புதிய ஊதிய விதிகள் உங்கள் சம்பளத்தில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன..!!
புதிய ஊதியக் விதிகள் தொடர்பான 2021 மசோதா அமல்படுத்தப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம், வருங்கால வைப்பு நிதி மற்றும் கிராச்சுட்டி ஆகியவற்றில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.
புதிய ஊதியக் விதிகளுக்கான 2021 ஏப்ரல் 1, முதல் மத்திய அரசு அமல்படுத்தும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். ஊதியக் விதிகள் 2019 டிசம்பரில் நிறைவேற்றப்பட்டாலும், அரசாங்கம் அதனை அமல்படுத்தவில்லை. இந்த விதிகளை தொழில்துறை உறவுகள், சமூக பாதுகாப்பு மற்றும் தொழில்சார் சுகாதார பாதுகாப்பு மற்றும் பணியிட சூழ்நிலைகள் ஆகிய மூன்று நெறிமுறைகளுடன் இதை அமல்படுத்த விரும்பியதால், புதிய ஊதியக் விதிகளை அமல்படுத்துவதை ஒத்தி வைத்திருந்தது.
புதிய ஊதியக் விதிகள் மற்றும் அதனால் ஊழியர்கள் மற்றும் முதலாளிகளுக்கு ஏற்படும் தாக்கங்கள் என்ன என்பதைப் பார்க்கலாம்.
2021 புதிய ஊதிய விதிகளுக்கான மசோதா, மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம், வருங்கால வைப்பு நிதி மற்றும் கிராச்சுட்டி ஆகியவற்றில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.
ALSO READ | NOTA-விற்கு அதிக வாக்குகள் கிடைத்தால்... மத்திய அரசிடம் பதிலை கோரியது SC..!!!
புதிய ஊதிய விதிகளின் காரணமாக கிராச்சுட்டி கொடுப்பனவுகள் அதிகரிப்பதோடு அவர்களின் ஓய்வூதிய நிதிக்கான முதலாளிகளின் பங்களிப்பும் அதிகரிக்கும்ம்
பல தனியார் நிறுவனங்கள் வருங்கால வைப்பு நிதிக்காம பங்களிப்பை குறைவாக கொடுக்கும் நோக்கில், மொத்த சம்பளத்தில் கொடுப்பனவுகளை அதிகமாகவும், அடிப்படை சம்பளத்தை குறைவாகவும் கொடுக்கின்றன. புதிய விதிகளின் கீழ் இது அனுமதிக்கப்படாது.
புதிய ஊதிய விதிகளின் மசோதாவில் உள்ள விதிகளின் படி , ஒரு ஊழியரின் மாதாந்திர அடிப்படை சம்பளம் நிகர சம்பளத்தில் (CTC) 50 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கக்கூடாது.
தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்திலும் இது தாக்கத்தை ஏற்படுத்தும். தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களில் பெரும்பாலோருக்கும் ஏப்ரல் மாதத்திலிருந்து அவர்களின் டேக் ஹோம் சாலரி அளவு, அதாவது கையில் கிடைக்கும் சம்பளத்தின் அளவு குறைவாகலாம்.
புதிய தொழிலாளர் விதிகள், தொழில் துறை ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல், முறைசாரா துறையில் உள்ள ஊழியர்களுக்கும் சமூக பாதுகாப்பை வழங்கும்.
ALSO READ | 2000 ரூபாய் நோட்டு இன்னும் அச்சிடப்படுகிறதா.. மத்திய அரசு கூறியது என்ன..!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR