PPF Investment: முதலீடு என்பது அனைவரது வாழ்விலும் மிக முக்கியமான ஒரு பழக்கமாகும். பணத்தை பாதுகாப்பதற்கும், அதை பெருக்குவதற்கும் இந்த பழக்கம் உதவியாக இருக்கிறது. முதலீடுகள் பல வகைப்படும். பங்குச்சந்தைகள் போன்ற சில முதலீடுகளில் ஆபத்து அதிகம். ஆபத்து இல்லாத பல முதலீட்டு திட்டங்களும் உள்ளன. எந்த வகையான சந்தை அபாயங்களையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படாத பாதுகாப்பான திட்டங்களில் முதலீடு செய்ய விரும்பும் பல நபர்கள் உள்ளனர். இன்றைய காலகட்டத்தில் அதிக அளவிலான மக்கள் இந்த அரசாங்க சிறுசேமிப்பு திட்டங்களில் (Small Saving Schemes) முதலீடு செய்து வருகிறார்கள். அவர்களுக்கென்று பல திட்டங்கள் சந்தையில் உள்ளன. அப்படி ஒரு மிகவும் பாதுகாப்பான திட்டம் பற்றி இந்த பதிவில் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாதுகாப்பான முதலீட்டிற்கு உதவும் அரசின் ஒரு அற்புதமான திட்டத்தைப் பற்றி இங்கே பார்க்கலாம். அரசின் இந்த திட்டம் நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதன் பெயர் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் (Public Provident Fund). தற்போது, இந்தத் திட்டத்தில் முதலீடு செய்து, முதலீட்டாளர்கள், 7.1 சதவீத வட்டி விகிதத்தைப் பெறுகிறார்கள். பொது வருங்கால வைப்பு நிதியில் முதலீடு செய்யப்பட்ட பணம் 15 ஆண்டுகளில் முதிர்ச்சியடைகிறது. 


பொது வருங்கால வைப்பு நிதியில் ரூ.3,000 முதலீடு (Investment) செய்து ரூ.9 லட்சத்துக்கு மேல் வருமானம் பெறும் சூத்திரம் தற்போது மிக பிரபலமாகி வருகிறது. இதை பற்றியும், இந்த முதலீட்டின் முழு கணிதத்தையும் இங்கே விரிவாகப் புரிந்துகொள்ளலாம்.


- இதற்கு முதலில் உங்கள் அருகில் உள்ள வங்கி (Banks) அல்லது தபால் நிலையத்திற்குச் (Post Office) சென்று பிபிஎஃப் கணக்கைத் தொடங்க வேண்டும். கணக்கைத் (PPF Account) திறந்த பிறகு, நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ. 3,000 சேமித்து, ஆண்டுக்கு ரூ.36,000 பிபிஎஃப்-ல் முதலீடு செய்ய வேண்டும்.


- தற்போதைய 7.1 சதவீத வட்டி விகிதத்தின் (Interest Rate) அடிப்படையில் கணக்கிடப்பட்டால், 15 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்வு நேரத்தில், உங்களிடம் ரூ.976370 இருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் மொத்தம் 5,40,000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும்.


மேலும் படிக்க | PPF, SSY கணக்கு இருக்கா? இதை செய்து முடியுங்கள்.. இல்லையென்றால் கணக்கு முடக்கப்படும்


- உங்கள் முதலீட்டிற்கு வட்டியாக மொத்தம் ரூ.4,36,370 கிடைக்கும். அத்தகைய சூழ்நிலையில், முதிர்வு நேரத்தில் நீங்கள் சுமார் ரூ.9,76,370 பெறுவீர்கள். முதிர்ச்சியின் போது நீங்கள் பெறும் தொகையின் மூலம், உங்கள் எதிர்காலம் தொடர்பான முக்கிய நோக்கங்களை நிறைவேற்ற முடியும்.


பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்


நீங்கள் PPF இல் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். 15 ஆண்டுகள் முதிர்ச்சியடைந்த பிறகு, உங்கள் முதலீட்டு காலத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம்.


சிறு சேமிப்புத் திட்டங்கள் (Small Saving Schemes) 


அரசின் சிறு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வது லாபகரமான விருப்பமாகக் கருதப்படுகிறது. சிறு சேமிப்பு திட்டங்களில் பொது வருங்கால வைப்பு நிதி (PPF), மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS), சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) போன்றவை முக்கியமான திட்டங்களாக உள்ளன. இந்தத் திட்டங்கள் அனைத்து வகை மக்களுக்குமானவை. இவை வரிச் சலுகைகள் முதல் உத்தரவாதமான வருமானம் வரை பல நன்மைகளை வழங்குகின்றன. 


மேலும் படிக்க | Budget 2024: அதிகரிக்கும் வந்தே பாரத், அதிநவீன ரயில்கள்... ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ