10 கோடிக்கும் மேல் செலவழித்து 1000 வழக்குகளை தீர்க்கவுள்ளதா Johnson & Johnson?
ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடரில் புற்றுநோய் கூறுகள் உள்ளது தொடர்பாக உள்ள 1000 வழக்குகளைத் தீர்ப்பதற்கு 10 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை செலுத்த வேண்டி இருக்கும்.
புதுடெல்லி: ஜான்சன் அண்ட் ஜான்சனின் (Johnson & Johnson) பேபி பவுடரில் புற்றுநோய் கூறுகள் இருப்பது தொடர்பாக இந்த நிறுவனம் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இப்போது இந்த வழக்குகளை சரி செய்வதற்கு, Johnson & Johnson ஒரு பெரிய தொகையை செலுத்த முடிவு செய்துள்ளது.
1000 வழக்குகளை தீர்த்து வைக்கும்
ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடரில் புற்றுநோய் (Cancer) கூறுகள் உள்ளது தொடர்பாக உள்ள 1000 வழக்குகளைத் தீர்ப்பதற்கு 10 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை செலுத்த வேண்டி இருக்கும்.
இதுவரை 19,000 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன
இதுவரை, இந்த விவகாரத்தில் நிறுவனம் மீது 19,000 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என டெய்லி மெயிலில் வெளியிடப்பட்ட செய்தி கூறுகிறது. நிறுவனத்தின் டால்க் தயாரிப்புகளில் இருக்கும் 'அஸ்பெஸ்டாஸ்' (Asbestos) காரணமாக பலருக்கு புற்றுநோய் ஏற்பட்டதாக அந்த செய்தி கூறியது. இருப்பினும், இதற்கு பதிலளிக்கும் விதமாக, Johnson & Johnson பேபி பவுடரில் (Baby Powder) அஸ்பெஸ்டாஸ் உள்ளது என்ற கூற்றை நிறுவனம் நிராகரித்தது.
நிறுவனம் ஒரு அறிக்கையில், 'சில விஷயங்களில் வழக்குகளை தீர்ப்பதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். எனினும், அது ஒரு 'கடமை' அல்ல. நிறுவனம் தனது தயாரிப்புகளைப் பாதுகாக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளில் எந்த மாற்றங்களையும் செய்யவில்லை.’ என கூறியுள்ளது.
மே மாதத்தில், Johnson & Johnson தனது தயாரிப்புகளை அமெரிக்காவிலும் (America) கனடாவிலும் விற்பனை செய்வதை நிறுத்துவதாகக் கூறியது. அங்கு அவர்களின் தயாரிப்பு குறித்து 'தவறான தகவல்கள்' பரப்பப்படுகின்றன என்றும் அதன் காரணமாக தேவை அங்கு குறைந்துள்ளது என்றும் நிறுவனம் கூறியது.
ALSO READ: புதிய திட்டம்: Swiggy இல் இருந்து இனி உங்கள் விருப்பப்படி தெரு உணவைப் பெற முடியும்
வழக்கு 2018 இல் வெளிவந்தது
Johnson & Johnson 2018 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஒரு விசாரணை அறிக்கையின் பேரில் பேபி பௌடர் குறித்த விசாரணையை எதிர்கொண்டு வருகிறது. இந்த விசாரணை அறிக்கையில், அதன் தயாரிப்பில் அஸ்பெஸ்டாஸ் இருப்பதை நிறுவனம் பல தசாப்தங்களாக அறிந்திருந்தது கண்டறியப்பட்டது. இது குறித்த ஆரம்ப குறிப்பு 1957 மற்றும் 1958 ஆவணங்களில் காணப்படுகிறது.
தொற்றுநோயால் ஏற்பட்ட ஒரு சோதனையின் போது நிறுவனம் தீர்வு பேச்சுவார்த்தைகளை நடத்தியது.
அமெரிக்காவில் இது தொடர்பாக நடந்த விசாரணையின் போது, கடந்த ஆண்டு, Johnson & Johnson அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் தலையீட்டிற்குப் பிறகு அமெரிக்காவிலிருந்து சுமார் 33,000 பேபி பௌடர் பாக்கெட்டுகளை திரும்பப் பெற்றது. இந்த விசாரணையில் ஆன்லைனில் வாங்கிய தயாரிப்பில் அஸ்பெஸ்டாஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ALSO READ: OMG...ஆணி, ஊசி, ஸ்க்ரூடிரைவர்….எங்க? அறுவை சிகிச்சையில் அதிர்ந்த Doctors!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR