புதுடெல்லி: நீங்கள் பணம் சம்பாதிக்க ரயில்வே சிறந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது. ரயில்வே அமைச்சகம் (Indian Railways)) தனியார் மற்றும் முதலீட்டின் மூலம் ரயில் நிலையங்களில் "குட்ஸ் ஷெட் டெவலப்மெண்ட் கொளகையை" வெளியிட்டுள்ளது. இந்தக் கொள்கையின் கீழ், ரயில் நிலையத்திற்கு அருகில் ஒரு சிறிய கேண்டீன், தேநீர் கடை அமைப்பதன் மூலம் நல்ல பணம் சம்பாதிக்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரயில்வே அமைச்சகத்தின் "சரக்கு ரயில்களுக்கான கொட்டகைகளை அதாவது, ஷெட்களை மேம்படுத்தும் கொள்கையின்" கீழ், புதிய சரக்குக் கொட்டகைகள் கட்டப்பட்டு, பழைய சரக்கு கொட்டகைகள் தனியார் அமைப்பின் உதவியுடன் மேம்படுத்தப்படும். இது தவிர, தற்போதுள்ள கொட்டகைகளை மேம்படுத்துவதன் மூலம்  முனையத்தின் திறனை அதிகரிப்பதே இலக்கு. ரயில்வேயின் இந்த திட்டத்தின் கீழ் முதலீடு செய்வதன் மூலம் நீங்களும் ஒரு பெரிய வருமானத்தை ஈட்ட முடியும்.


ரயில்வேயின் இந்த திட்டத்தின் கீழ், சாலையோரத்தில் உள்ள ரயில் நிலையத்தில் ஒரு சரக்குக் கொட்டகையை  மேம்படுத்த நீங்கள் உதவி செய்தால், ரயில்வே உங்களுக்கு சிறிய கேன்டீன்கள், தேநீர் கடைகள், விளம்பரங்கள் ஆகியவற்றை நிலையத்தைச் சுற்றி வைக்க வசதியை வழங்கும், இதன் மூலம்  நீங்கள் நன்றாக சம்பாதிக்கலாம்.


மேலும் படிக்க | தீராத பண பிரச்சனையா...கவலை வேண்டாம்.. இந்த நான்கு விஷயங்களை கடைபிடித்தால் போதும் ..!!!


இது தவிர, தனியார் துறையினர், பொருட்களை ஏற்றுதல் / இறக்குதல் போன்ற பணிகள், பணியாளர்களுக்கான வசதிகள், இணைப்பு சாலைகள், மூடப்பட்ட கொட்டகைகள் மற்றும் பிற தொடர்புடைய உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் போன்ற சேவைகள் மற்றும் பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். இந்த வசதிகளை மேம்படுத்த  தனியார் தங்கள் பணத்தை செலவிட வேண்டியிருக்கும். இவை அனைத்தும் ரயில்வேயில் ஒப்புதலில் பேரில் மேற்கொள்ளப்படும்.


ரயில்வே தனியாரிடமிருந்து  எந்தவிதமான துறைசார் கட்டணத்தையும்  வசூலிக்காது. தனியார் துறையினாரால் உருவாக்கப்பட்ட வசதிகள் பொதுவான பயனரின் வசதிக்காக பயன்படுத்தப்படும்.


ALSO READ | மின்சார கட்டணம் முதல் FD வரை.. ICICI வங்கியின் அசத்தல் WhatsApp சேவை..!!!


ஐ.ஆர்.சி.டி.சியைப் (IRCTC) பொறுத்தவரை, இ-டிக்கெட்டிங் மீதான சேவை வரி என்பது வருவாயின் முக்கிய ஆதாரமாகும். பண மதிப்பிழப்பு பின்னர் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக இதில் வருமானம் இல்லை. மேலும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் சேவைக் கட்டணத்தை வசூலிப்பதை  நிறுத்தியது.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYe