காஞ்சீபுரம் பட்டுச்சேலைகளின் விலை 50% உயர்வால் விற்பனையில் சரிவு! அதிர்ச்சியில் நெசவாளர்கள்!!
Sarees Rate Historical Hike: காஞ்சிபுரம் சேலைகளின் விலையில் திடீரென 50 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் பட்டுத்தொழிலில் சக்கைப்போடு போடும் காஞ்சிபுரம் சேலைகள் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது...
தங்கம் விலை உயர்வால் காஞ்சிபுரம் சேலைகள் 50 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. இந்த பணவீக்கத்தால் காஞ்சிபுரம் சேலைகள் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது. திருமண சீசன் தொடங்கியுள்ளதால், மக்கள் ஷாப்பிங் செய்ய சந்தைக்கு செல்கின்றனர். திருமணப் புடவைகள் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள்தான்.
ஆனால், இப்போது காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள் வாங்குவது பட்ஜெட்டில் துண்டு விழச்செய்யும். விலைவாசிகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், சர்வதேச அளவில் பிரபலமான காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள் விலை உயர்ந்துள்ளன. காஞ்சிபுரம் பட்டுப் புடவைகளின் விலை கடந்த 8 மாதங்களில் 50% வரை அதிகரித்துள்ளதால், வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைகிறது.
காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள் விலை உயர்வுக்கு காரணம் என்ன?
காஞ்சிபுரம் பட்டுப் புடவை விலை சரி பாதி அதிகரித்துள்ளதன் எதிரொலி, விற்பனையில் 20% சரிவில் எதிரொலிக்கிறது. புடவைக்கு வைத்திருக்கும் பட்ஜெட்டில் பிடித்த மாதிரியிலான காஞ்சிபுரம் பட்டுப்புடவை வாங்க முடியாத நிலையில், வேறு ரக பட்டுப்புடவைகளுக்கு மக்கள் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஏனென்றால், காஞ்சிபுரம் பட்டுப்புடவையில் தங்கம் மற்றும் வெள்ளி பயன்பாடு உள்ளது. வெள்ளி மற்றும் தங்கத்தின் விலை அதிகரிப்பு அது தொடர்பான பல தொழில்களில் எதிரொலிக்கிறது. அதன் ஒருபகுதியாக வெள்ளி மற்றும் தங்கம் பயன்படுத்தப்படும் காஞ்சிபுரம் பட்டுப் புடவைகளின் விலையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
பட்ஜெட்டில் துண்டு
விலை அதிகரிப்பினால், தங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப கிடைக்கும் வேறு ரக பட்டுப்புடவைகளை நோக்கி மக்கள் திரும்புகின்றனர். அல்லது வாங்க திட்டமிட்ட புடவைகளின் எண்ணிக்கையை குறைக்கிறார்கள். இது காஞ்சீபுரம் சேலை உற்பத்தி மற்றும் நெசவாளர்களுக்கு மிகப் பெரிய பின்னடைவாக இருக்கும்.
மேலும் படிக்க | மார்ச் மாதத்தில் வேலைவாய்ப்புகள் அதிகமாகியது! EPFO சொல்லும் Payroll தரவுகள்!
தங்க விலை உயர்வு
தங்கம் மற்றும் வெள்ளியின் விலையின் அடிப்படையில் காஞ்சிபுரம் பட்டுப் புடவைகளின் விலை 35-40% வரை அதிகரித்திருப்பது இதுவே முதல் முறை.22 கேரட் தங்கத்தின் விலை அக்டோபர் 1, 2023 அன்று ஒரு கிராமுக்கு ரூ.5,356 என்ற அளவிலிருந்து ஏழரை மாத காலத்தில் (மே 21, 2024) 6,900 ரூபாயாக உயர்ந்துவிட்டது.
வெள்ளி விலை உயர்வு
இதே காலகட்டத்தில் வெள்ளி விலையும் கிராமுக்கு 75.50 காசுகள் என்ற நிலையில் இருந்து 101 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால் காஞ்சிபுரத்தில் பட்டு சேலை தொழிலுக்கு பெரும் அடி விழுந்துள்ளது நெசவாளர்களுக்கு கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.
புவியியல் குறியீடு
அதிகாரப்பூர்வமாக புவியியல் குறியீடு பெற்றுள்ள காஞ்சிபுரம் பட்டுப் புடவை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம் தெலங்கானா என தென்னிந்தியாவில் திருமண மற்றும் பண்டிகைக் காலத்தில் அணியப்படும் புடவைகளாகும். இந்திய அரசாங்கத்தால் புவியியல் குறியீடாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் உள்ள பெண்களுக்கு மிகவும் பிடித்தமான வார்த்தைகளில் ஒன்று காஞ்சிபுரம் பட்டு என்பதற்கான காரணம், அதன் அழகிய வடிவமைப்பும், தனித்துவமான அழகும் ஆகும். தனித்துவமான நெசவு நுட்பத்தில், திரவ தங்கம் மற்றும் வெள்ளி பயன்படுத்தப்படும் காஞ்சிபுரம் பட்டுப்புடவையில் பயன்படுத்தப்படும் பட்டு நூல்கள், பிரத்யேகமானவை.
காஞ்சிபுரம் நகரம் பட்டு நகரம் அழைக்கப்படுவதற்கான காரணம், இந்த நகரில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் பட்டுத்தொழிலையே நம்பியிருக்கின்றனர். ட்டு உற்பத்தியில் உலகின் இரண்டாவது பெரிய உற்பத்தியாளராக இந்தியா உள்ளது, மொத்த உலக பட்டு உற்பத்தியில் சுமார் 18% பங்களிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | CUR: கடன் அட்டையில் கடன் வரம்பை அதிகரிப்பது நல்லதா? கிரெடிட் கார்டு டிப்ஸ்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ