டிசம்பர் 31 -க்கு முன் செய்து முடிக்க வேண்டிய முக்கிய பணிகள் இவைதான்: மறந்தால் சிக்கல்

ஜனவரி 1, 2024 முதல் பொருளாதாரத் துறையில் பல புதிய மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன. எனினும், டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் நாம் கண்டிப்பாக செய்து முடிக்க வேண்டிய சில பணிகளும் உள்ளன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 23, 2023, 11:52 AM IST
  • அபராதத்துடன் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.
  • புதிய சிம் கார்டு வாங்குவதற்கான விதிகள் மாறும்.
  • டிமேட் கணக்குகளில் நாமினியின் பெயரைச் சேர்ப்பது கட்டாயம்.
டிசம்பர் 31 -க்கு முன் செய்து முடிக்க வேண்டிய முக்கிய பணிகள் இவைதான்: மறந்தால் சிக்கல் title=

இன்னும் சில நாட்களில் 2023 ஆம் ஆண்டு தொடங்கவுளது. 2024 புத்தாண்டிற்கான கவுன்ட் டவுன் தொடங்கியுள்ளது. புத்தாண்டில் பல விஷயங்களில் புதிய தொடக்கங்கள் இருக்கும். ஜனவரி 1, 2024 முதல் பொருளாதாரத் துறையில் பல புதிய மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன. எனினும், டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் நாம் கண்டிப்பாக செய்து முடிக்க வேண்டிய சில பணிகளும் உள்ளன. இவற்றை முடிக்காவிட்டால், இழப்புகளை சந்திக்க நேரிடலாம். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம். 

இதில் மிக முக்கியமான விஷயம் தாமத வருமான வரிக் கணக்கை, அதாவது பிலேடட் ஐடிஆர் -ஐத் தாக்கல் செய்வது. இது தவிர, டிமேட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் கணக்கில் நாமினியைச் சேர்ப்பது, மூடப்பட்ட UPI ஐடியை மறுதொடக்கம் செய்வது மற்றும் வங்கி லாக்கரின் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது ஆகிய பணிகளையும் டிசம்பர் 31 -க்குள் முடிக்க வேண்டும். டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் இந்தப் பணிகளை முடிப்பதன் மூலம் நஷ்டத்தைத் தவிர்க்கலாம்.

அபராதத்துடன் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் (Belated ITR Filing)

2022-23 நிதியாண்டிற்கு அபராதத்துடன் பிலேடட் வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி டிசம்பர் 31, 2023 ஆகும். வருமான வரிச் சட்டத்தின் 234F இன் கீழ், உரிய தேதிக்கு முன் ரிட்டன் தாக்கல் செய்யாத நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

தாமத ஐடிஆர் தாக்கல் செய்பவர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். ஆனால், மொத்த வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் குறைவாக இருப்பவர்கள் ரூ.1000 அபராதம் மட்டுமே செலுத்த வேண்டும். ஆனால் டிசம்பர் 31க்கு பிறகு அவர்களும் ரூ.5,000 அபராதம் செலுத்த வேண்டும்.

வங்கி லாக்கர் ஒப்பந்தம் (Bank Locker Agreement) 

இரண்டாவது மிக முக்கியமான பணி வங்கி லாக்கர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது. திருத்தப்பட்ட வங்கி லாக்கர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான காலக்கெடு டிசம்பர் 31, 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) கூறியுள்ளது. இந்த தேதிக்குள், வங்கி லாக்கர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தவறியவர்களின் லாக்கர் முடக்கப்படும்.

ரிசர்வ் வங்கி வங்கி லாக்கர் ஒப்பந்தங்களுக்கான (Locker Contracts) புதுப்பித்தல் செயல்முறையை கட்டாயமாக்கியுள்ளது. டிசம்பர் 31, 2022 அன்று அல்லது அதற்கு முன் வங்கி லாக்கர் ஒப்பந்தத்தை சமர்ப்பித்த நபர்கள், திருத்தப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அந்தந்த வங்கிக் கிளையில் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் படிக்க | Budget 2024: பிஎம் கிசான் தவணை அதிகரிக்கிறதா? விவசாயிகளுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய நல்ல செய்தி!!

புதிய சிம் கார்டு வாங்குவதற்கான விதிகள் மாறும் (Rules for buying a new SIM card will change)

புதிய சிம் கார்டு வாங்குவதற்கான விதிகளும் ஜனவரி 1, 2024 முதல் மாறும். தொலைத்தொடர்புத் துறையின் படி, வாடிக்கையாளர்கள் இப்போது காகித அடிப்படையிலான செயல்முறை மூலம் KYC ஐச் சமர்ப்பிக்க வேண்டும். தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மட்டுமே e-KYC செய்யும். இருப்பினும், புதிய மொபைல் இணைப்புகளை பெறுவதற்கான மீதமுள்ள விதிகள் அப்படியே இருக்கும். அதில் எந்த வித மாற்றமும் செய்யப்படவில்லை. டிசம்பர் 31 வரை, சிம் கார்டுகள் ஆவணங்கள் மூலம் மட்டுமே கிடைக்கும்.

டிமேட் கணக்குகளில் நாமினியின் பெயரைச் சேர்ப்பது கட்டாயம் (Mandatory to add nominee’s name in Demat accounts)

ஜனவரி 1, 2024க்குள் டிமேட் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் நாமினி பெயரை சேர்ப்பதை செபி கட்டாயமாக்கியுள்ளது. கணக்கு வைத்திருப்பவர்கள் இதை செய்யத் தவறினால், அவர்களால் பங்குகளில் பரிவர்த்தனை செய்ய முடியாது. அவ்வாறு செய்வதற்கான காலக்கெடு முன்னதாக செப்டம்பர் 30 ஆக இருந்தது, அது மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

UPI ஐடியை இயக்குவதற்கான கடைசி வாய்ப்பு (Last chance to activate UPI ID)

நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் (NPCI), Google Pay, Paytm, Phone Pay போன்ற கட்டண செயலிகளை ஒரு வருடத்திற்கு செயலில் இல்லாத யுபிஐ ஐடிகளை (UPI ID) மூடும்படி கேட்டுக்கொண்டுள்ளது. UPI மூலம் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் தங்கள் ஐடியை செயல்படுத்த டிசம்பர் 31 வரை அவகாசம் உள்ளது.

மேலும் படிக்க | பிஎஃப் தொகைக்கு வரி விதிக்கப்படுமா? புதிய இபிஎஃப் வரி விதிகளை தெரிந்துகொள்ளுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News