மீண்டும் டப்பிங் சீரியல்களை களமிறக்கும் ஜீ தமிழ்! எந்த சீரியலை எந்த நேரத்தில் பார்க்கலாம்?

Dubbed Serials In Zee Tamil Channel : தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த சேனலில் டப்பிங் சீரியல்கள் ஒளிபரப்பாகின. தற்போது மீண்டும் அந்த ட்ரெண்டை கொண்டு வருகிறது, ஜீ தமிழ். 

Written by - Yuvashree | Last Updated : May 24, 2024, 05:59 PM IST
  • ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் புதிய சீரியல்கள்
  • நளதமயந்தி முடிவுக்கு வருகிறது
  • டப்பிங் சீரியல் ஒளிபரப்பாகிறது
மீண்டும் டப்பிங் சீரியல்களை களமிறக்கும் ஜீ தமிழ்! எந்த சீரியலை எந்த நேரத்தில் பார்க்கலாம்?  title=

Dubbed Serials In Zee Tamil Channel : தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. அதே போல் இந்த சேனலில் தொடக்கத்தில் ஒளிபரப்பான டப்பிங் சீரியல்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தன. 

தற்போது டப்பிங் சீரியல்கள் எதுவும் ஒளிபரப்பாகாத நிலையில் ரசிகர்களின் கோரிக்கைகளை ஏற்று இரண்டு டப்பிங் சீரியல்களை ஒளிபரப்ப முடிவு செய்துள்ளது டிவி சேனல், அதன்படி வரும் திங்கள் ( மே 27 ) முதல் மதியம் 3 மணிக்கு நானே வருவேன் என்ற டப்பிங் சீரியலும் இரவு 10.30 மணிக்கு லட்சுமி கல்யாணம் என்ற சீரியலும் ஒளிபரப்பாக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | கார்த்திகை தீபம்: கல்யாண நாள் கொண்டாட்டத்திற்கு கிளம்பிய ரம்யா.. அடுத்தடுத்து ஐஸ்வர்யா செய்யும் சூழ்ச்சி

நானே வருவேன் சீரியல் இந்தியில் ராதா மோகன் ( Pyar Ka Pehla Naam ) என்ற பெயரில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற சீரியலாகும், இதில் ஷபீர் நாயகனாக நடிக்க நிஹாரிகா ராய் நாயகியாக நடித்துள்ளார். 

அதே இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள லட்சுமி கல்யாணம் சீரியல் ஹிந்தியில் பாக்கியலட்சுமி என்ற பெயரில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற சீரியலாகும். இதில் ரோஹித் சுசாந்தி நாயகனாக நடிக்க ஐஸ்வர்யா கரே நாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் திங்கள் முதல் இந்த இரண்டு சீரியல்களையும் உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | அண்ணா சீரியல்: சாமி வந்து ஆடி சௌந்தரபாண்டிக்கு ஷாக் கொடுத்த பரணி.. கோவிலில் நடந்த ட்விஸ்ட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News