மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட் செய்தி: இந்த வங்கிகளில் FD விகிதங்கள் அதிகரித்தன... விவரம் இதோ
Senior citizens Interest Rates: ஆகஸ்ட் மாதத்தில் மூத்த குடிமக்களுக்கு நல்ல செய்தி வந்துள்ளது. பல வங்கிகள் ஆகஸ்ட் மாதத்தில் வட்டி விகிதங்களை மாற்றியுள்ளன.
மூத்த குடிமக்கள் வங்கி எஃப்டி: நாட்டின் அரசு மற்றும் தனியார் வங்கிகள் மூலம் மூத்த குடிமக்களுக்கு பல சிறப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன. தற்போது ஆகஸ்ட் மாதத்தில் மூத்த குடிமக்களுக்கு மற்றொரு நல்ல செய்தி வந்துள்ளது. பல வங்கிகள் ஆகஸ்ட் மாதத்தில் வட்டி விகிதங்களை மாற்றியுள்ளன, அதன் பிறகு மூத்த குடிமக்கள் 9% வரை வட்டியைப் பெறுகிறார்கள். இது மூத்த குடிமக்களுக்கு ஒரு ஜாக்பாட் செய்தியாக வந்துள்ளது. எந்த வங்கிகள் மூலம் எவ்வளவு அதிக வட்டி கிடைக்கின்றது என இந்த பதிவில் காணலாம்.
ஆக்சிஸ் வங்கி எஃப்டி விகிதங்கள்
ஆக்சிஸ் வங்கி, மூத்த குடிமக்களுக்கு 7 நாட்கள் முதல் 10 வருடங்களில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு 3.5% முதல் 8.05% வரையிலான விகிதத்தில் எஃப்டி -இல் வட்டியை வழங்குகிறது. இந்த விகிதங்கள் 14 ஆகஸ்ட் 2023 முதல் அமலுக்கு வரும். பொது வாடிக்கையாளர்களுக்கு, வங்கி FD களுக்கு 3.5% முதல் 7.3% வரை வட்டியை வழங்குகிறது. இந்த வட்டி விகிதங்கள் ரூ.2 கோடிக்கும் குறைவான FD களுக்கு பொருந்தும்.
ஃபெடரல் வங்கி எஃப்டி விகிதங்கள்
ஃபெடரல் வங்கியின் கூற்றுப்படி, மூத்த குடிமக்கள் 13 மாத கால அவகாசத்துடன் கூடிய FD -களில் 8.07% வட்டி பெறுகிறார்கள். அதே நேரத்தில், சாதாரண குடிமக்கள் 7.30% வட்டி விகிதத்தில் பெறுகிறார்கள். இந்த விகிதங்கள் 15 ஆகஸ்ட் 2023 முதல் அமலுக்கு வரும்.
கனரா வங்கி எஃப்டி விகிதங்கள்
கனரா வங்கி மூத்த குடிமக்களுக்கு வங்கி எஃப்டி -களுக்கு 4% முதல் 7.75% வரை வட்டி வழங்குகிறது. இந்த கட்டணங்கள் ஆகஸ்ட் 12, 2023 முதல் அமலுக்கு வரும். இது தவிர, வங்கி 444 நாட்களுக்கு 5.35% முதல் 7.90% வரை வட்டி அளிக்கிறது. இது தவிர, வங்கி பொது குடிமக்களுக்கு 4% முதல் 7.25% வரையிலான வட்டியின் பலனை வழங்குகிறது.
மேலும் படிக்க | எஸ்பிஐயின் ஜாக்பாட் திட்டம்... முதலீடு செய்யும் கடைசி நாள் மீண்டும் நீட்டிப்பு!
சூர்யோதய் SFB
சூர்யோதய் SFB மூத்த குடிமக்களுக்கு, 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான முதிர்வு கால எஃப்டி -க்கு 4.50% முதல் 9.10% வரையிலான வட்டி விகிதத்தின் பலனை வழங்குகிறது. அதே நேரத்தில், இந்த வங்கி பொது மக்களுக்கு 4% முதல் 8.60% வரையிலான வட்டியின் பலனை வழங்குகிறது. இந்த கட்டணங்கள் ஆகஸ்ட் 7 முதல் அமலுக்கு வரும்.
இதற்கிடையில், இந்திய ரிசர்வ் வங்கி கோடிக்கணக்கான மக்களுக்கு பெரும் நிவாரணம் அளித்துள்ளது. கடன் கணக்குகளில் அபராதம் மற்றும் வட்டி விகிதங்கள் தொடர்பான விதிகளை ரிசர்வ் வங்கி மாற்றியுள்ளது. கடன் கணக்கில் அபராதம் விதிக்கப்படுவதை மத்திய வங்கி தடை செய்துள்ளது. இதனுடன், அடுத்த ஆண்டு முதல் புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த புதிய விதி அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும். வணிகம், என்பிஎஃப் சி (NBFC), கூட்டுறவு வங்கி, வீட்டு நிதி நிறுவனம், நபார்டு, SIDBI போன்ற அனைத்து வங்கிகளுக்கும் புதிய விதிகள் பொருந்தும்.
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (என்பிஎஃப்சி) தங்கள் வருவாயை அதிகரிப்பதற்கான வழிமுறையாக 'அபராத வட்டி'யைப் பயன்படுத்தும் போக்கு குறித்து கவலை தெரிவித்துள்ளது. மத்திய வங்கி இது தொடர்பாக திருத்தப்பட்ட விதிகளை வெளியிட்டுள்ளது. புதிய விதிகளின்படி, வங்கிகளில் கடன் பெற்ற வாடிக்கையாளர்கள் கடனை செலுத்துவதில் தவறினால், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு 'நியாயமான' அபராதக் கட்டணங்களை மட்டுமே வங்கிகள் இப்போது விதிக்க முடியும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ