Old Pension Scheme: அரசு ஊழியர்களுக்கு அடிச்சது ஜாக்பாட், அடிப்படை ஊதியத்தில் 17% ஏற்றம்

Government Employees: கர்நாடகா மாநில ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் அளித்து, அடிப்படை ஊதியத்தை 17 சதவீதம் உயர்த்தி கர்நாடகா மாநில பொம்மை அரசு அறிவித்தது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 2, 2023, 12:47 PM IST
  • அடிப்படை ஊதியம் 17% உயர்த்தப்பட்டது.
  • இது தொடர்பான உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும்
  • பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்ற ஊழியர்களின் கோரிக்கையை பரிசீலிக்க அரசு சார்பில் குழு.
Old Pension Scheme: அரசு ஊழியர்களுக்கு அடிச்சது ஜாக்பாட், அடிப்படை ஊதியத்தில் 17% ஏற்றம் title=

அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரணம் குறித்து மோடி அமைச்சரவை புதன்கிழமை முடிவு செய்துள்ளது. ஆனால், இது தொடர்பாக அரசு தரப்பில் இன்னும் முறையான அறிவிப்பு வெளியாகவில்லை. எனினும், ஹோலி பண்டிகைக்கு முன்னதாக பிரதமர் மோடி இதை அறிவிப்பார் என்று நம்பப்படுகிறது. இதனிடையே, பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த அரசு ஊழியர்களின் கோரிக்கை அதிகரித்து வருகிறது. 

கர்நாடகாவில், மாநில அரசு ஊழியர் சங்கம் (KSGEA) தங்கள் கோரிக்கைகளுக்காக காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கியது. சில மணிநேரங்களில் அரசாங்கம் ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கியது.

நிதித்துறை அதிகாரிகளுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கியது

கர்நாடகா மாநில ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் அளித்து, அடிப்படை ஊதியத்தை 17 சதவீதம் உயர்த்தி கர்நாடகா மாநில பொம்மை அரசு அறிவித்தது. இது தவிர பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற ஊழியர்களின் கோரிக்கைக்கு அரசு பணிந்தது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்ற ஊழியர்களின் கோரிக்கையை பரிசீலிக்க அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டது. இது தொடர்பாக ஊழியர் தலைவர்களிடம் பேசிய பொம்மை அரசு, நிதித்துறை அதிகாரிகளுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கியது.

ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றனர்

ஊழியர்களின் அடிப்படை ஊதியம் 17 சதவீதம் உயர்த்தப்பட்டதை அடுத்து ஊழியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இது தொடர்பான உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும் என அம்மாநில முதல்வர் பொம்மை தெரிவித்துள்ளார். மற்ற காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து ஆய்வு செய்ய கூடுதல் தலைமைச் செயலாளர் (நிதி) தலைமையில் ஒரு குழு அமைக்கப்படும். இந்த குழு பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும்.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு ஜாக்பாட்!! 4% அகவிலைப்படி அதிகரிப்பு!!

பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த அறிக்கை இரண்டு மாதங்களில் பெறப்படும்

அரசு எடுத்த முடிவு குறித்து, ஊழியர் சங்கத் தலைவர் சி.எஸ்.ஷடாக்ஷரி, 'இந்த நடவடிக்கைக்காக அரசுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற முடிவு செய்துள்ளோம், அனைத்து ஊழியர்களும் பணிக்கு திரும்புவார்கள். பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிக்கை இரண்டு மாதங்களில் அரசிடம் இருந்து பெறப்படும்.' என்று கூறினார். ' பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை வைத்துள்ளோம். நாங்கள் வைத்த இரு கோரிக்கைகளையும் நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.' என அவர் மேலும் தெரிவித்தார்.

ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை 17 சதவீதம் உயர்த்தியதால், அரசுக்கு ரூ.12,000 கோடி கூடுதல் சுமை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அரசு ஊழியர்கள் நடத்திய போராட்டத்தினால் மாநிலத்தில் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தன. ஊழியர்கள் தாலுகா மற்றும் மாவட்ட தலைமையகங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதைக் காண முடிந்தது.

மேலும் படிக்க | DA Hike: மார்ச் மாதத்தில் அரசு ஊழியர்களுக்கு 42% DA உயர்வு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News