புது தில்லி: நாட்டில் வங்கிகள் (Banks) முதல் தபால் நிலையங்கள் வரை வட்டி விகிதங்கள் வெகுவாகக் குறைந்துள்ளன. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் (SBI) வட்டி விகிதம், 6% ஐ விட குறைந்துவிட்டது. தபால் நிலையத்தின் வட்டி விகிதங்களும் கணிசமாகக் குறைந்துவிட்டன. ஆனால் எங்கும் நல்ல வட்டி கிடைக்கவில்லை என்பதும் இல்லை. நிலையான வைப்புகளில் (Fixed Deposit) 7% முதல் 10% வரை வட்டி கிடைக்கும் பல இடங்கள் இன்னும் உள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் இப்போது இதுபோன்ற இடங்கள் மிகக் குறைவாகவே எஞ்சியுள்ளன. நீங்களும் அதிக வட்டி சம்பாதிக்க விரும்பினால், இந்த இடங்களில் FD மூலம் அதிக வட்டி (Interest Rate) பெறலாம். 10%-ஐ காட்டிலும் அதிக வட்டி கிடைக்கக்கூடிய இடங்கள் எவை என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.


இந்த இடங்களில் நீங்கள் 7% முதல் 10% வரை வட்டி பெறலாம்:


  • HUDCO 12 மாதங்கள் முதல் 60 மாதங்களுக்கு இடையிலான FD- இல் 7.30% முதல் 7.55% வரை வட்டி தருகிறது.

  • LIC Housing Finance 12 மாதங்கள் முதல் 60 மாதங்கள் வரையிலான FD- இல் 7.10% முதல் 7.35% வரை வட்டி வழங்குகிறது.

  • PNB Housing Finance 12 மாதங்கள் முதல் 120 மாதங்கள் வரையிலான FD- இல் 7.45% முதல் 7.70% வரை வட்டியை வழங்குகிறது.

  • ICICI Home Finance 12 மாதங்கள் முதல் 120 மாதங்கள் வரையிலான FD- இல் 7.35% முதல் 7.60% வரை வட்டியை வழங்குகிறது.

  • Mahindra Finance 15 மாதங்கள் முதல் 40 மாதங்கள் வரையிலான FD- இல் 7.45% முதல் 7.55% வரை வட்டி அளிக்கிறது.

  • Bajaj Finance 12 மாதங்கள் முதல் 60 மாதங்கள் வரையிலான FD- இல் 7.35% முதல் 7.60% வரை வட்டி செலுத்துகிறது.

  • Sriram City Union Finance 12 மாதங்கள் முதல் 60 மாதங்களுக்கான FD- இல் 8.41% முதல் 8.91% வரை வழங்குகிறது.

  • Hawkins Cooker 12 மாதங்களுக்கும் 36 மாதங்களுக்கும் இடையிலான FD- இல் 10.50% முதல் 10.75% வரை வட்டி வழங்குகிறது.


அனைத்து தபால் நிலைய சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களை அறிந்து கொள்ளுங்கள்:


  • தற்போது, ​​தபால் அலுவலக சேமிப்பு கணக்கில் 4% வட்டி வழங்கப்படுகிறது.

  • தபால் அலுவலக Recurring Deposit-ல் 5.8% வட்டி வழங்கப்படுகிறது.

  • தபால் அலுவலக மாத வருமான திட்டத்தில் 6.6% வட்டி வழங்கப்படுகிறது.

  • ​​தபால் நிலையத்தின் 1 ஆண்டு கால வைப்புக்கு 5.5% வட்டி வழங்கப்படுகிறது.

  • ​​தபால் நிலையத்தின் 2 ஆண்டு கால வைப்புக்கு 5.5% வட்டி வழங்கப்படுகிறது.

  • தபால் நிலையத்தின் 3 ஆண்டு கால வைப்புத்தொகையில் தற்போது 5.5% வட்டி வழங்கப்படுகிறது.

  • தபால் நிலையத்தின் 5 ஆண்டு கால வைப்புக்கு 6.7% வட்டி வழங்கப்படுகிறது.

  • தற்போது, ​​கிசான் விகாஸ் பத்ர மீது 6.9% வட்டி வழங்கப்படுகிறது.

  • பொது வருங்கால வைப்பு நிதியான Public Provident Fund (PPF) மீது தற்போது 7.1% வட்டி வழங்கப்படுகிறது.

  • ​​சுகன்யா சம்ரித்தி யோஜனாவுக்கு 7.6% வட்டி வழங்கப்படுகிறது.

  • தேசிய சேமிப்பு சான்றிதழ் அதாவது NSC இல் 6.8% வட்டி வழங்கப்படுகிறது.

  • ​​மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் 7.4 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.


வட்டி விகிதங்கள் எப்போது மாறும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்:


இந்த வட்டி விகிதங்கள் 2020 ஜூலை 1 முதல் பொருந்தும். தபால் அலுவலக (Post Office) வட்டி விகிதங்கள் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள். வட்டி விகிதங்கள் பற்றிய அடுத்த அறிவிப்பு 2020 அக்டோபர் 1 அன்று செய்யப்படும். அதன் பிறகு வட்டி விகிதங்கள் அப்படியே இருக்கலாம், அதிகமாகலாம் அல்லது குறையலாம்.


எந்த காலாண்டில் நீங்கள் தபால் அலுவலக நேர வைப்பு, தபால் அலுவலக தொடர் வைப்பு, தபால் அலுவலக மாத வருமான திட்டம், தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC) மற்றும் கிசான் விகாஸ் பத்ர (KVP) ஆகியவற்றில் முதலீடு செய்கிறீர்களோ, அந்த நேரத்தில் கிடைக்கும் வட்டி விகிதம் திட்ட காலம் முழுவதும் தொடர்ந்து கிடைக்கும்.


இருப்பினும், பொது வருங்கால வைப்பு நிதி (PPF) மற்றும் சுகன்யா சம்ரித்தி யோஜனா ஆகியவற்றின் வட்டி விகிதம் வேறுபடக்கூடும். 


ALSO READ: எந்த வங்கி குறைந்த வட்டியில் கடன் கொடுக்கும்.. Top 10 வங்கிகளின் பட்டியல்!