பான் அட்டை  (Permanent Account Number - PAN) மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். ஒரு நபரின் பான் அட்டை தொலைந்துவிட்டால் அல்லது சேதமடைந்து விட்டால், முக்கியமான பல பணிகளை நின்று விடும் வாய்ப்பு உள்ளது. ஏனென்றால், பான் என்பது நிதி பரிவர்த்தனையிலும் பயன்படுத்தப்படும் முக்கிய ஆவணம்.ஆனால், பான் கார்டு தொலைந்து விட்டால் என்ன செய்வது. கவலைப்பட வேண்டாம், ஒரு சுலபமான வழி இருக்கிறது. வருமான வரித் துறையிலிருந்து  டூப்ளிகேட் பான் அட்டையை எளிதில் பெறலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வங்கிக் கணக்கு தொடங்க, வருமான வரித் தாக்கல் செய்ய, முதலீடு செய்ய, சொத்து வாங்க, என பல்வேறு விஷயங்களுக்கு பான் கார்டு முக்கியமானது. ஆனால், உங்கள் பான் கார்டு தொலைந்துவிட்டாலோ அல்லது  சேதமடைந்து விட்டாலோ, பதற வேண்டாம். வெறும் 50 ரூபாய்க்கு நகல் பான் கார்டை உங்கள் வீட்டில் இருந்த படியே பெற்றுக் கொள்ளலாம். இதற்கு விண்ணப்பிக்கும் செயல்முறை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.


டூப்ளிகேட் பான் கார்ட்


பண பரிவர்த்தனைகள் சம்பந்தப்பட்ட எல்லா இடங்களிலும் அரசாங்கம் பான் கார்டு (PAN CARD) ஆதாரத்தை கோருகிறது. முதலீடுகள், சொத்து வாங்குதல் போன்றவற்றின் போது இது ஆவணச் சான்றாகவும் பயன்படுத்தப்படுகிறது. எனவே பான் கார்டு வைத்திருப்பது மிகவும் முக்கியம். பான் கார்டை நீண்ட காலம் பயன்படுத்திய நிலையில், அது சேதமடையலாம். அல்லது சில சமயங்களில் தொலைந்து போகலாம். இது உங்களுக்கு நடந்திருந்தால், கவலைப்பட வேண்டாம். டூப்ளிகேட் பான் கார்டை எளிதாகப் பெறலாம். இதற்கு நீங்கள் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். நீங்கள் அதற்கான செயல்முறையை முடித்ததும், பான் கார்டு உங்கள் வீட்டிற்கே டெலிவரி செய்யப்படும்.


பான் கார்டு பெற செலுத்த வேண்டிய கட்டணம்


பல முறை உள்ளூர் கடைக்காரர்கள் டூப்ளிகேட் பான் கார்டை அச்சடிக்க ரூ. 100 முதல் ரூ. 200 வரை கேட்கிறார்கள், ஆனால் NSDL இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் ரூ. 50 செலுத்தி மீண்டும் PAN கார்டை பெற்றுக் கொள்ளலாம். டூப்ளிகேட் அட்டையை எப்படிப் பெறுவது என்பதை பார்க்கலாம்.


மேலும் படிக்க | வீட்டில் இதற்கு மேல் பணம் இருந்தால் 137% அபராதம்: வருமான வரி விதியை தெரிந்துகொள்ளுங்கள்


டூப்ளிகேட் பான் கார்டை பெறும் வழிமுறை


1. கூகுளில் சென்று Reprint PAN Card என தேடவும்.


2. NSDL இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நீங்கள் PAN அட்டையை மீண்டும் அச்சிடுவதற்கான விருப்பத்தைப் பெறுவீர்கள். அதை கிளிக் செய்யவும்.


3. இணையதளத்தைப் பார்வையிட்டு, உங்கள் பான் கார்டு எண், ஆதார் எண், பிறந்த தேதி மற்றும் கேப்ட்சா குறியீடு போன்ற விவரங்களை உள்ளிடவும்.


4. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்று சமர்ப்பிக்கவும்.


5. உங்கள் முன் ஒரு பக்கம் திரையில் தோன்றும், அதில் உங்கள் பான் கார்டு தொடர்பான அனைத்து தகவல்களும் இருக்கும். மேலும் தொடர்வதற்கு முன் அதைச் சரிபார்க்கவும்.


6. சரிபார்க்கப்பட்டதும், கோரிக்கை OTP என்பதைக் கிளிக் செய்யவும்.


7. உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP வரும், அதை உள்ளிடவும்.


8. தளம் OTP சரிபார்ப்பைக் கேட்கும், அதைச் செய்யுங்கள்.


9. புதிய பான் கார்டு பெற ரூ.50 கட்டணம் செலுத்துங்கள்.


10. பான் கார்டு கட்டணத்தைச் செலுத்த நீங்கள் நெட் பேங்கிங் அல்லது UPI ஐப் பயன்படுத்தலாம்.


11. பணம் செலுத்திய பிறகு, உங்களின் நகல் பான் கார்டு 7 நாட்களுக்குள் டெலிவரி செய்யப்படும்.


மேலும் படிக்க | ஓய்வுக்குப் பிறகு டென்ஷன் இல்லாம இருக்கணுமா... ‘இவற்றில்’ முதலீடு செய்யுங்க!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ