வருகிறது புதிய விதி! இனி வங்கிகள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும்!
Bank Latest News In Tamil: இனி வாரத்தில் 5 நாட்கள் வங்கிகள் செயல்படும் மற்றும் 2 நாட்கள் விடுமுறை எனக் தகவல் வெளியாகி உள்ளது. வங்கிகளின் புதிய கால அட்டவணையை தெரிந்து கொள்ளுங்கள்
5 Day Working For Banks: வங்கித் துறையில் விரைவில் பெரிய மாற்றங்களைக் காணலாம். வங்கிகளுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலைநாட்கள் இருக்க வேண்டும் என்ற விவாதம் மீண்டும் தொடங்கியுள்ளது. இது வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்குமா? வாடிக்கையாளர்கள் வங்கிச் சேவை நேரம் அதிகரிக்குமா? என்ற விவரங்களை பார்ப்போம்.
வங்கிகள் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டும் செயல்படும்?
வங்கிகளில் ஐந்து வேலை நாட்கள் என்ற கோரிக்கை வங்கி ஊழியர்களுக்கும் இந்திய வங்கிகள் கூட்டமைப்புக்கும் (ஐபிஏ) இடையே நீண்ட காலமாக விவாதத்தில் இருந்தது. இந்த கோரிக்கையை ஏற்று ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இப்போது ஊழியர் சங்கங்களுக்கும் வங்கிக் கூட்டமைப்புக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இருப்பினும், இந்த விதியை அமல்படுத்த அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் இன்னும் நிலுவையில் உள்ளது. புத்தாண்டு தொடக்கத்தில் அதை மத்திய அரசு அமல்படுத்தலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
வங்கிகள் செயல்படும் நேரம் மாற்றப்படும்?
ஒருவேளை இந்த முடிவு அமல்படுத்தப்பட்டால், வங்கிகளின் வேலை நேரம் மாறும். தற்போது வங்கிகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கிறது. புதிய விதிகளின்படி, வங்கிகள் காலை 9:45 மணிக்கு திறக்கப்பட்டு மாலை 5:30 மணிக்கு மூடப்படும். இதன் மூலம், வங்கி ஊழியர்கள் தினமும் 45 நிமிடங்கள் கூடுதலாக வேலை செய்ய வேண்டும். ஆனால் வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை கிடைக்கும்.
வங்கி விடுமுறை புதிய விதி.. ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளிக்குமா?
இந்த மாற்றம் வங்கி ஊழியர்களுக்கு சாதகமாக இருக்கும். ஏனெனில் அவர்களுக்கு அதிக விடுமுறை கிடைக்கும் மற்றும் அவர்களின் வேலை மற்றும் வாழ்க்கை சமநிலை சிறப்பாக இருக்கும். வாடிக்கையாளர்களுக்கு வங்கிச் சேவைகளும் அதிக நேரம் கிடைக்கும்.
இந்த விதி இந்தியாவின் அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளுக்கும் பொருந்தும். இருப்பினும், அதை செயல்படுத்துவதற்கு முன், ஆர்பிஐ (RBI) இன் ஒப்புதல் அவசியம். ஏனென்றால் வங்கி நடவடிக்கை விதிகள் மற்றும் ஒழுங்குமுறை செயல்பாடுகள் மீது ரிசர்வ் வங்கி நேரடி கட்டுப்பாட்டைக் கொண்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது, நான்காவது சனிக்கிழமை விடுமுறை
அதேபோல் 2015 ஆம் ஆண்டு வங்கித் துறையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. மத்திய அரசாங்கமும் ரிசர்வ் வங்கியும் இணைந்து ஒவ்வொரு இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கும் விதியை அமல்படுத்தியது. அதைப்போல தற்போது ஐந்து நாட்கள் வேலை மற்றும் இரண்டு நாட்கள் விடுமுறை என்ற விதி முன்மொழியப்பட்டு உள்ளது.
வங்கி விடுமுறை புதிய விதி எப்போது அமலுக்கு வரும்?
இந்த விதியை அமல்படுத்த, அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் தேவை. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இது நடைமுறைக்கு வரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
வங்கி விடுமுறை புதிய விதி அனைத்து வங்கிகளுக்கும் பொருந்துமா?
ஆம், இந்த விதி அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளுக்கும் பொருந்தும்.
புதிய விதிப்படி வங்கி நேரத்தில் என்ன மாற்றம் இருக்கும்?
புதிய விதிகளின்படி, வங்கிகள் காலை 9:45 முதல் மாலை 5:30 மணி வரை செயல்படும்.
வங்கி விடுமுறை புதிய விதியால் வாடிக்கையாளர்கள் பயனடைவார்களா?
ஆம், வாடிக்கையாளர்கள் வங்கிச் சேவைகளுக்கு அதிக நேரத்தைப் பெறுவார்கள் மற்றும் விடுமுறை நாட்களை முன்கூட்டியே அறிந்து கொள்வார்கள். ஐந்து வேலை நாட்கள் கொண்ட இந்தத் திட்டம் வங்கி ஊழியர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும், திட்டத்தை இறுதி செய்வதில் அரசின் ஒப்புதல் மற்றும் ரிசர்வ் வங்கியின் ஆதரவு முக்கியமானது.
மேலும் படிக்க - குறைந்த சம்பளம் வாங்கினாலும் இந்த வங்கிகள் உங்களுக்கு லோன் தருகின்றன!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ