அசுர வேகத்தில் யூபிஐ தேவை அதிகரித்துவிட்டது. சர்வதேச நாடுகளில் விரிவடைந்து வரும் யுபிஐ மூலப்பொருளாக விளங்குகிறது. டீ கடையில் டீ குடித்தாலும் இணையம் பேமெண்ட் என்ற நிலைக்கு மக்கள் மாறிவிட்டனர்.
இந்தியாவில் யூபிஐ பண பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தற்போது புதிதாக ஒரு வசதியும் வந்துவிட்டது. இது நாள்தோறும் பணப்பரிவர்த்தனையில் ஈடுபடும் நபர்களுக்கு மிகவும் சுலபமான ஒன்றாக அமைந்தன.வளர்ந்து வரும் பொருளாதாரத்தின் அடிப்படையில் பல்வேறு சேவைகள் நவீன மயமாக்கப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டு அரசு பல்வேறு புதிய திட்டங்கள் அமல்படுத்தி மக்களின் சேவைகளை எளிதாக்கியது. இந்த நிலையில் யுபிஐ லைட் பயன்படுத்தும் வாடிக்கையாளரின் சேவையில் ஏற்படும் சிரமத்தைக் கண்டு யுபிஐ சேவையை எளிதாக்கியது.
யுபிஐ ஒருவிதத்தில் உபயோகமாக இருந்தாலும் இதில் பல்வேறு சிக்கல்கள் மற்றும் மோசடிகள் நிறைந்துவிட்டன.
இணைய வசதி இல்லாத இடங்களில் யுபிஐ சேவை செயல்பட மக்களுக்காகக் கொண்டுவரப்பட்ட ஒரு எளிய வசதியானது.
மக்கள் தங்களின் பணத்தை இணையம் உதவி இல்லாமலும் பயன்படுத்தலாம் என்று சமீபத்தில் ஒரு தகவல் சொல்லப்படுகிறது.
யுபிஐ பல்வேறு விதங்கள் உள்ளன. அதில் ஒன்று யுபிஐ லைட் இது பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்களின் பணப்பரிவர்த்தனைக்கான உச்சவரம்பு 5000 ரூபாயாக அதிகரித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
யுபிஐ வாலட்டின் பணப்பரிவர்த்தனைக்கான உச்சவரம்பு ரூ.1000 ஆக இருந்த நிலையில் அதனை உயர்த்தி ரூ.5000ஆகச் சேவையை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்தது.
யுபிஐ முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் மக்கள் சுலபமாக தங்கள் பணத்தைப் பரிவர்த்தனை செய்யலாம்.
முதலில் யுபிஐ லைட் பயன்படுத்தும் வாடிக்கையாளரின் உச்சவரம்பு ரூ 1000லிருந்து ரூ2000க்கு அதிகரித்தது.
பின்னர், தற்போது அதிரடியாக வாடிக்கையாளரின் சிரமங்களை உணர்ந்து யுபிஐ உச்ச வரம்பை ரூ.5000அதிகரித்து அரசு அதிரடி உத்தரவிட்டது.