Train Travel Insurance: ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கும் வகையிலான ரயில் விபத்து நடந்துள்ளது. மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளாகி பலர் உயிரிழந்துள்ளனர். கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்பட 2 ரயில்கள் மோதிய விபத்தில் இதுவரை 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில், 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுபோன்ற விபத்துக்குப் பிறகு, அவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கத்தால் நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், டிக்கெட் முன்பதிவு செய்யும் போது விபத்துக்குள்ளான பயணி, பயணக் காப்பீடு எடுத்திருந்தால் அவர்களுக்கு கூடுதலாக அந்தப் பணம் கிடைத்திருக்கும். ரயில்வேயில் இருந்து ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது 49 பைசாவுக்கு பயணக் காப்பீட்டு வசதி கிடைக்கிறது. இதுகுறித்த முழு தகவல்களை இதில் காணலாம்.


நிவாரணம் அறிவிப்பு


மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளான சிறிது நேரத்தில், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத்தொகையை அறிவித்தார். விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ.10 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்தார். 


மேலும் படிக்க | கோரமண்டல் விரைவு ரயில் விபத்து: சமீபத்திய தகவல்கள்


இதை தொடர்ந்து, பிரதமர் நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ. 50 ஆயிரமும் நிவாரணம் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று நிவாரணத்தை அறிவித்தார். அதில், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சமும் நிவாரணம் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.


வெறும் 49 பைசாவில் ரூ. 10 லட்சம் காப்பீடு


இருப்பினும், ரயில் விபத்து காப்பீடு என்பதையும் ஒருவர் அறிந்துகொள்ள வேண்டும். ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, நீங்கள் ரூ. 49 பைசா மட்டும் செலவழித்து 10 லட்சம் வரை காப்பீடு பெறலாம். இந்தியன் ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது ரயில் சேவை சார்ந்த ஏதேனும் ஒரு செயலியில் இருந்து நீங்கள் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது, காப்பீடு பிரீமியத்தை செலுத்துவதற்கான அனுமதி உங்களிடம் கேட்கப்படும். 


இதன்கீழ், நீங்கள் காப்பீட்டை தேர்வுசெய்தால், ரயிலில் ஏதேனும் விபத்தால் மரணம் அல்லது நிரந்தர ஊனம் ஏற்பட்டால் ரூ.10 லட்சம் வரை இழப்பீடு கிடைக்கும். மறுபுறம், பகுதி ஊனம் ஏற்பட்டால், 7.5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படுகிறது. மறுபுறம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், 2 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை கிடைக்கும்.


4 மாதங்களுக்குள் உரிமை கோரலாம்


நீங்கள் இந்த பயணக் காப்பீட்டை எடுத்துக் கொண்டால், காயம் அடைந்த நபரின் நாமினி அல்லது அவரின் வாரிசு இதன் மூலம் காப்பீட்டுத்தொகையை பெறலாம். ரயில் விபத்து நடந்த 4 மாதங்களுக்குள் இதற்கான உரிமைகோரலை செய்ய வேண்டும். காப்பீட்டு நிறுவனத்தின் அலுவலகத்திற்குச் சென்று காப்பீட்டிற்கான கோரிக்கையை நீங்கள் தாக்கல் செய்யலாம். ஆனால் உங்கள் பயணக் காப்பீட்டில் உங்களுக்கு நாமினி இல்லை என்றால், உங்களுக்கு எந்தத் தொகையும் கிடைக்காது.


ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு இந்த வசதி வழங்கப்படுகிறது. ஐஆர்சிடிசி இணையதளத்தில் நீங்கள் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் போதெல்லாம், முன்பக்க சாளரத்திலேயே 'பயணக் காப்பீடு' என்ற விருப்பத்தைப் பார்க்கலாம். இந்த காப்பீடு என்பது ரயில் விபத்தில் ஏற்படும் எந்த வகையான சேதத்திற்கும் இழப்பீடு வழங்கும். டிக்கெட் முன்பதிவு செய்யும் போது அதை கிளிக் செய்து சில விவரங்களை நிரப்ப வேண்டும். அதன் பிறகு நீங்கள் இந்த காப்பீட்டின் கீழ் பதிவு செய்யப்படுவீர்கள்.


மேலும் படிக்க | ரயிலில் செல்லும்போது இதில் மிகவும் கவனமாக இருங்கள்... பெரிய அபராதம் விழும்!
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ