Tata Nexon EV-ஐ வாங்காமலேயே வீட்டிற்கு கொண்டு வரலாம், Scheme பற்றிய முழு விவரம் இதோ!
வாகன நிறுவனங்களுக்கு மத்தியில் மெதுவாக ஆனால் உறுதியாக, மின்சார வாகனங்கள் பற்றிய ஆர்வம் அதிகரித்து வருகிறது. பொது மக்களும் இதன் பக்கம் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்கள்.
புதுடெல்லி: வாகன நிறுவனங்களுக்கு மத்தியில் மெதுவாக ஆனால் உறுதியாக, மின்சார வாகனங்கள் பற்றிய ஆர்வம் அதிகரித்து வருகிறது. பொது மக்களும் இதன் பக்கம் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்கள். இப்போதெல்லாம் பெரும்பாலான வாகன நிறுவனங்கள் வாடகை மாதிரியை வேகமாக செயல்முறையில் கொண்டு வருகின்றன. இந்த முறையில் வாடிக்கையாளர் காரை வாங்கத் தேவையில்லை. ஒவ்வொரு மாதமும் இதற்கான வாடகையை செலுத்தி அவர்கள் காரை பயன்படுத்த முடியும்.
டாடா மோட்டார்சும் (Tata Motors) தனது SUV Nexon EV-ல் சிறப்பு சப்ஸ்க்ரிப்ஷன் சலுகையை (Subscription Offer) வழங்கியுள்ளது. இந்த Subscription Offer 30 நவம்பர் 2020 வரை செல்லுபடியாகும். மேலும் இது முதல் 100 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். இந்த சிறப்பு சலுகை ஐந்து நகரங்களில் மட்டுமே கிடைக்கிறது.
ALSO READ: தமிழகத்தின் 6 நகரங்களில் Electric Vehicle charging நிலையங்கள் அமைக்கப்படும்: TN Govt
டாடாவின் Nexon EV-ஐ வாங்காமலே வீட்டிற்கு கொண்டு வாருங்கள்
இந்த சலுகையின் கீழ், ஒவ்வொரு மாதமும் 34,900 ரூபாய் முதல் தொடங்கும் வாடகையுடன், வாடிக்கையாளர்கள் Nexon EV-ஐ ஓட்டும் அனுபவத்தைப் பெறலாம். அதாவது, இந்த கட்டணத்தைத் தவிர, வாடிக்கையாளர்கள் கூடுதல் சாலை வரி மற்றும் பதிவு, காப்பீட்டு புதுப்பித்தல், சேவை மற்றும் பராமரிப்பு தொகை ஆகியவற்றை செலுத்த வேண்டியதில்லை. வாடிக்கையாளர்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப 18 மாதங்கள் முதல் 24 மாதங்கள் அல்லது 36 மாதங்களுக்கு சந்தாவை தேர்வு செய்யலாம்.
சந்தா காலாவதியான பிறகு, வாடிக்கையாளர்கள் தங்கள் திட்டத்தை நீட்டிக்கலாம் அல்லது காரை நிறுவனத்திற்கு திருப்பித் தந்து விடலாம்.
இந்த நகரங்களில் இந்த வசதி கிடைக்கும்
தற்போது, இந்த சிறப்பு சந்தா திட்டம் டெல்லி-என்.சி.ஆர், மும்பை, புனே, ஹைதராபாத் மற்றும் பெங்களூரில் தொடங்கப்பட்டுள்ளது. டாட்டா மோட்டார்ஸ் இந்த புதிய சந்தா மாதிரிக்கு ஆரிக்ஸ் ஆட்டோ உள்கட்டமைப்பு சேவைகளுடன் கூட்டு சேர்ந்துள்ளது.
வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைப் பார்த்து சலுகை அதிகரிக்கப்படலாம்
தற்போது 100 வாடிக்கையாளர்கள் மட்டுமே இந்த சலுகையை பெற முடியும். இது மிகவும் குறைவான எண்ணிக்கைதான் என்றாலும், நிறுவனம் வெளிப்படையாக இதை தெரிவிக்கவில்லை. வாடிக்கையாளர்கள் இதில் காட்டும் ஆர்வம் அதிகமாக இருந்தால், இந்த ஆஃபரை நிறுவனம், இன்னும் அதிக வாடிக்கையாளர்களுக்கு, மேலும் சில நகரங்களிலும் தொடங்கக்கூடும்.
ALSO READ: LED TV வாங்கணுமா? அப்ப இனிமே கொஞ்சம் அதிகமா செலவழிக்கணும்!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR