SBI வாடிக்கையாளர்களே கவனம்... கொஞ்சம் அசந்தாலும் உங்க பணம் கோவிந்தா...!
நீங்கள் செய்யும் ஒரு வாட்ஸ்அப் தவறு உங்கள் வங்கிக் கணக்கை மோசடி செய்பவர்களுக்கு அம்பலப்படுத்தும் என SBI தனது வாடிக்கையாளர்களை எச்சரிக்கிறது..!
நீங்கள் செய்யும் ஒரு வாட்ஸ்அப் தவறு உங்கள் வங்கிக் கணக்கை மோசடி செய்பவர்களுக்கு அம்பலப்படுத்தும் என SBI தனது வாடிக்கையாளர்களை எச்சரிக்கிறது..!
கொரோனா நெருக்கடிக்கு மத்தியில், ஒரு புறம் டிஜிட்டல் பணபரிவர்தனை அதிகரித்து வரும் நிலையில், மறுபுறம் ஆன்லைன் வங்கி மோசடியும் அதிகரித்துள்ளது. சைபர் கிரைமினல்கள் மற்றும் நிதி மோசடி செய்பவர்கள் உங்கள் வங்கி நடவடிக்கைகளில் பதுங்கியிருக்கிறார்கள். ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் ஓட்டைகளைப் பற்றி உங்களுக்குத் தெரியாவிட்டால், உங்கள் வங்கிக் கணக்கு ஒரு கணத்தில் காலியாகிவிடும். இதைக் கருத்தில் கொண்டு, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) பாதுகாப்பான பரிவர்த்தனைகளுக்கும், மோசடிகளைத் தவிர்ப்பதற்கும் சில நடவடிக்கைகளை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது.
இது குறித்து SBI தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், வாட்ஸ்அப் அழைப்புகள் அல்லது SMS வந்தால் கவனமாக இருக்குமாறு மக்களைக் கேட்டுள்ளது.
SBI கூறுவது என்ன?
லாட்டரி அல்லது பரிசை வென்றது என்ற பெயரில் கணக்குத் தகவல்களைக் கேட்கும் செய்திகள் எப்போதும் போலியானவை. அதை முற்றிலும் புறக்கணிக்கவும்.
SBI தகவலின் படி, SMS, அழைப்பு, மின்னஞ்சல் அல்லது வாட்ஸ்அப் மூலம் உங்கள் கணக்கைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களை வங்கி ஒருபோதும் கேட்காது.
லாட்டரி அல்லது பரிசு வெல்வது போன்ற செய்திகளை நம்ப வேண்டாம். மோசடி செய்பவர்கள் உங்களுக்கு ஆசைகாட்டி உங்கள் கணக்கை காலி செய்யலாம்.
ஆன்லைன் மோசடிகளைத் தடுக்க, இதுபோன்ற விஷயங்களைப் பற்றி மற்றவர்களிடம் விழிப்புடன் இருக்கவும் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.
ALSO READ | October 1 முதல் மாறவுள்ளன முக்கியமான பல விதிகள்: முழு விவரம் உள்ளே!!
இதற்கு முன்பே, போலி மின்னஞ்சலுக்கான ஒரு எச்சரிக்கையை SBI வெளியிட்டது.
வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு போலி மின்னஞ்சல்கள் வருவதாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஒரு ட்வீட்டில் தெரிவித்திருந்தது. இந்த மின்னஞ்சல்களின் பாணி உண்மையான மின்னஞ்சல்களைப் போலவே இருக்கும், இதனால் மக்களை ஏமாற்ற முடியும். இதுபோன்ற மின்னஞ்சல்களைக் கிளிக் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்று வங்கி கூறியுள்ளது. வங்கி சார்பாக இதுபோன்ற எந்த அஞ்சலும் அனுப்பப்படவில்லை என்றும் வங்கி தெரிவித்துள்ளது. இதுகுறித்த தகவலையும் வங்கி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
மோசடியில் இருந்து தப்பா இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்...
உங்கள் தனிப்பட்ட வங்கி விவரங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
உங்கள் கணக்கு கடவுச்சொல்லை தொடர்ந்து மாற்றவும்.
தொலைபேசி, மின்னஞ்சல் அல்லது SMS மூலம் உங்கள் இணைய வங்கி விவரங்களை யாரிடமும் சொல்ல வேண்டாம்.
சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை ஒருபோதும் கிளிக் செய்ய வேண்டாம்.
எந்தவொரு வங்கி தொடர்பான தகவல்களுக்கும் எப்போதும் SBI-யின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை சார்ந்து இருங்கள்.
உங்களுக்கு மோசடி குறித்து ஏதேனும் சந்தேகம் எழுந்தால் அருகில் உள்ள காவல்நிலையம் அல்லது SBI கிளையை அணுகலாம்.
சைபர் குற்றவாளிகள் ஒரு தவறுக்காக மட்டுமே காத்திருக்கிறார்கள் - தயவுசெய்து இதுபோன்ற போலி அழைப்பாளர்களையோ அல்லது பகிரப்பட்ட செய்திகளையோ நம்ப வேண்டாம்.
இதுபோன்ற மோசடிகளிலிருந்து காப்பாற்றுவதற்காக இந்த செய்தியை மக்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு எஸ்பிஐ வாடிக்கையாளர்களைக் கேட்டுள்ளது.