கொரோனாவால் பொருளாதாரம் முடங்கி போன நிலையில், நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் விதமாக, மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான கடன்களுக்கு வட்டி மீதான வட்டியை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
2 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு இந்த சலுகை திட்டம் பொருந்தும். இதில் கிரெடிட் கார்டு நிலுவைத் தொகைக்கான வட்டிக்கான சலுகையும் அடங்கும். கடன் சலுகை திட்டத்தை (Loan Moratorium) நீங்கள் பயன்படுத்தி இருந்தாலும் இல்லாவிட்டாலும், கடன் வாங்கியவர்கள் அனைவருக்கும் இந்த திட்டத்தின் பலன் கிடைக்கும். இந்த திட்டத்தின் காரணமாக, அரசு 6,500 கோடி ரூபாய் அளசிற்கு நிதி சுமை அதிகரிக்கும்.
கிரெடிட் கார்டு நிலுவை தொகையில், 2020 மார்ச் 1 முதல் 2020 ஆகஸ்ட் 31 வரையிலான காலகட்டத்திற்கு, ஈ.எம்.ஐ அடிப்படையில் நிதி பரிவர்த்தனைகளுக்கான சராசரி வட்டி விகிதத்தின் (Weighted Average Lending Rate -WALR ) அடிப்படையில், வாடிக்கையாளர்களிடமிருந்து வட்டி வசூலிக்கப்படும். MSME, கல்வி, வீட்டுவசதி பொருட்கள், கிரெடிட் கார்டு நிலுவை தொகைகள், ஆட்டோ, தனிநபர் மற்றும் நுகர்வு கடன்கள் ஆகியவை இந்த சலுகை திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையில் WALR கணக்கீட்டை, சம்பந்தப்பட்ட கிரெடிட் கார்ட் நிறுவனத்தின் சட்டரீதியான தணிக்கையாளர் சான்றழிப்பார்.
பொதுவாக கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனம் நிதியளிக்க வட்டி வீத வரம்பை நம்பியுள்ளது. தற்போது, கிரெடிட் கார்டு நிறுவனங்கள் WALR முக்கிய விகிதமாக கருதப்படும். இது குறித்த தகவல்களை அரசாங்கம் வழங்கியுள்ளது. கிரெடிட் கார்டுகள் உட்பட மற்ற அனைத்து வகையான கடன்களுக்கும் 2020 பிப்ரவரி 29 வரை நிலுவைத் தொகையில் வட்டி கணக்கிடப்படும்.
கடன் தவணை சலுகை திட்டம் அறிவிக்கப்பட்ட, இந்த 6 மாத காலத்திற்குள் செலுத்தப்பட்ட கடன்களுக்கு, அந்த குறிப்பிட்ட காலத்திற்கான எளிய வட்டி மற்றும் கூட்டு வட்டிக்கு இடையேயான வித்தியாசத்தை வங்கிகள், நிதி நிறுவனங்கள் கடன் வாங்கியோருக்கு திருப்பிச் செலுத்திவிட வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடன் வழங்கும் நிறுவனம் ஒட்டுமொத்த வட்டி மற்றும் கடன் கணக்கில் எளிய வட்டி ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசத்தை கேஷ்பேக்காக வழங்கும்.
பணத்தை டெபாசிட் செய்த பிறகு, கடன் வழங்கும் நிறுவனங்கள் மத்திய அரசிடமிருந்து இழப்பீடு கோரும். வட்டி தள்ளுபடி செய்ய நவம்பர் 5 ஆம் தேதி காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2 கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு இந்த திட்டத்தின் பலன் கிடைக்காது. மேலும் பிப்ரவரி மாதம் வரை தப்பாமல் கடன் தவணை செலுத்தியவர்களுக்கே இது பொருந்தும். அதாவது NPA இருக்கக்கூடாது.
நீங்கள் உரிய தேதியில் பணம் செலுத்தவில்லை என்றால், குறைந்தபட்ச கட்டணத்தையாவது செலுத்த வேண்டும். உரிய தேதியில் கட்டணம் செலுத்தவில்லை என்றால், கட்டணம் கணிசமாக நீங்கள் வட்டி மற்றும் அபராதம் இரண்டையும் செலுத்த வேண்டும். இது மட்டுமல்லாமல், தள்ளுபடி வட்டியின் பலனையும் பெற முடியாமல் போய்விடும். நீங்கள் உடனடியாக முழு பணத்தையும் செலுத்த முடியாவிட்டால், நீங்கள் குறைந்தபட்ச தொகையை செலுத்த வேண்டும். கிரெடிட் கார்டு உரிய நேரத்தில் செலுத்தவில்லை என்றால், நிலுவைத் தொகையில் 36-42% வட்டி செலுத்த வேண்இய நிலை ஏற்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.