IRCTC/Indian Railways: இந்திய ரயில்வே கேட்டரிங் அண்ட் டூரிஸம் கார்ப்பரேஷன் லிமிடெட் (IRCTC) திங்கள்கிழமை முதல் நாட்டின் முதல் தனியார் ரயிலான தேஜஸ் எக்ஸ்பிரஸ் (Tejas Express) ரயில் சேவையை ரத்து செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மிக குறைவான பயணிகள் காரணமாக லக்னோ-டெல்லி மற்றும் மும்பை-அகமதாபாத் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் சேவையை நிறுத்த ஐ.ஆர்.சி.டி.சி IRCTC முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து அக்டோபரில் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மீண்டும் செயல்படத் தொடங்கியது. 


ALSO READ | ரயில்வேயுடன் இணைந்து பிஸினஸ் செய்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்..!!!


முன்னதாக, ஐ.ஆர்.சி.டி.சி ஒரு அறிக்கையில், குறைந்த அளவிலான பயணிகள்  காரணமாக அனைத்து தேஜஸ் ரயில்களின் செயல்பாட்டை ரத்து செய்ய நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி லக்னோ-புது தில்லி (82501/82502) தேஜாஸ் எக்ஸ்பிரஸை நவம்பர் 23 முதல் ரத்து செய்துள்ளது, அகமதாபாத்-மும்பை (82901/82902) தேஜாஸ் எக்ஸ்பிரஸ் நவம்பர் 24 முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. 


ஐ.ஆர்.சி.டி.சி ஒரு அறிக்கையில், ‘கோவிட் -19 தொற்றுநோயின் விளைவாக குறைந்த அளவிலான பயணிகள் காரணமாக தேஜஸ் ரயில்களின் அனைத்து சேவைகளையும் ரத்து செய்ய நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த இரண்டு வழித்தடங்களிலும் இயங்கும் பிற இந்திய ரயில்வே ரயில்களின் பயணிப்பவர்களின் எண்ணிக்கையை ஆராய்ந்து அதற்கு ஏற்ப நிறுவனம் தனது முடிவை பரிசீலனை செய்யும்” எனக் கூறியுள்ளது. 


பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு, லக்னோ-புது தில்லி மற்றும் அகமதாபாத்-மும்பை இடையே இரண்டு தேஜாஸ் ரயில்கள் அக்டோபர் 17 முதல் மீண்டும் தொடங்கப்பட்டன.


ALSO READ | இனி விமான பயணம் போல், ரயில் பயணத்திலும் லக்கேஜ்ஜை தூக்காமல் ஜாலியாக பயணிக்கலாம்..!!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR