PPF vs SIP: பாதுகாப்பான வருமானம்.. பம்பர் லாபம் அளிக்கும் சிறந்த திட்டம் எது?
PPF Vs SIP: ஆபத்துகளை எதிர்கொள்ள தயாராக இருப்பவர்கள் பங்குச்சந்தை போன்ற இடங்களில் முதலீடு செய்யலாம். இங்கு லாபம் அதிகமாக இருந்தாலும், ஆபத்தும் அதிகம்.
PPF Vs SIP: ஒவ்வொருவரும் தனது மற்றும் தனது குடும்பத்தின் எதிர்காலத்தை மனதில் வைத்து திட்டமிடுகிறார்கள். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக பெரும்பாலான மக்கள் பணத்தை முதலீடு செய்கிறார்கள். இந்த காலகட்டத்தில் பணத்தை முதலீடு செய்ய பல வசதிகளும் வழிகளும் உள்ளன. மக்கள் தங்கள் தேவை மற்றும் வசதிக்கு ஏற்ப தங்கள் முதலீட்டு விருப்பங்களை தேர்வு செய்யலாம்.
ஆபத்துகளை எதிர்கொள்ள தயாராக இருப்பவர்கள் பங்குச்சந்தை போன்ற இடங்களில் முதலீடு செய்யலாம். இங்கு லாபம் அதிகமாக இருந்தாலும், ஆபத்தும் அதிகம். பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்ய விருப்பம் கொண்டவர்களுக்கும் பணத்தை முதலீடு செய்ய பல வழிகள் உள்ளன. இவற்றில் அவர்களது பணம் பாதுகாப்பாக இருப்பதோடு உத்தரவாதமான வருமானமும் (Guarantee Income) அவர்களுக்கு கிடைக்கிறது.
நல்ல வருமானம் ஈட்ட எண்ணும் அனைவருக்கும் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) மற்றும் மியூசுவல் ஃப்ண்டு எஸ்ஐபி (Mutual Fund SIP) சிறந்த தேர்வுகளாக இருக்கும். PPF என்பது அரசாங்க உத்தரவாதத் திட்டமாகும், இதில் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்ய வேண்டும்.
PPF vs SIP
PPF 15 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சியடைகிறது. SIP என்பது சந்தை இணைக்கப்பட்ட திட்டமாகும், இதில் வருமானத்திற்கு உத்தரவாதம் இல்லை. ஆனால் இதில் அதிக லாபம் ஈட்ட வாய்ப்பு உள்ளது. உங்கள் விருப்பப்படி எந்த நேரமும் SIP ஐ இயக்கலாம் மற்றும் எப்போது வேண்டுமானாலும் பணத்தை இதிலிருந்து எடுக்கலாம். இருப்பினும், நீண்ட கால SIP ஒரு இலாபகரமான ஒப்பந்தமாக கருதப்படுகிறது. இரண்டு திட்டங்களிலும் 15 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 5000 ரூபாய் முதலீடு செய்தால், எதில் எவ்வளவு பணம் கிடைக்கும் என்பதை இங்கே காணலாம்.
பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund)
அரசு உத்தரவாத திட்டமான PPF தற்போது 7.1 சதவீத (PPF Interest Rate) வருமானத்தை அளிக்கிறது. இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.5000 முதலீடு செய்தால், ஆண்டுக்கு ரூ.60,000 முதலீடு செய்வீர்கள். இந்த வகையில் நீங்கள் 15 ஆண்டுகளில் மொத்தம் ரூ.9,00,000 முதலீடு செய்வீர்கள். 7.1 இன் படி, நீங்கள் ரூ. 7,27,284 வட்டியாகப் பெறுவீர்கள். இதன்மூலம் முதிர்வுக்கான வட்டியும் சேர்த்து மொத்தம் ரூ.16,27,284 கிடைக்கும்.
SIP Calculator: சிஸ்டமடிக் இன்வெஸ்ட்மெண்ட் பிளான் (Systematic Investment Plan)
சந்தையுடன் இணைக்கப்பட்டிருப்பதால், SIP இல் முதலீடு செய்வது சற்று ஆபத்தானது. ஆனால் இது சராசரியாக 12 சதவிகிதம் வட்டி (SIP Interest Rate) அளிக்கிறது. சில சமயம் வட்டி இதை விட அதிகமாக இருக்கும். நீங்கள் SIP மூலம் ஒவ்வொரு மாதமும் 5000 ரூபாய் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தால், நீங்கள் வருடத்திற்கு 60,000 ரூபாய் முதலீடு செய்வீர்கள். மேலும் 15 ஆண்டுகளில் நீங்கள் மொத்தம் 9,00,000 ரூபாய் முதலீடு செய்வீர்கள்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் சராசரி வருவாயான 12 சதவீதத்தின்படி கணக்கீடு செய்தால், வட்டியாக மட்டுமே ரூ.16,22,880 கிடைக்கும். அதாவது, PPF-ல் முதிர்ச்சியின் போது நீங்கள் பெறும் பணத்தின் அளவு, வட்டியில் இருந்து மட்டுமே இதில் நீங்கள் பெற முடியும். அத்தகைய சூழ்நிலையில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் முதலீடு செய்த தொகை மற்றும் வட்டித் தொகை உட்பட மொத்தம் ரூ.25,22,880 பெறுவீர்கள். வருமானம் 12 சதவீதத்தை விட சிறப்பாக இருந்தால், இந்தத் தொகை இதை விட அதிகமாக இருக்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ