LPG price hike: 2014-ல் சிலிண்டர் விலை எவ்வளவு தெரியுமா? கிடுகிடுவென உயர்ந்திருச்சு..!
LPG price hike: விட்டு உபயோக சிலிண்டர் விலையை அண்மையில் உயர்த்தப்பட்டது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், 2014-க்கு முன்பாக சிலிண்டர் விலை எவ்வளவு இருந்தது என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் சிலிண்டர்களின் விலை ரூ.50 உயர்த்தப்பட்டது. 3 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் அதிகரிக்கப்பட்டிருக்கும் இந்த விலை உயர்வு மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சூழலில் 2014 ஆம் ஆண்டு முதல் இப்போது வரை பல முறை உயர்வு கண்டிருக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை குறித்த விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.
சிலிண்டர் விலை உயர்வு
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான விலைகளை எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சிலிண்டர்களின் விலையை நிர்ணயம் செய்து அறிவிக்கின்றன. அந்தவகையில் மார்ச் 1 ஆம் தேதி வெளியிடப்பட்ட விலைப் பட்டியலில் வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலை ரூ.50, வணிக சிலிண்டர்களின் விலை 350 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளன. இது மக்கள் மற்றும் கடை உரிமையாளர்களின் பட்ஜெட்டில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் படிக்க | SBI UPI: எஸ்பிஐ UPI பண பரிவர்த்தனை பிரச்சனைகளுக்கு தீர்வு இதோ..!
2014-ல் சிலிண்டர் விலை
தலைநகர் டெல்லியில் இப்போது வீட்டு உபயோக சிலிண்டர்கள் 1, 103 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இப்போது சிலிண்டர்களின் விலை சுமார் 693 ரூபாய் அதிகரித்துள்ளது. மார்ச் 1, 2014-ல் டெல்லியில் ஒரு சிலிண்டர் 410 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
சிலிண்டர் விலை அதிகரிப்பு விவரம்
* மார்ச்1, 2014 - ரூ 410.50
* மார்ச் 1, 2015 - ரூ 610
* மார்ச் 1, 2016 - ரூ 513.50
* மார்ச் 1, 2017 - ரூ 735.50
* மார்ச் 1, 2018 - ரூ 689
* மார்ச் 1, 2019 - ரூ 701.50
* மார்ச் 1, 2020 - ரூ 805.50
* மார்ச் 1, 2021 - ரூ 819
* மார்ச் 1, 2022 - ரூ 899
* மார்ச் 1, 2023 - ரூ 1103
சென்னையில் சிலிண்டர் விலை
சிலிண்டர்களின் விலை ஏற்றத்துக்கு முன்பு வீட்டு உபயோக சிலிண்டர்கள் சென்னையில் ரூ.1068.50 விற்பனை செய்யப்பட்டது. இப்போது, அதாவது விலை அதிகரிப்பு பின்னர் ரூ. 1118.50 விற்பனை செய்யப்படுகிறது. வணிக சிலிண்டர் பொறுத்தவரை சென்னையில் 1,917 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் விலை ஏற்றத்துக்குப் பிறகு 2,268 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மும்பையில் 1052 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வீட்டு உபயோக சிலிண்டர் இப்போது 1102 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கொல்கத்தாவில் 1079 ரூபாய்க்கு விற்பனையான வீட்டு உபயோக சிலிண்டர் 1129 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
மேலும் | அடேங்கப்பா..இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி, சிலிண்டர் விலை உயர்வு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ