இனி ஜியோ சினிமா இலவசம் இல்லை! கட்டண விவரங்கள் இதோ!
ஜியோ சினிமா அதன் பயனர்களுக்கு இலவசமாக நிகழ்ச்சிகளை வழங்கி வந்த நிலையில், ஐபிஎல் 2023 முடிந்த பிறகு கட்டணம் வசூலிக்கும் என்று கூறப்படுகிறது.
ஜியோ சினிமா ஓடிடி தளமானது பயனர்களுக்கு இலவசமாக வெப் தொடர்கள், திரைப்படங்கள் மற்றும் பல நிகழ்ச்சிகளை இலவசமாக வழங்கி வருகிறது. இதைவிட ஒரு படி மேலே சென்று நடப்பாண்டின் ஐபிஎல் போட்டியின் நேரலையையும் இலவசமாக பயனர்களுக்கு ஒளிபரப்பி வருகிறது. ஐபிஎல் போட்டியின் நேரலையை இலவசமாக வழங்கி அனைத்து இயங்குதளங்களுக்கும் போட்டியாக ஜியோ சினிமா அமைந்தது. ஜியோ சினிமா அதன் பயனர்களுக்கு இலவசமாக நிகழ்ச்சிகளை வழங்கி வந்த நிலையில், இனிமேல் கட்டணம் வசூலிக்கும் என்று கூறப்படுகிறது. 100க்கும் மேற்பட்ட புதிய திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களை அதன் தளத்தில் சேர்ப்பதன் மூலம் நெட்ப்ளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் போன்ற பிற முக்கிய ஓடிடி தளங்களுக்கு எதிராக ஜியோ போட்டியிட திட்டமிட்டுள்ளது. ஜியோவின் மீடியா மற்றும் கன்டென்ட் பிசினஸ் தலைவர் ஜோதி தேஷ்பாண்டே கூறுகையில், ஜியோ அதன் சலுகைகளை விரிவுபடுத்துவதற்கும் போட்டியை எதிர்கொள்ளும் முயற்சியில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களை அதன் சலுகைகளில் சேர்க்க திட்டமிட்டுள்ளது என்று கூறினார்.
மேலும் படிக்க | கூகுள் பிளேஸ்டாரில் ஆபத்தான மால்வேர்: ஆபத்தில் ஆண்ட்ராய்டு போன்கள்
ஐபிஎல் சீசன் மே 28, 2023 அன்று முடிவடைந்த பிறகு, ஜியோ சினிமா நிகழ்ச்சிகளை காண பயனர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இருப்பினும் இதற்கான சரியான கட்டணம் எவ்வளவு என்பது குறித்து நிறுவனம் முடிவு செய்யவில்லை, ஆனால் இந்த கட்டணம் வசூலிக்கும் முடிவின் மூலம் நிறுவனத்திற்கு வருவாய் பெரியளவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் 2023 சீசன் முடிவடைந்த பின்பு தான் கட்டணம் வசூலிக்கப்பட்ட இருப்பதாக கூறப்படுகிறது, போட்டி முடியும் வரை மற்ற நிகழ்ச்சிகளை பயனர்கள் இலவசமாக பார்த்துக்கொள்ள முடியும். அனைவருக்கும் ஏற்ற வகையில் நிறுவனம் குறைந்த அளவிலேயே கட்டணங்களை வசூலிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பொதுவாக ஜியோ தனது வாடிக்கைகையாளர்களுக்கு குறைந்த அளவில் ஏராளமான சலுகைகளுடன் கூடிய ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வரும் நிலையில், ஜியோசினிமா பயன்படுத்துவதற்கும் குறைவான கட்டணத்தையே வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் 2023 போட்டிகளின் நேரடி ஸ்ட்ரீமிங்கைத் தவிர, கூடுதல் டேட்டா ஆட்-ஆன் பேக்குகள் மற்றும் சிறப்பு வவுச்சர்களுடன் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டாவை வழங்கும் கிரிக்கெட் திட்டங்களையும் ஜியோ அறிமுகப்படுத்தியது. ஐபிஎல் போட்டிகளுக்காக ஜியோ ரூ.222, ரூ.444 மற்றும் ரூ.667 விலைகளில் மூன்று கிரிக்கெட் ஆட்-ஆன் பேக்குகளை அறிமுகப்படுத்தியது.
மேலும் படிக்க | மாநில அரசு ஊழியர்களுக்கு இரட்டை நற்செய்தி: டிஏ ஹைக்குடன் இதுவும் கிடைக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ