மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு டபுள் ஜாக்பாட்: டிஏ ஹைக், டிஏ அரியர்.. இரண்டும் வருமா?

7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு மற்றொரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அரசாங்கம் இரண்டு பெரிய பரிசுகளை அளிக்க தயாராகி வருகிறது.  

7th Pay Commission: முதல் பரிசாக அகவிலைப்படியில் நான்கு சதவீத அதிகரிப்பு இருக்கும் என சமீபத்தில் வெளியிடப்பட்ட ஏஐசிபிஐ எண்கள் மூலம் தெரிய வந்துள்ளது .  இரண்டாவதாக இன்னும் சில நாட்களில் மத்திய அரசாங்கம் 18 மாத டி ஏ அரியர் தொகையை அளிப்பது பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிடலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

1 /7

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நான்கு சதவீதம் அதிகரிக்க உள்ளது. இதன் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம் கிடைக்கும். 

2 /7

சமீபத்தில் வெளிவந்த டிசம்பர் மாத ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள் மூலம் அகவிலைப்படி நான்கு சதவீதம் உயரும் என்பது தெளிவாகியுள்ளது. தற்போது ஊழியர்கள் 46 சதவீதம் அகவிலைப்படியை பெற்று வருகிறார்கள்

3 /7

அகவிலைப்படி நான்கு சதவீதம் அதிகரிக்கப்பட்டால் ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 50 சதவீதமாக அதிகரிக்கும்

4 /7

இது தவிர கொரோனா பெருந்தொற்றின் போது முடக்கப்பட்ட டிஏ -வின் நிலுவைத் தொகையையும் அரசு விரைவில் வெளியிடும் என்றும் அதற்கான அறிவிப்பும் வெளியிடப்படும் என்றும் வட்டாரங்கள் கூறுகின்றன

5 /7

கொரோனா பெருந்தொற்றின் போது மத்திய அரசு ஊழியர்களுக்கு  2020 ஜனவரி 1 முதல் 2021 ஜூன் 30 வரை அகவிலைப்படி முடக்கப்பட்டது. அதன் பிறகு நிலமை சற்று சரியானவுடன் இந்த முடக்கம் நீக்கப்பட்டது.

6 /7

எனினும் முடக்கப்பட்ட 18 மாதங்களுக்கான அகவிலைப்படி அரியர் தொகை இன்னும் அழைக்கப்படவில்லை. அதை இப்போது அரசு அளிக்கலாம் என்று ஊகங்கள் பரவி வருகின்றன

7 /7

எனினும் அகவிலைப்படி அரியர் தொகை பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை இன்னும் அரசாங்கம் வெளியிடவில்லை.