2020 செப்டம்பரில் இந்திய அரசு PUBG மொபைல் இந்தியாவை தடைசெய்தது, அதன் பின்னர் இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான PUBG பிரியர்கள் இந்த மொபைல் விளையாட்டு மீண்டும் எப்போது இந்தியாவில் தொடங்கும் என ஆவலாக காத்திருக்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவர்கள் காத்திருப்பு விரைவில் முடிவுக்கு வரும் என தெரிகிறது. ஏனென்றால், PUBG இந்தியா, நிறுவனத்தில், முதலீட்டு உத்திகளுக்கான ஆய்வாளர் பதவிக்கு ஆள் தேவை என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  எனவே PUBG மொபைல் இந்தியா நிறுவனம் விரைவில் விளையாட்டை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. Live Mint, Krafton Inc,  ஆகியவற்றில், மார்ச் 18 அன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.


நிறுவனங்களின் இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் பணிகளை  மேற்கொள்வதில், கிராஃப்டனுக்கு (Krafton)  உதவுவதும், இந்தியாவில் முதலீட்டு வாய்ப்புகள் மீது கவனம் செலுத்துவதும், முதலீட்டு உத்திகளுக்கான ஆய்வாளரின் பங்கு என்று வேலை பட்டியலில் வழங்கப்பட்ட பொறுப்புகள் மற்றும் பணிகள் குறித்த விளக்கம் கூறுகிறது.


ALSO READ | Twitter பயனர்களின் நெடுநாள் எதிர்பார்ப்பான Undo அம்சம் விரைவில்... ஆனால், ஒரு நிபந்தனை!


முன்னதாக, கிராப்டன் நிறுவனம் இந்தியாவில் உள்ளூர் வீடியோ கேம், எஸ்போர்ட்ஸ், பொழுதுபோக்கு மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகியவை தொடர்பான  நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் இந்தியாவில் சுமார் 725 கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.


PUBG Corp என்பது கிராஃப்டனின் துணை நிறுவனம் ஆகும், PUBG மொபைல் இந்தியாவின் அறிவுசார் சொத்துரிமைகள் இந்த நிறுவனத்திடம் உள்ளது. இந்தியாவில் தடை விதிக்கப்படுவதை தவிர்ப்பதற்காக இந்திய சந்தைக்கு மட்டுமே புதிய விளையாட்டை உருவாக்கும் திட்டத்தை நவம்பர் மாதம் நிறுவனம் அறிவித்திருந்தது.


தரவுகள் தொடர்பான பாதுக்கப்பை கருத்து இந்திய அரசு PUBG ஐ தடைசெய்த சில நாட்களுக்குப் பிறகு PUBG கார்ப் ஐபி (IP) உரிமைகள் டென்சென்ட் (Tencent) நிறுவனத்திடம்  இருந்து பறிக்கப்பட்டது.


ALSO READ | WhatsApp, Facebook, Instagram சேவைகள் முடங்கியதன் காரணம் என்ன..!!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR