Tradition & Trivia Of Union Budget: மத்திய பட்ஜெட் என்பது வெறும் புள்ளிவிவரங்கள் அல்லது வரிவிதிப்பு விதிகள் மட்டுமல்ல, அதற்கென்று ஒரு பாரம்பரிய பக்கமும் உள்ளது. இந்தியப் பொருளாதாரத்தின் முக்கிய நாட்களில் ஒன்றான பட்ஜெட், தாக்கல் போது சில விதிகள் உள்ளன. அல்வா தயாரிப்பதில் இருந்து, எடுத்துச் செல்லப்படும் ஆவணங்கள், பேச்சு, அச்சிடும் இடம் மற்றும் பலவற்றிற்கு, பல வரலாறுகள் உள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று பிரதமர் மோடி அரசின் இரண்டாவது ஆட்சியின் கடைசி முழு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பாராளுமன்றத்தில் காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.  


அல்வா விழா


பட்ஜெட் தயாரிப்பின் அதிகாரப்பூர்வ தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், தற்போது உள்ள நாடாளுமன்றத்தின் நார்த் பிளாக் கட்டடத்தில் உள்ள அனைத்து சக ஊழியர்களுக்கும் மற்ற அமைச்சக அதிகாரிகளுக்கும், மத்திய அமைச்சரால் அல்வா வழங்கப்படும். பிறகு, பட்ஜெட் ஆவணங்கள் வழக்கமாக அச்சிடப்படும், ஆனால், 2021இல் கொரோனா தொற்று காரணமாக, காகிதமற்றதாக டிஜிட்டல் முறைக்கு மாறியது.


அல்வா விழா முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் அது முடிந்ததும், பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அனைத்து நிதி அமைச்சக அதிகாரிகளும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரை நார்த் பிளாக்கின் அடித்தளத்திற்குச் செல்ல வேண்டும். நிதி ஆயோக் மற்றும் பிற சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுடன் கலந்தாலோசித்து தயாரிக்கப்பட்ட அடுத்த நிதியாண்டிற்கான பட்ஜெட் வெளியே கசிந்துவிடாமல் இருக்க இத்தகைய நடவடிக்கைகள் செய்யப்படுகிறது. 


மேலும் படிக்க | Budget 2023-24 Live Updates: மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்... அரசியல் அழுத்தங்களை சமாளிப்பாரா நிர்மலா சீதாராமன்?


சூட்கேஸை மாற்றியது ஏன்?


'பட்ஜெட்' என்ற வார்த்தை பிரெஞ்சு வார்த்தையான 'பூகெட்' என்பதில் இருந்து உருவானது. அதாவது தோல் பிரீஃப்கேஸ். பட்ஜெட் சமர்ப்பணத்தின் போது சூட்கேஸை எடுத்துச் செல்லும் பாரம்பரியம் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியில் இருந்து வந்தது. இந்தியாவின் பட்ஜெட் சூட்கேஸ், 'கிளாட்ஸ்டோன் பாக்ஸ்' ஐப் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டத. 1860 ஆம் ஆண்டின் பிரிட்டிஷ் பட்ஜெட் தலைவரான வில்லியம் இ கிளாட்ஸ்டோனின் பெயரால் இது பெயரிடப்பட்டது. அவர் தனது ஆவணங்களை எடுத்துச் செல்ல ஒரு சிவப்பு சூட்கேஸை பயன்படுத்தினார். அந்த பெட்டியில் ராணியின் தங்க மோனோகிராம் பொறிக்கப்பட்டிருந்தது.


பிரிட்டனில், ஒரே ஒரு சூட்கேஸ் ஒரு  அமைச்சரிடம் இருந்து மற்றவருக்கு மாறியபோது, இந்தியாவில், வெவ்வேறு நிதி அமைச்சர்கள் தங்கள் சொந்த சூட்கேஸ்களை பட்ஜெட்டில் பயன்படுத்தினர். 


இருப்பினும், 2019 இல், சீதாராமன், சூட்கேஸை மறுத்து தனது பட்ஜெட் ஆவணங்களை 'பாஹி கட்டா' பாணியில் எடுத்துச் சென்றார். "சூட்கேஸ் எனக்கு எதிர்மறையான அர்த்தத்தை கொடுத்ததால் நான் அதை மாற்றினேன். இந்த அரசாங்கம் ஒருபோதும் சூட்கேள் வியாபாரத்தைப் பற்றியது அல்ல என்பது எனக்குத் தெரியும்" என நிர்மலா சீதாராமன் இதுகுறித்து கூறியிருந்தார்.


பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்ட சூட்கேஸ் பாணியை தூக்கி எறிந்து, 'பஹி கட்டா' என்ற பை மூலம் மேட்-இன்-இந்திய டேப்லெட்டுக்கு மாற்றினார். அந்த டேப்லெட் சிவப்பு துணியால் சுற்றப்பட்டு, இந்திய அரசின் சின்னம் தங்க நிறத்தில் பொறிக்கப்பட்டிருக்கும்.  


பட்ஜெட் குறித்த சுவாரஸிய தகவல்கள்


இந்தியாவின் முதல் பட்ஜெட்: கிழக்கிந்திய நிறுவனத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் வில்சன் இந்தியாவின் முதல் பட்ஜெட்டை ஏப்ரல் 7, 1860 அன்று பிரிட்டிஷ் அரசிடம் சமர்ப்பித்தார். ஆனால், சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட் நவம்பர் 26, 1947 அன்று தாக்கல் செய்யப்பட்டது.


மிக நீண்ட பட்ஜெட் உரை: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2020-2021ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது 2 மணி 42 நிமிடங்களுக்கு மிக நீண்ட பட்ஜெட் உரையை நிகழ்த்தினார். மிக நீளமான பேச்சாக இருந்தபோதிலும், 2 பக்கங்கள் மீதம் இருந்தது. அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் அவர் அந்த 2 பக்கங்களை பேசவில்லை. 2019இல் தனது முதல் பட்ஜெட்டின் போது 2 மணிநேரம் 17 நிமிடங்கள் பேசியிருந்தார். தொடர்ந்து, 2021இல் அவர் தனது சொந்த சாதனையை முறியடித்தார்.


முதல் காகிதமில்லா பட்ஜெட்: கொரோனா தொற்றால் 2021ஆம் ஆண்டில் முதல் முறையாக காகிதமில்லாத பட்ஜெட்டாக மாற்றியது.


பட்ஜெட்டின் மொழி: மத்திய பட்ஜெட் 1955 வரை ஆங்கிலத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், இந்தி மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் சமர்பிக்க முடிவு செய்யப்பட்டது.


அதிக வார்த்தைகளைக் கொண்ட பேச்சு: 1991ஆம் ஆண்டு நரசிம்ம ராவ் அரசாங்கத்தின் கீழ் மன்மோகன் சிங் 18,650 வார்த்தைகளில் மிக நீண்ட பட்ஜெட் உரையை ஆற்றினார்.


பட்ஜெட் தேதி மாற்றம்: பிரிட்டிஷ் காலத்தின் நடைமுறைப்படி, பிப்ரவரி கடைசி நாளன்று மாலை 5 மணிக்கு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 1999இல் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா பட்ஜெட் தாக்கல் செய்யும் நேரத்தை காலை 11 மணியாக மாற்றினார். அதே நேரத்தில், 2017இல், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட் தாக்கல் செய்யும் தேதியை பிப்ரவரி 1ம் தேதிக்கு மாற்றினார்.


மேலும் படிக்க | Budget 2023: பட்ஜெட் உரையை தமிழில் எவ்வாறு டவுண்லோட் செய்வது?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ