Adani: ஏறு முகத்தில் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு..!
Gautam Adani net worth: கௌதம் அதானியின் நிகர மதிப்பு ஹிண்டன்பெர்க் அறிக்கைக்குப் பிறகு தொடர்ந்து சரிந்து கொண்டே செல்கிறது. இதன் மூலம் அவரின் உலக பணக்காரர் இடமும் நாளுக்கு நாள் இறங்குமுகமாக இருக்கிறது.
ஜனவரி 24 அன்று வெளியிடப்பட்ட ஹிண்டன்பர்க் அறிக்கையின் காரணமாக, கௌதம் அதானியின் நிகர மதிப்பு ஒரு மாதத்தில் சுமார் 80 பில்லியன் டாலர்கள் குறைந்துள்ளது. உலக பணக்காரர்கள் பட்டியலிலும் அவர் நான்காவது இடத்தில் இருந்து முதல் 10 இடங்களில் இருந்து வெளியேறி டாப் 30ல் கூட இல்லாமல் இருந்தார்.
இருந்தபோதும் அவருக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக தினம் தினம் சரிந்து கொண்டிருந்த அவரின் பங்குகள் கடந்த புதன்கிழமை முதல் ஏற்றமடைய தொடங்கியது. இதனால் அவரின் நிகர சொத்து மதிப்பும் அதிகரிக்க தொடங்கியது. கடந்த 24 மணி நேரத்தில், அதானியின் நிகர மதிப்பு 2.19 பில்லியன் டாலர்கள் அதிகரித்து, பில்லியனர்கள் பட்டியலில் நான்கு இடங்கள் முன்னேறி 30வது இடத்தைப் பிடித்துள்ள்ளார்.
அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் அறிக்கை ஜனவரி 24, 2023 அன்று வெளியிடப்பட்டது. அந்த அறிக்கை வெளியான அடுத்த நாளிலிருந்தே கெளதம் அதானியின் மோசமான நாட்கள் தொடங்கியது. அப்போதிருந்து, அவரது நிகர மதிப்பு ஒரு மாதத்தில் 80 பில்லியன் டாலருக்கும் அதிகமாக குறைந்துள்ளது. இதற்கிடையில், பிப்ரவரி 28 செவ்வாய் அன்று, அவரது நிறுவனங்களின் பங்குகள் இறங்கு முகத்தில் இருந்து மீண்டும் ஏறு முகத்தை பார்க்க தொடங்கியது. இதனால் நிகர சொத்து மதிப்பு உயர்ந்து உலக பணக்காரர்கள் பட்டியலில் 34வது இடத்தில் இருந்த அவர் இப்போது 30வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
ஹிண்டன்பர்க் ஏற்படுத்திய சரிவு
ஹிண்டன்பர்க்கின் தாக்கத்தால், கௌதம் அதானியின் பங்குகளில் சுனாமி ஏற்பட்டது. அவர் தினமும் சுமார் $3 பில்லியன் இழப்பை சந்திக்க நேரிட்டது. பங்கு விலை வீழ்ச்சியால், அதானி குழுமத்தின் சந்தை மூலதனமும் 100 பில்லியன் டாலருக்கும் கீழ் சரிந்தது. இந்த அறிக்கையின் காரணமாக முதலீட்டாளர்களின் மனநிலையில் ஏற்பட்ட பாதகமான தாக்கம் DB Power, PTC இந்தியா மற்றும் ஓரியண்ட் சிமெண்ட் ஆகியவற்றுடனான ஒப்பந்தங்களை பறித்தது. இதுமட்டுமின்றி, அவர் தனது ரூ.20,000 கோடியை பொது சலுகையில் (FPO) திரும்பப் பெற வேண்டியிருந்தது.
மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு ஜாக்பாட்!! 4% அகவிலைப்படி அதிகரிப்பு!!
அதானியின் 5 பங்குகளில் அப்பர் சர்க்யூட்
புதன்கிழமை பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கியவுடன், அதானியின் பங்குகள் வேகம் அதிகரித்து, மதியம் 12.40 மணியளவில் ஐந்து பங்குகள் அப்பர் சர்க்யூட்டைத் தாக்கின. இதில் அதானி பவர், அஜானி கிரீன், அஜானி பில்மர், அதானி டிரான்ஸ்மிஷன் மற்றும் என்டிடிவி பங்குகள் அடங்கும். இது தவிர, அதானி எண்டர்பிரைசஸ் 11.73%, அதானி போர்ட்ஸ் 1.42%, அதானி டோட்டல் கேஸ் 3.37%, அம்புஜா சிமெண்ட்ஸ் லிமிடெட் 2.02%, ஏசிசி லிமிடெட் ஒரு சதவீதம் உயர்ந்தன.
MCap-ல் பங்குகள் வேகமாக வளரும்
மும்பை பங்குச் சந்தையின் (பிஎஸ்இ) தரவுகளின்படி, செவ்வாயன்று அதானி குழுமத்தின் சந்தை மூலதனத்தில் (அதானி குழுமம் MCap) சுமார் ரூ.30,000 கோடியைச் சேர்த்தது. அதன் மூலம் சந்தை மதிப்பு ரூ.7.1 லட்சம் கோடியை எட்டியது. குறிப்பிடத்தக்க வகையில், சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு, குழுவின் சந்தை மூலதனத்தில் இந்த பெரிய அதிகரிப்பு காணப்பட்டது. கடந்த காலத்தில் சந்தை மதிப்பில் ஏற்பட்ட வீழ்ச்சியைப் பார்த்தால், ஜனவரி 24 முதல் அதானி குழுமத்தின் மதிப்பு சுமார் ரூ.12 லட்சம் கோடி குறைந்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ