SIP vs PPF: இன்னும் சில நாட்களில் நாம் புத்தாண்டில் அடியெடுத்து வைக்கப் போகிறோம். பொதுவாக, ஒவ்வொரு ஆண்டும் புதிய இலக்குகளை அமைத்து அதை அடைவதற்கான வழிகளை புத்தாண்டு முதல் தொடங்குவது பலரது வழக்கமாக இருக்கும். இருப்பினும், சில நேரங்களில் இலக்குகளை எட்ட முடிவதில்லை. 2023-ம் ஆண்டில் உங்களுக்கும் அப்படி ஏதாவது நடந்திருந்தால், வருத்தபப்ட வேண்டாம். அதற்கு பதிலாக அடுத்த ஆண்டிற்கான திட்டமிடலை தொடங்குங்கள். குறிப்பாக பொருளாதார ரீதியாக உங்களுக்கு உள்ள கனவுகளை பூர்த்தி செய்துகொள்ள உதவும் ஒரு நல்ல திட்டம் பற்றி இந்த பதிவில் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பணத்தை முதலீடு செய்வதால் பல நன்மைகள் கிடைக்கின்றன. நிதி ஸ்திரத்தன்மையுடன் அவசர நிதியை உருவாக்க இது உங்களுக்கு உதவும். தற்போது மக்கள் SIP மற்றும் PPF இல் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதற்கான முதலீட்டிற்கு ஒரு பெரிய தொகை தேவை என்று நீங்கள் நினைத்தால், அது அவ்வாறு இல்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள். தினமும் ரூ.100 சேமித்தும் முதலீட்டை ஆரம்பிக்கலாம்.


SIP vs PPF: 


ஒரு முதலீட்டாளர் SIP அல்லது PPF இல் நீண்ட கால முதலீடு செய்தால், அவருக்கு சிறந்த வருமானம் கிடைக்கும். இதை இந்த எளிய கணக்கீட்டின் மூலம் புரிந்து கொள்ளலாம்.


PPF இலிருந்து இரட்டிப்பு வருமானத்தை பெறுவது எப்படி?


ஒவ்வொரு நாளும் ரூ.100 சேமிப்பதன் மூலம், ஒவ்வொரு மாதமும் ரூ.3,000 மற்றும் ஒரு வருடத்தில் ரூ.36,000 முதலீடு செய்யலாம். ஒரு வருடத்தில் பிபிஎஃப்-ல் ரூ.36 ஆயிரத்தை முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் உங்கள் முதலீட்டுத் தொகை ரூ.5 லட்சத்து 40 ஆயிரமாக இருக்கும். தற்போது PPF கணக்கில் 7.1% வட்டி வழங்கப்படுகிறது. 15 ஆண்டுகளில் 7.1% வட்டி விகிதத்தின்படி, உங்கள் வருமானம் ரூ.4 லட்சத்து 36 ஆயிரத்து 370 ஆக இருக்கும். முதிர்ச்சியின் போது, ​​முதலீட்டுத் தொகையும் வட்டித் தொகையும் சேர்த்து மொத்தம் ரூ.9,76,370 ஆக இருக்கும்.


மேலும் படிக்க | வருமானம் வந்தாலும் இவர்கள் மட்டும் வருமான வரியே கட்ட வேண்டாம்!!


SIP வருமானம் எப்படி இருக்கும்?


மறுபுறம், நீங்கள் தினமும் 100 ரூபாய் சேமித்து, SIP இல் மாதந்தோறும் முதலீடு செய்தால், நீங்கள் 15 ஆண்டுகளில் மொத்தம் 5,40,000 ரூபாய் முதலீடு செய்வீர்கள். பொதுவாக SIP 12% வருமானத்தை அளிக்கிறது. எனவே இந்த கணக்கீட்டின்படி உங்களுக்கு வட்டியில் மட்டுமே ரூ.9,73,728 கிடைக்கும். அதே நேரத்தில், முதிர்ச்சியின் போது நீங்கள் மொத்தம் ரூ.15,13,728 பெறுவீர்கள். இது முதலீட்டுத் தொகையை விட கிட்டத்தட்ட மூன்று மடங்காகும். 


அதாவது, ஒருவர் பிபிஎஃப் (PPF) -இல் ரூ. 5,40,000 முதலீடு செய்தால், 15 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2039 ஆம் ஆண்டில், ரூ. 9,76,370 முதிர்வுத் தொகையைப் பெறவார். அதேசமயம், அவர் எஸ்ஐபி (SIP) -இல் முதலீடு செய்தால், அதன் மூலம் ரூ. 15,13,728 சம்பாதிக்கலாம். இருப்பினும், SIP இல் முதலீடு செய்வதற்கு முன், கண்டிப்பாக நிதி ஆலோசகரை அணுகவும். 


சிறு சேமிப்புத் திட்டங்கள் 


சிறு சேமிப்புத் திட்டங்கள் என்பது நிதி அமைச்சகத்தில் உள்ள பொருளாதார விவகாரங்கள் துறையால் (DEA) கட்டுப்படுத்தப்படும் முதலீட்டு திட்டங்களாகும். இந்தத் திட்டங்களில் அதிக மக்கள் ஆர்வம் காட்டும் சூழலை ஏற்படுத்தும் வகையில், அதை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், தற்போதுள்ள விதிகளைத் திருத்துவதை நோக்கமாகக் கொண்ட புதிய விதிமுறைகளை மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்தியுள்ளது. மேலும் இந்த மாற்றம் அவர்களின் வசதிக்கேற்ப கணக்கைத் திறக்க உதவுகிறது. மூத்த குடுமக்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் மாற்றியமைக்கக்கூடிய முதலீட்டுத் தேர்வை வழங்குவதே இதன் நோக்கமாகும்.


மேலும் படிக்க | டிசம்பர் 31 -க்கு முன் செய்து முடிக்க வேண்டிய முக்கிய பணிகள் இவைதான்: மறந்தால் சிக்கல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ