இந்திய ரயில்வேயின் நெட்வொர்க் உலகின் மிகப் பெரிய நெட்வொர்க்குகளின் ஒன்று. இத்தகைய சூழ்நிலையில், இந்திய ரயில்வே பயணிகளுக்கு பல வகையான வசதிகளை வழங்குகிறது. நாடு முழுவதும் உள்ள ரயில் வழித்தடங்களின் நீளம் 68,000 கிலோமீட்டருக்கு மேல் இருக்கும் என்று ரயில்வே வெளியிட்ட தரவுகள் கூறுகின்றன. தினசரி, இந்தியாவில் சுமார் 23 மில்லியன் பயணிகள் ரயிலில் பயணிப்பதாக கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நம்மில் பலர் கன்பர்ம் டிக்கெட்டை பெற சில மாதங்களுக்கு முன்பே ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்கிறோம், ஆனால் சில காரணங்களால் கடைசி நேரத்தில் டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டியிருந்தால், முழுத் தொகையையும் பெற முடியுமா இல்லையா என்பது பலருக்கும் எழும் முக்கிய கேள்வி.  மேலும் தற்போது வட இந்தியாவில் நிலவும் குளிரால் ரயில்கள் பல தாமதமாக வருகின்றன/ புறப்படுகின்றன.  அத்தகைய சூழ்நிலையில், ரயில் டிக்கெட்டை கடைசி நேரத்தில் ரத்து செய்தால் முழுப் பணம் கிடைக்குமா என்ற கேள்வி எழலாம். இத்தகைய சூழ்நிலையில், இந்திய ரயில்வே (Indian Railways)பயணிகளுக்கு ஒரு சிறப்பு உரிமையை வழங்குகிறது, இதன் கீழ் அவர்கள் கடைசி நேரத்தில் கேன்சல் செய்தாலும் ரயில் டிக்கெட்டின் முழு பணத்தையும் எளிதாக திரும்பப் பெற முடியும்.


ரயிலில் பயணிக்கும் பல பயணிகளுக்கு இந்த வசதி பற்றி தெரியாது. ரயில் தாமதமானால் பயணிகளுக்கு முழுத் தொகையையும் இந்திய ரயில்வே திருப்பிக் கொடுக்கும். இதற்கு இந்திய ரயில்வே சில நிபந்தனைகளை விதித்துள்ளது. வாருங்கள், இன்று இந்திய ரயில்வேயின் இந்த விதியைப் பற்றி உங்களுக்குச் சொல்வோம். இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி விதிகளின்படி, கன்பர்ம் டிக்கெட்டை ரத்து செய்வதன் மூலம் முழுப் பணத்தையும் திரும்பப் பெறலாம்.  ஆனால் இதற்கு சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் உள்ளன. உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டை நீங்கள் கடைசி நேரத்தில் டிக்கெட்டை ரத்து செய்யும் போது, அதுவும் உங்கள் பெயர் மற்றும் இருக்கை முன்பதிவு ரயில்வே சார்ட் பட்டியலில் பட்டியலிடப்பட்டால், முழுப் பணத்தையும் எவ்வாறு திரும்பப் பெறுவது எப்படி  என்பதை  அறிந்து கொள்ளலாம்


உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டை ரத்து செய்தால் பணம் திரும்ப கிடைக்குமா?


IRCTC விதிகளின்படி, உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டை ரத்துசெய்தால், முழுப் பணத்தையும் திரும்பப் பெறலாம். ஆனால் இது சில சூழ்நிலைகளில் மட்டுமே சாத்தியமாகும். உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் வாங்கிய நிலையில், சார்ட் தயாரிக்கப்பட்டு, டிக்கெட்டை ரத்து செய்ய நினைத்தால், பயணிகளுக்கு பணத்தை முழுமையாக திரும்பப் பெற சில குறிப்பிட்ட சூழ்நிலைகள் உள்ளன. இருப்பினும், இதற்காக, பயணிகள் முதலில் டிக்கெட் டெபாசிட் ரசீதைப் பெற வேண்டும். TDRஐப் பதிவுசெய்து ரத்துசெய்ததற்கான காரணத்தை பதிவு செய்த பின்னரே முழுப் பணத்தையும் திரும்பப் பெற முடியும்.


நீங்களும் ரயிலில் பயணிக்கப் போகிறீர்கள் மற்றும் உங்கள் ரயில் தாமதமாக வந்தால், உங்கள் டிக்கெட்டின் முழுப் பணத்தையும் எளிதாகத் திரும்பப் பெறலாம். இந்திய ரயில்வேயின் விதிகளின்படி, ரயில் தாமதமாக வந்தால், பயணிகள் பணத்தைத் திரும்பப் பெறலாம். ரயில் 3 மணி நேரத்திற்கு மேல் தாமதமாக வந்தால் மட்டுமே பயணிகள் பணத்தைத் திரும்பப் பெற முடியும். இருப்பினும், உறுதிப்படுத்தப்பட்ட தட்கல் டிக்கெட்டை ரத்து செய்தால் பணம் திரும்ப வழங்கப்படாது.


ரயில் 3 மணிநேரம் தாமதமாக வந்து, நீங்கள் பயணம் செய்ய விரும்பவில்லை என்றால், பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். பணத்தைத் திரும்பப்பெறுவதற்கு நீங்கள் டிக்கெட் டெபாசிட் ரசீதை தாக்கல் செய்ய வேண்டும்.


IRCTC இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று TDRஐப் பதிவு செய்யலாம். இது தவிர, டிக்கெட் கவுண்டருக்குச் சென்று டிக்கெட்டை ஒப்படைக்கலாம். அதன் பிறகு நீங்கள் முழு பணத்தையும் திரும்பப் பெறுவீர்கள். பணத்தைத் திரும்பப் பெற குறைந்தபட்சம் 90 நாட்கள் ஆகும்.


மேலும் படிக்க | Self Reliant: சம்பாதிக்கும் பெண்கள் எதற்கெல்லாம் செலவு செய்கிறார்கள்? ஆச்சரியம் தரும் ஆய்வு


TDR ஐ எவ்வாறு தாக்கல் செய்வது


1. முதலில் நீங்கள் IRCTC இணையதளத்தில் உள்நுழைய வேண்டும்.


2. இதற்குப் பிறகு, 'Services' பிரிவில் "File Ticket Deposit Receipt (TDR)" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.


3. இப்போது My Transactions என்னும் எனது பரிவர்த்தனை பிரிவிற்கு சென்று "File TDR" என்பதைக் கிளிக் செய்யவும்.


4. இதற்குப் பிறகு, உங்கள் கோரிக்கை கோரிக்கை ரயில்வேக்கு அனுப்பப்படும்.


5. டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்ட அதே வங்கிக் கணக்கில் பணத்தைத் திரும்பப்பெறும் தொகை வரவு வைக்கப்படும்.


 மேலும் படிக்க | Indian Railways: ரயில் பயணிகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ‘6’ விதிகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ