உங்கள் பான் கார்டு ஒரிஜினலா என்பதை செக் செய்வது எப்படி: ஆதார் அட்டையைப் (Aadhaar Card) போலவே, அனைத்து இந்திய குடிமக்களும் பான் கார்டு (PAN Card) வைத்திருக்க வேண்டும். வரி மற்றும் நிதி தொடர்பான பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் முக்கியமான ஆவணங்களில் இதுவும் ஒன்றாகும். நிரந்தர கணக்கு எண் அதாவது பான் கார்டு வருமான வரித்துறையால் வரிவிதிப்பு மற்றும் பிற அடையாள நோக்கங்களுக்காக வழங்கப்படுகிறது. நிதி நடவடிக்கைகளை கண்காணிக்கவும் பான் கார்டு பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மக்களின் வரி ஏய்ப்பு மற்றும் நிதி நடவடிக்கைகளை அரசு எளிதாகக் கண்டறிய முடியும்.
இதனிடையே தற்போது அதிகரித்து வரும் மோசடி வழக்குகளில் போலி பான் கார்டும் சேர்க்கப்பட்டுள்ளது. கொரோனா நெருக்கடி காலகட்டத்தில் போலி பான் கார்டுகளின் (Fake PAN Card) எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவிட்டது. எனவே, பான் கார்டு உண்மையானதா அல்லது பொய்யானதா (How To Identify Your Pan Card Is Fake Or Real) என்பதை சரிபார்த்து தெரிந்துகொள்வது மிக முக்கியம். எனவே, நீங்கள் பயன்படுத்தும் பான் கார்டு உண்மையானதா அல்லது போலியானதா என்பதை எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் தெரிந்துகொள்ளலாம். அதன் விரிவான விவரத்தை இந்த கட்டுரை மூலம் அறிந்துக்கொள்வோம்.
மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு என்ஜாய்மெண்ட்.. ரயில்வே வெளியிட்ட ஜாக்பாட் டூர் பிளான்
பான் கார்டு போலியா உண்மையானதா என்பதை தெரிந்துகொள்வது எப்படி?
* உங்கள் பான் கார்டின் நம்பகத்தன்மையை அறிய, முதலில் வருமான வரித் துறையின் "www.incometax.gov.in/iec/foportal" இ-ஃபில்லிங் (Income Tax) போர்ட்டலுக்குச் செல்ல வேண்டும்.
* இதன் பிறகு இந்த இ-ஃபில்லிங் போர்ட்டலில் Verify your PAN என்ற ஆப்ஷன் தோன்றும், அதைத் தேர்ந்தெடுக்கவும்.
* இப்போது ஒரு புதிய பக்கம் திறக்கும், அதில் சில விவரங்கள் கேட்கப்படும்.
* கேட்கப்பட்ட அனைத்து தகவல்களையும் நிரப்பவும்.
* உங்கள் பெயர், தொலைபேசி எண், பிறந்த தேதி போன்ற விவரங்களை நிரப்பவும்.
* இதன் பிறகு உங்களின் தொலைபேசி எண்ணில் ஒரு செய்தி வரும், அதில் சில விவரங்கள் இருக்கும்.
* அந்தத் தகவல் நீங்கள் உள்ளிட்ட விவரங்களுடன் பொருந்தினால், உங்களின் பான் கார்டு உண்மையாதா அள்ளது பொய்யானதா என்பதை தெரிந்துகொள்ளலாம்.
இந்நிலையில் நீங்கள் உள்ளிட்ட விவரங்களுடன் இந்தத் தகவல் பொருந்தவில்லை என்றால், நீங்கள் போலி பான் கார்டைப் பயன்படுத்துகிறீர்கள் என்று அர்த்தம். அத்தகைய சூழ்நிலையில், உங்களுக்கு பிரச்சனை அதிகரிக்கலாம். இதற்கு நீங்கள் வருமான வரித்துறையை தொடர்பு கொள்ள வேண்டும் அல்லது அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று புகார் அளிக்க வேண்டும்.
70 கோடிக்கும் அதிகமான பான் கார்டு பயனர்கள்:
இதனிடையே தற்போது இந்தியாவில் சுமார் 70 கோடி பான் கார்டு பயனர்கள் உள்ளனர், அவர்களில் 57 கோடி பேர் தங்களது பான் கார்டை ஆதாருடன் இணைத்துள்ளனர். ஆனால் இன்னும் 12 கோடி பேர் இந்த செயல்முறையை முடிக்க முடியாமல் உள்ளனர். அந்த 12 கோடியில் 11.5 கோடி பான் கார்டுகள் அரசால் முடக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு, ஆன்மீகம், வணிகம் என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ