அகவிலைப்படி உயர்வு: சமீபத்தில் மத்திய அரசு, ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவிகிதம் அதிகரித்தது. இதற்குப் பிறகு தற்போது மொத்த அகவிலைப்படி 42 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து பல மாநில அரசுகளும் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை அதிகரித்துள்ளன. அந்த வரிசையில் தற்போது மற்றொரு மாநில அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி கிடைத்துள்ளது.
இரட்டை நற்செய்தி
தற்போதுள்ள ஊழியர்களுக்கு இமாச்சல பிரதேச அரசு இரட்டை நற்செய்தியை வழங்கியுள்ளது. அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி அதிகரிக்கப்படும் என மாநில அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனுடன் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. அரசின் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பால் 2.15 லட்சம் ஊழியர்களும், 1.90 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். இமாச்சல பிரதேச அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து 31 சதவிகிதமாக இருந்த அகவிலைப்படி தற்போது 34 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அரசு கரூவூலத்துக்கு 500 கோடி சுமை
3% அகவிலைப்படி உயர்வு இமாச்சலப் பிரதேச அரசின் கருவூலத்தில் சுமார் 500 கோடி கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு ஜூன் 2023 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட 9,000 ஸ்பிட்டி பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.1,500 அளிப்பதாக அறிவித்தார்.
மேலும் படிக்க | 7th Pay Commission: 3% டிஏ உயர்வுடன் பெண்களுக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை அறிவிப்பு!
அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகியவை ஆண்டுக்கு இரண்டு முறை அரசாங்கத்தால் அதிகரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியும் (டிஏ) ஓய்வூதியம் பெறுவோருக்கு அகவிலை நிவாரணமும் (டிஆர்) வழங்கப்படுகிறது.
1.36 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள்
இமாச்சல பிரதேச அரசு ஏப்ரல் 1, 2023 முதல் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மாநில அரசின் 1.36 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள். தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (என்பிஎஸ்) கீழ் இந்த ஊழியர்கள் விலக்கு பெற மாட்டார்கள். மாநில தலைமைச் செயலாளர் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் அமலாக்கம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 2022 சட்டமன்றத் தேர்தலின் போது, பழைய ஓய்வூதியத்தை (ஓபிஎஸ்) மீட்டெடுப்பதாக காங்கிரஸ் வாக்குறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு ஊழியர்கள்
அரசாங்கம் சமீபத்தில் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தியுள்ளது. அகவிலைப்படி உயர்த்தப்பட்ட நிலையில், லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசு மேலும் ஒரு பரிசை வழங்கியுள்ளது. இப்போது மீண்டும் ஊழியர்களின் அகவிலைபப்டியில் 4 சதவிகித அதிகரிப்பு ஏற்படும். அகவிலைப்படி 4 சதவிகிதம் அதிகரிக்கும் போக்கு தொடரும் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
கடந்த 2 முறையாக அரசு அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி வரும் நிலையில், ஜூலை மாதத்தில் மீண்டும் அகவிலைப்படியை அரசு 4 சதவீதம் உயர்த்தக்கூடும்.
மேலும் படிக்க | மத்திய ஊழியர்களுக்கு பம்பர் ஜாக்பாட், 8000 வரை சம்பள உயர்வு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ