTக்கு போட்டியாக, இந்தியாவின் சொந்த AI தயாரிப்பான Hanooman மார்ச் மாதம் தொடங்கப்பட்டதும், ChatGPTக்கு கடும் போட்டியாக இருக்கும். பிரீமியம் சேவைக்கு பணம் வசூலிக்கும் ChatGPTஐ எதிர்கொள்ள முகேஷ் அம்பானி இலவசமாக வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கூட்டு முயற்சியால் ஹனுமான் AI அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகமாகிறது. சீதா மஹாலக்ஷ்மி ஹெல்த்கேர் (SML) மற்றும் உயர்மட்ட இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் பிறந்த ஹனுமான் இந்தியர்களுக்கு சேவை செய்வார்
இந்த AI மாடல் உள்ளூர் மொழிகளில் சேவைகளை வழங்கும். ராம பக்தர் அனுமாரின் பெயரின் ஆங்கில எழுத்துக்களில் சிறிய மாறுதலுடன் இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது.
ஹனுமான் AI ஆனது ஆளுகை, மாதிரி சுகாதாரம், கல்வி மற்றும் நிதி போன்ற துறைகளுக்காக டிசைன் செய்யப்பட்டுள்ளது
இந்த AI மாடல் வெற்றி பெற்றால், ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு துறையில் ரிலையன்ஸ் பெரிய நிறுவனமாக மாறும்
செயற்கை நுண்ணறிவுத் துறையின் அடுத்த கட்ட புரட்சியாகக் கருதப்படும் சாட்ஜிபிடிக்கு (ChatGPT) அனுமார் போட்டியாக இருப்பார்
செயற்கை நுண்ணறிவின் (AI) ஆற்றலைப் பயன்படுத்தி இந்தியாவில் உள்ள அனைவருக்கும் அணுகக்கூடியதாக மாற்றுவதற்கான ஜியோ பிளாட்ஃபார்ம்களின் லட்சியத் திட்டங்கள் ஆகும். வேகமாக வளர்ந்து வரும் உலகளாவிய நிலப்பரப்பில், போட்டித்தன்மையுடன் இருக்க AI கண்டுபிடிப்புகளில் இந்தியா முன்னணியில் இருக்க ஜியோ பிரைன் பணியாற்றுகிறது
ஹனுமான் AI மாடல், பேச்சு முதல் உரை வரை பல்வேறு பயனர் நட்பு சேவைகளை வழங்கும். இவை பெரிய மொழி மாதிரிகள் அல்லது LLM சிஸ்டம்கள், பெரிய அளவிலான டேட்டக்களிருந்து கற்றுக்கொள்கின்றன