ரேஷன் கார்டு என்பது அரசாங்கத்தின் இலவச ரேஷனைப் பெறுவதற்கான ஒரு ஆவணமாகும். இந்த அட்டையில் உங்கள் தவறான எண் பதிவு செய்யப்பட்டிருந்தால் அல்லது பழைய எண் கொடுக்கப்பட்டிருந்தால், உங்களுக்கு சிக்கல் ஏற்படலாம். எனவே, உங்கள் ரேஷன் கார்டில் உள்ள மொபைல் எண்ணை உடனடியாக புதுப்பிக்க வேண்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மொபைல் எண்ணைப் புதுப்பிப்பது மிகவும் எளிதானது. இந்த வேலையை நீங்கள் வீட்டில் உட்கார்ந்து கொண்டே செய்யலாம். உங்கள் ரேஷன் அட்டையில் (Ration Card)  பழைய எண் கொடுக்கப்பட்டிருந்தால், அதனை மாற்றுவது முக்கியம். அப்படி மாற்றவில்லை என்றால்,  ரேஷன் கார்டு தொடர்பாக உங்களுக்கு அனுப்பப்படும் தகவல்கள் உங்களை வந்து சேராது.  


ALSO READ இனி விமான பயணம் போல், ரயில் பயணத்திலும் லக்கேஜ்ஜை தூக்காமல் ஜாலியாக பயணிக்கலாம்..!!!


ரேஷன் கார்டில் மொபைல் எண்ணை எவ்வாறு புதுப்பிப்பது அல்லது மாற்றுவது


  • அதற்கு நீங்கள் முதலில் https://nfs.delhi.gov.in/Citizen/UpdateMobileNumber.aspx. என்ற வலை தளத்திற்கு செல்ல வேண்டும்.

  • அதில் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைப் புதுப்பிக்க Your Registered Mobile Number  என்ற எழுத்தப்பட்டிருப்பதை பார்க்கலாம்.

  • அதன் கீழே உள்ள வரிசையில், கேட்கப்பட்ட தகவல்களை நிரப்ப வேண்டும்.

  • இங்கே முதல் வரிசையில் வீட்டுத் தலைவரின் ஆதார் எண் / என்.எஃப்.எஸ் ஐடி (Aadhar Number of Head of Household/NFS ID) விபரங்களை எழுத வேண்டும்.

  • இரண்டாவது வரிசையில் ரேஷன் கார்டு எண்ணை (Ration card No) எழுத வேண்டும்.

  • வீட்டின் தலைவரின் பெயர் (Name of Head of HouseHold) மூன்றாவது பத்தியில் எழுதப்படும்.

  • கடைசி பத்தியில் உங்கள் புதிய மொபைல் எண்ணை எழுத வேண்டும்.

  • இப்போது சேமி (Save) என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.


நாட்டில் ஜூன் 1 முதல், ரேஷன் கார்டு போர்டபிளிட்டி சேவையான 'ஒன் நேஷன்-ஒன் ரேஷன் கார்டு' (One nation One Card) 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது நீங்கள் இந்த திட்டத்தின் கீழ் எந்த மாநிலத்திலும் ரேஷன் வாங்கலாம். இந்த திட்டம் ஏற்கனவே, தமிழ்நாடு (Tamilnadu), ஆந்திரா, தெலுங்கானா, குஜராத், மகாராஷ்டிரா, ஹரியானா, ராஜஸ்தான், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், கோவா, ஜார்கண்ட், திரிபுரா, பீகார், உத்தரப்பிரதேசம், பஞ்சாப் இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது.


ALSO READ | Good News: கிரெடிட் கார்டுகளுக்கும் வட்டிக்கு வட்டி தள்ளுபடி திட்டம் பொருந்தும்..!!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR