புதுடெல்லி: நாட்டின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான ஏர்டெல் ஒரு சிறந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதில் உங்கள் முழு குடும்பத்திற்கும் சேர்த்து ஒரே ஒரு கட்டணம் செலுத்தினால் போதும். இது ஒரு பேமலி ப்ளான்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏர்டெல்லின் போஸ்ட்பெய்ட் திட்டம் ரூ.939 இல் தொடங்குகிறது. 500 ஜிபி வரையிலான தரவு, ஓடிடி சந்தா மற்றும் கூடுதல் இணைப்பு போன்ற வசதிகள் இதில் அடங்கும். உங்கள் குடும்பம் முழுவதிற்கும் ஒரு மலிவான போஸ்ட்பெய்ட் திட்டத்தை பெற,  ஏர்டெல்லின் Me & My Family ப்ளான் உங்களுக்கு மிகவும் அருமையான திட்டமாக இருக்கும் எனலாம். 


ஏர்டெல்லின் பேமலி ப்ளான்களின் ரூ .749, ரூ .999 மற்றும் ரூ .1,599 ஆகிய கட்டணங்களில் பெறலாம்.  உண்மையில், நீங்கள் ஒரு எளிய போஸ்ட்பெய்ட் திட்டத்தில் கூடுதல் இணைப்பை பெற கட்டணம் ரூ.299 . இதேபோல், Data Add on பெற மாதத்திற்கு 99 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.


அதே நேரத்தில், Me & My Family திட்டத்தில் ஏர்டெல்லின் போஸ்ட்பெய்ட் ரூ .749  திட்டத்தில், பாரதி ஏர்டெல்லின் இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் இரண்டு இலவச கூடுதல் இணைப்புகள் கிடைக்கின்றன. இந்தத் திட்டதில் ஒரு மாதத்திற்கு 125 ஜிபி டேட்டா கிடைக்கும், அதனுடன் டேட்டா ரோல்ஓவர் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதில், அனைத்து நெட்வொர்க்குளுக்கும் வரம்பற்ற அழைப்பு மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் அனுப்பலாம்.


ஏர்டெல்லின் Data Add on ப்ளான்


இது நிறுவனத்தின் பிரீமியம் போஸ்ட்பெய்ட் திட்டமாகும், இதில் 500 ஜிபி தரவு கிடைக்கிறது, இதில் பயன்படுத்தாத (200 ஜிபி வரை) அடுத்த மாதம் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில், அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற அழைப்பு, 100 எஸ்எம்எஸ் மற்றும் 200 ஐஎஸ்டி நிமிடங்கள் கிடைக்கும். ஹேண்ட்செட் பாதுகாப்பு, Airtel Xtream செயலி, Shaw Academy லைஃப் டைம் பயன்பாடு, Disney + Hotstar  சந்தா மற்றும் அமேசான் பிரைம் 1 ஆண்டு சந்தா  ஆகியவை கிடைக்கும். மூன்று திட்டங்களிலும் இந்த சலுகை உண்டு என்பது கவனிக்கத்தக்கது.


ALSO READ | Alert: மிக ஆபத்தான 8 App; இவை மொபைலில் இருந்தால் கணக்கில் பணம் காலியாகலாம்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR