மேற்கு வங்க ஊழியர்களின் அகவிலை உயர்வு 2024 : மேற்கு வங்கத்தில் பணிப்புரியும் லட்சக்கணக்கான அரசு ஊழியர்களுக்கு தற்போது நற்செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி கடந்த வியாழக்கிழமை 2024-25ஆம் நிதியாண்டுக்கான 3 லட்சத்து 66 ஆயிரத்து 166 கோடி ரூபாய் பட்ஜெட்டை மம்தா பானர்ஜி அரசு தரப்பில் நிதித் துறை இணையமைச்சர் சண்றிமா பட்டாச்சாரியா சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் தொடரில் அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி (DA Hike) உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளார். மேலும் இந்த உயர்வுக்குப் பிறகு, மொத்த அகவிலைப்படி 14 சதவிதமாக உயரும். இருப்பினும் இது மத்திய அரசை விட 32 சதவீதம் குறைவே, ஏனெனில் தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 46 சதவீத அகவிலை பெற்று வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேற்கு வங்க அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது அமலாகும்?


* மேற்கு வங்க நிதி அமைச்சர் சண்றிமா பட்டாச்சாரியா கூறுகையில், தற்போது மத்திய அரசிடமிருந்து மாநில அரசு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையானது சுமார் 1.18 லட்சம் கோடி ரூபாய் ஆகும், இருப்பினும் மாநில அரசு தற்போது ஊழியர்களுக்காக (7th Pay Commission DA Hike) கூடுதலாக 4 சதவீத அகவிலைப்படியை உயர்த்த முடிவு செய்துள்ளது, மேலும் இந்த உயர்வானது மே மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில் குடிமை தன்னார்வலர்களின் உதவித்தொகை ரூ.1000 உயர்த்தப்பட்டுள்ளது, இதற்காக தற்போது மாநில அரசு 180 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.


* இதனிடையே தொழிலாளர்களின் 100 நாள் வேலைத்திற்கான நிலுவைத் தொகைக்கு 3700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீடு கீழ், தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலைக்காக மொத்த நிலுவைத் தொகை வழங்கப்படும். 


மேலும் படிக்க | PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட் செய்தி: வட்டி விகிதத்தை அதிகரித்தது EPFO


2024 ஜனவரி மாதத்தில் அகவிலை 4 சதவீதம் அதிகரிக்கப்பட்டது:


சமீபத்தில் அதாவது கடந்த ஜனவரி மாதம் மேற்கு வங்க மாநில மம்தா பானர்ஜி (West Bengal Employees DA Hike 2024) அரசு அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தியது, இதய பிறகு அகவிலை 10 சதவீதம் உயர்ந்தது, தற்போது இந்த உயர்வின் பலணை பிப்ரவரி மாதம் முதல் அரசு ஊழியர்களுக்கு பெற்று வருகின்றனர். தற்போது நேற்று முன்தினம் நடைபெற்ற  பட்ஜெட் தொடரில் மீண்டும் அகவிலைப்படி 4 சதவீத உயர்வு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதய பேரில் 10 சதவீதத்தில் இருந்து அகவிலைப்படி 14 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இந்த திருத்தம் மே மாதம் முதல் அமலுக்கு வரவுள்ளதால் வரும் ஜூன் மாதம் முதல் ஊழியர்களின் கணக்கில் சம்பளம் உயர்வும் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் இந்த ஜாக்பாட் பலனை மாநில அரசின் 14 லட்சம் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


அகவிலைப்படி நிலுவைத் தொகை எப்போது அமலாக்கப்படும்? 


இதற்கிடையில் அகவிலைப்படி உயர்வுக்கு ஒப்புதல் அளித்த பிறகு, மத்திய அரசு ஊழியர்களின் மாதாந்திர சம்பளம் மட்டுமின்றி, 2024 ஜனவரி முதல் மார்ச் வரையிலான டிஏ நிலுவைத் தொகையும் வழங்கப்படும். ஏனெனில் இந்த உயர்வு ஜனவரி முதல் அமலுக்கு வந்தது. அதாவது ஏப்ரல் மாதத்தில் வழக்கமான சம்பளத்துடன் மூன்று மாத நிலுவைத் தொகையும் ஒரே நேரத்தில் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | பாடாய் படுத்தும் லோன் ரெகவரி ஏஜெண்டுகள்.... வங்கிகளை எச்சரித்து வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் அளிக்கும் RBI விதிகள்!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ