கோடக் மஹிந்திரா வங்கி: வாடிக்கையாளர்களுக்கு கோடக் மஹிந்திரா வங்கி இன்ப அதிர்ச்சி ஒன்றை வழங்கியுள்ளது. வங்கி FD மீதான வட்டி விகிதத்தை மீண்டும் அதிகரித்துள்ளது. கோடக் வங்கி 3 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட ஆனால் 4 ஆண்டுகளுக்கு குறைவான FDகளுக்கான வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், 4 ஆண்டுகளுக்கும் மேலான ஆனால் 5 ஆண்டுகளுக்கு குறைவான FDகளுக்கான வட்டி விகிதம் 0.75 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கோடக் வங்கி FD மீதான வட்டி விகிதங்களில் இந்த மாற்றத்தை டிசம்பர் 11, 2023 முதல் இன்று அமல்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வங்கி குறைந்தபட்சம் 7 நாட்களுக்கு FD வழங்குகிறது


வங்கி தற்போது 2.75 சதவீதம் முதல் 6.20 சதவீதம் வரை வட்டியை வழங்குகிறது. வங்கி 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை FD வழங்குகிறது. கோடக் வங்கி பொது வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக 7.25 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு (Senior Citizen Investment) 7.75 சதவீதமும் வட்டி அளிக்கிறது.


கோடக் வங்கியின் புதிய விகிதங்கள் விபரம்


7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரையிலான முதலீட்டு காலம் - பொது மக்களுக்கு: 2.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 3.25 சதவீதம்


15 நாட்கள் முதல் 30 நாட்கள் வரையிலான முதலீட்டு காலம் - பொது மக்களுக்கு: 3.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 3.50 சதவீதம்


31 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையிலான முதலீட்டு காலம் - பொது மக்களுக்கு: 3.25 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 3.75 சதவீதம்


46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையிலான முதலீட்டு காலம் - பொது மக்களுக்கு: 3.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 4.00 சதவீதம்


91 நாட்கள் முதல் 120 நாட்கள் வரையிலான முதலீட்டு காலம் - பொது மக்களுக்கு: 4.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 4.50 சதவீதம்


121 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையிலான முதலீட்டு காலம் - பொது மக்களுக்கு: 4.25 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 4.75 சதவீதம்


180 நாட்கள் வரையிலான முதலீட்டு காலம் - பொது மக்களுக்கு: 7 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 7.50 சதவீதம்


181 நாட்கள் முதல் 269 நாட்கள் வரையிலான முதலீட்டு காலம் - பொது மக்களுக்கு: 6 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 6.50 சதவீதம்


270 நாட்கள் வரையிலான முதலீட்டு காலம் - பொது மக்களுக்கு: 6 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 6.50 சதவீதம்


271 நாட்கள் முதல் 363 நாட்கள் வரையிலான முதலீட்டு காலம் - பொது மக்களுக்கு: 6 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 6.50 சதவீதம்


364 நாட்கள் வரையிலான முதலீட்டு காலம் - பொது மக்களுக்கு: 6.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 7 சதவீதம்


365 நாட்கள் முதல் 389 நாட்கள் வரையிலான முதலீட்டு காலம் - பொது மக்களுக்கு: 7.10 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 7.60 சதவீதம்


390 நாட்கள் (12 மாதங்கள் 25 நாட்கள்) வரையிலான முதலீட்டு காலம் - பொது மக்களுக்கு: 7.15 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 7.65 சதவீதம்


391 நாட்கள் முதல் 23 மாதங்களுக்கும் குறைவான முதலீட்டு காலம் - பொது மக்களுக்கு: 7.20 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 7.70 சதவீதம்


மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்... இனி உங்களுக்கு ஜனவரி 10 வரை சான்ஸ் 


23 மாதங்கள் வரையிலான முதலீட்டு காலம் - பொது மக்களுக்கு: 7.25 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 7.75 சதவீதம்


23 மாதங்கள் 1 நாள் முதல் 2 ஆண்டுகள் வரையிலான முதலீட்டு காலம் - பொது மக்களுக்கு: 7.25 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 7.75 சதவீதம்


2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரையிலான முதலீட்டு காலம் - பொது மக்களுக்கு: 7.10 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 7.60 சதவீதம்


3 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் ஆனால் 4 ஆண்டுகளுக்கு குறைவான முதலீட்டுக் காலம் - பொது மக்களுக்கு: 7 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 7.60 சதவீதம்


4 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் ஆனால் 5 ஆண்டுகளுக்கு குறைவான முதலீட்டுக் காலம் - பொது மக்களுக்கு: 7 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 7.50 சதவீதம்


5 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் மற்றும் 10 ஆண்டுகள் வரையிலான முதலீட்டுக் காலம் - பொது மக்களுக்கு: 6.20 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 6.70 சதவீதம்.


மேலும் படிக்க | ஓய்வுக்குப் பிறகு டென்ஷன் இல்லாம இருக்கணுமா... ‘இவற்றில்’ முதலீடு செய்யுங்க!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ