சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 4 விருதுகளை வாங்கி குவித்த அமரன் படம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துச் சிறந்த விருதைப்பெற்ற வின்னர்ஸ் யார் என்று பார்ப்பதற்கு முன் உங்களுக்குப் பிடித்த நடிகர் மற்றும் படம் இங்கு இடம் பெற்றுள்ளதா என்று கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
22வது சென்னை சர்வதேச விழாவில் விருது வென்றவர்கள் யார்?யார்? மேலும் சிறந்த விருது எந்த தொகுப்பிற்காக வழங்கப்பட்டது என்று பார்க்கலாம். வருடந்தோறும் பல்வேறு நட்சத்திரங்கள் பங்கேற்று விருது வழங்கும் விழாவைச் சிறப்பாக நடத்தி வருவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டிற்கான சிறந்த நடிகர், நடிகைகள், இயக்குநர் மற்றும் இசையமைப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்காக வழங்கப்படும் சென்னை சர்வதேச திரைப்பட விருதாகும்.
சிறந்த இரண்டாவது படத்திற்கான விருதை லப்பர் பந்து பட இயக்குநர் இந்த விருதைப் பெற்றிருக்கிறார். ஸ்பெஷல் மென்ஷன் ஜூரி விருது போட் படத்தின் கோழிப்பண்ணை செல்லத்துரை கதாபாத்திரத்தில் நடித்த யோகி பாபுக்கு வழங்கப்பட்டது.
ஸ்பெஷல் மென்ஷன் ஜூரி விருதை தங்கலான் பட இயக்குநர் பா. ரஞ்சித் வழங்கப்பட்டது. தங்கலான் படத்தில் சிறப்பாக நடித்த விக்ரம் இப்படத்தின் கதாநாயகன் என்பதுக் குறிப்பிடத்தக்கது.
சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகர் விருதை இந்த ஆண்டு “மகாராஜா” படத்தில் நடித்த விஜய் சேதுபதி பெற்றுள்ளார். மேலும் இந்த ஆண்டு சிறந்த நடிகையாகச் சாய் பல்லவிக்கு விருது வழங்கப்பட்டது.
சிறந்த இசையமைப்பாளராக அமரன் பட இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பெற்றுள்ளார். இந்த ஆண்டு சிறந்த கதை படமாக மகாராஜா பட இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் பெற்றுள்ளார்.
சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் இந்த ஆண்டு சிறந்த துணை நடிகராக லப்பர் பந்து “கெத்து” தினேஷ் பெற்றுள்ளார். துஷாரா விஜயன் “வேட்டையன்” படத்திற்காகச் சிறந்த துணை நடிகை விருதைப் பெற்றுள்ளார்.
வாழை படத்தில் நடித்த பொன்வேல் சிறந்த குழந்தை நட்சத்திரம் விருதைப் பெற்றார். மேலும் நம்பிக்கைக்குரிய நடிகர் விருதை ரசவாதி படத்தில் நடித்த அர்ஜுன் தாஸ் இந்த விருதைப் பெற்றார்.
ஃபேவரைட் நடிகராக மெய்யழகன் படத்தில் நடித்த அரவிந்த் சுவாமி மற்றும் ஃபேவரைட் நடிகையாக “கொட்டுக்காளி”படத்தில் நடித்த அன்னா பென் விருதைப் பெற்றுள்ளார்.
தங்கலான் படத்தின் கலை இயக்குநர் மூர்த்திக்குச் சிறந்த கலை இயக்குநர் விருது வழங்கப்பட்டது. கயமை படத்தின் இயக்குநர் ராஜ்குமார் சிறந்த குறும்படத்திற்கான விருதைப் பெற்றார்.