Budget 2023: பட்ஜெட் உரையை தமிழில் எவ்வாறு டவுண்லோட் செய்வது?

Nirmala sitharaman budget 2023: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி 11 மணிக்கு புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யத் தயாராக உள்ளார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரை புதன்கிழமையன்று தாக்கல் செய்த பிறகு உங்களின் பிராந்திய மொழிகளில் பெறலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 1, 2023, 10:20 AM IST
  • பட்ஜெட் உரை: எங்கே, எப்படி பார்ப்பது.
  • பட்ஜெட் உரை எப்போது தொடங்குகிறது?
  • பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தின் கடைசி முழு பட்ஜெட் இதுவாகும்.
Budget 2023: பட்ஜெட் உரையை தமிழில் எவ்வாறு டவுண்லோட் செய்வது? title=

பட்ஜெட் 2023: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி 11 மணிக்கு புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யத் தயாராக உள்ளார். அந்த வகையில் நிதியமைச்சர் சீதாராமனின் பட்ஜெட் 2023 உரையை நீங்கள் அதிகாரப்பூர்வ YouTube சேனலில் நேரடியாகக் காணலாம். அத்துடன் பட்ஜெட் 2023 தாக்கல் செய்யப்பட்டவுடன், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் முழு பட்ஜெட் உரையையும் நீங்கள் பட்ஜெட் 2023 இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ள முடியும்.

பட்ஜெட் 2023: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரையை எவ்வாறு டவுண்லோட் செய்வது

* முதலில் https://www.indiabudget.gov.in/ ஐப் பார்வையிடவும்
* பிறகு பட்ஜெட் உரையை கிளிக் செய்யவும்
* இப்போது பட்ஜெட் உரையை PDF வடிவில் பதிவிறக்கம் செய்யலாம்.

மேலும் படிக்க | பட்ஜெட்டுக்கு முன் ரூ.500 நோட்டு குறித்து ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்பு..!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் முழு பட்ஜெட் உரையைத் தவிர, www.indiabudget.gov.in ஆனது பட்ஜெட்டின் ஒரு பகுதியாக இருக்கும் 14 முக்கிய ஆவணங்களுக்கான அணுகலை வழங்கும், அதாவது ஆண்டு நிதி அறிக்கை (AFS), மானியங்களுக்கான கோரிக்கைகள் (DG), நிதி மசோதா, FRBM சட்டத்தின் கீழ் கட்டாயப்படுத்தப்பட்ட அறிக்கைகள், மேக்ரோ-பொருளாதார கட்டமைப்பு அறிக்கை, நடுத்தர கால நிதிக் கொள்கை மற்றும் நிதிக் கொள்கை உத்தி அறிக்கை, வரவு செலவுத் திட்டம், நிதி மசோதாவில் உள்ள விதிகளை விளக்கும் குறிப்பாணை, வெளியீட்டு விளைவு கண்காணிப்பு கட்டமைப்பு, பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள், பட்ஜெட் ஆவணங்களுக்கான திறவுகோல்.

அதேபோல் பொது மக்கள் பட்ஜெட் 2023 ஆவணங்களுக்கான அணுகலைப் பெறலாம் மற்றும் புதன்கிழமை பட்ஜெட் விளக்கத்திற்குப் பிறகு https://www.indiabudget.gov.in/ இல் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். மேலும் இன்று (புதன்கிழமை) தாக்கல் செய்யப்பட்ட பிறகு பட்ஜெட் உரை பிராந்திய மொழிகளில் கிடைக்கும்.

மேலும் படிக்க | Budget 2023: பட்ஜெட்டில் NRI-களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா நிதியமைச்சர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News