உடல் எடை பட்டுனு குறைய... இந்த 5 உடற்பயிற்சிகள் முக்கியம் - ஆனால் ஒருநாள் கூட விடக்கூடாது!

Exercises For Weight Loss: உடல் எடையை விரைவாக குறைப்பதற்கு இந்த 5 உடற்பயிற்சிகள் பெரும் உதவியாக இருக்கும். இதுகுறித்து இங்கு விரிவாக காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Dec 3, 2024, 03:06 PM IST
  • உடற்பயிற்சிகளை தொடர்ச்சியாக செய்ய வேண்டும்.
  • இத்துடன் உணவுக் கட்டுப்பாடும் முக்கியம் ஆகும்.
  • உடற்பயிற்சிகள் செய்வது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்லது.
உடல் எடை பட்டுனு குறைய... இந்த 5 உடற்பயிற்சிகள் முக்கியம் - ஆனால் ஒருநாள் கூட விடக்கூடாது!

Best Exercises For Weight Loss: உடல் எடையை குறைப்பதற்கு நீங்கள் உணவு முறையில் கட்டுப்பாடு மற்றும் தொடர்ச்சியான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். புரதம், நார்ச்சத்து, வைட்டமிண்கள் என பல்வேறு ஊட்டச்சத்துகள் அடங்கிய சமர்சீரான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் அதிக கலோரிகளை குறைக்கும் தீவிரமான உடற்பயிற்சிகளையும் நீங்கள் தினமும் மேற்கொள்ள வேண்டும். 

Add Zee News as a Preferred Source

உடல் எடையை திட்டமிட்டப்படி குறைப்பதற்கு, குறைந்த கலோரிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மறுபுறம் அதிக கலோரிகளை கரைக்கும் உடற்பயிற்சிகளையும் தொடர்ந்து செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்வதால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும். அதுவும் காலையிலேயே உடற்பயிற்சிகளை மேற்கொண்டால் நாள் முழுவதும் ஆற்றலுடன் இருக்கலாம். 

பல்வேறு தசைகளை குறிவைத்தும், இதயத் துடிப்பை அதிகப்படுத்தியும், அதிதீவிரமான உடற்பயிற்சிகளில் கவனம் செலுத்துவது விரைவான எடை இழப்புக்கு வழிவகுக்கும். கொழுப்பை கரைக்க ஊக்குவிப்பதோடு, இதய திறனை அதிகரிக்கவும் இந்த 5 உடற்பயிற்சிகளில் ஒன்றை உங்களின் அன்றாடத்தில் ஒன்றாக வைத்துக்கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | 20 நாட்களில் நச்சுனு எடையை குறைக்கணுமா? இதை பண்ணுங்க போதும்

உயர் தீவிர பயிற்சிகள்

கலோரிகளை எரிப்பதற்கும் விரைவாக உடல் எடையை குறைப்பதற்கு இடைவெளி விட்டுவிட்டு உயர்-தீவிர பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இந்த உடற்பயிற்சிகள் உங்கள் உடலை வேறொரு பரிமாணத்திற்கு மாற்றும். அதிக தீவிரமான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதால் அதற்கான இடைவெளியும் அவசியமாகும். இது வயிறு பகுதி, கைகள், கால்கள் ஆகியவற்றுக்கான உடற்பயிற்சி கிடையாது. இது தசைகளை வளர்ப்பதற்கான ஒன்றாகும். இந்த அதிதீவிர செயல்பாடு உடலுக்கு கூடுதல் பலத்தை வழங்கும். 

நீச்சல்பயிற்சி

நீச்சல் பயிற்சியை தினமும் மேற்கொள்வதன் மூலம் அதிக கலோரிகளை குறைக்கலாம். இதை செய்வதன் மூலம் ஒட்டுமொத்த உடல் மற்றும் பல்வேறு தசை குழுக்களை ஒரு நேரத்தில் முடுக்கிவிட முடியும். இதய ஆரோக்கியத்தை மட்டுமின்றி, கை, கால், வயிறு மற்றும் பின்பகுதி அனைத்தையும் வளர்க்கும்.

சைக்கிளிங்

இதனை ஒருமணிநேரம் செய்வதன் மூலம் 600-800 கலோரிகளை குறைக்கலாம். நீங்கள் மிதமாக இந்த பயிற்சியை மேற்கொண்டால் கூட 400-500 கலோரிகள் குறையும். எனவே தினந்தோறும் சைக்கிள் அழுத்துவதை ஒரு பழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள். 

ஸ்கிப்பிங்

விரைவாக உடல் எடையை குறைப்பதற்கு ஸ்கிப்பிங் செய்வது பெரியளவில் உதவும். நீங்கள் இதை ஒரு நிமிடம் தொடர்ந்து செய்தாலே நீச்சல், நடைப்பயிற்சி ஆகியவற்றை செய்வதால் கரையும் கலோரிகளை விட, அதிகமாகவே இதில் கரையும். எனவே, நீங்கள் இதை 10 நிமிடங்கள் தொடர்ச்சியாக செய்தாலே 130-150 கலோரிகள் கரையும்.

ஓட்டப்பயிற்சி

அனைவருக்கும் ஏதுவான உடற்பயிற்சி என்றால், அது ஓட்டப்பயிற்சிதான். ஒவ்வொரு தசைகளையும் வலுவாக்குவதற்கு இது சிறந்த உடற்பயிற்சியாகும். இதன்மூலம், கைகள், கால்கள், வயிறு பகுதிகள் வலுபெறும். நீங்கள் டிரெட்மில் மூலமும் இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம், வெளியேவும் ஓட்டப்பயிற்சியை மேற்கொள்ளலாம்.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டவை. இதனை பின்பற்றும் முன்னர் மருத்துவ நிபுணரின் ஆலோசனையை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)

மேலும் படிக்க | எச்சரிக்கை... டீ - காபி அதிக சூடாக குடிப்பீர்களா... புற்றுநோய் அபாயம் அதிகரிக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News