IRCTC And Swiggy Joins Hands For Food Delivery In Railway Stations : இந்திய ரயில்வேயின் நிறுவனமான இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (Indian Railway Catering and Tourism Corporation), உணவு டெலிவரி செய்யும் ஸ்விகி நிறுவனத்துடன் கைக்கோர்த்து புதிய திட்டம் ஒன்றை அறிமுககப்படுத்தியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஸ்விகியுடன் கைக்கோர்த்த IRCTC:


பசித்தால் ஹோட்டலுக்கோ அல்லது அருகில் இருக்கும் கடைகளுக்கோ சென்று உணவினை ஆர்டர் செய்து சாப்பிடுபவர்கள், வெகுவாக குறைந்து வருகின்றனர். ஸ்விகி, ஜொமேட்டோ என உணவு டெலிவரி செய்ய செயலிகள் வந்துவிட்டதால் பலர் அதிலேயே ஆர்டர் செய்து தனக்கு பிடித்த உணவினை வாங்கி சாப்பிடுகின்றனர். இந்த வழிமுறை பயணத்தில் இருப்பவர்களால் கடைப்பிடிக்கப்படாமல் இருந்தது. பயணிகள், தங்களுக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்து சாப்பிடும் வகையில் IRCTC நிறுவனமும் ஸ்விகியும் கைக்கோர்த்து ஒரு புதிய முயற்சியை மேற்கொள்ள இருக்கிறது. 



ரயில் நிலையத்தில் ஆர்டர் செய்த உணவுகளை பெற்றுக்கொள்ள வசதி..


IRCTC இணையதளம் மூலம் இரயிலில் பயணிப்பவர்கள் உணவுகளை ஆர்டர் செய்தால், இரயில் நிலையத்திலேயே உணவுகளை பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் முன்னோட்டமாக IRCTC பயணாளர்களுக்கு பெங்களூரு, புவனேஸ்வர், விஜயவாடா மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய இரயில் நிலையங்களில் உணவு டெலிவரி செய்யப்பட உள்ளது. 


இந்த சேவை, கொஞ்சம் கொஞ்சமாக 59 இரயில் நிலையங்களுக்கு பின்னர் விரிவு படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த ஈ-கேட்டரிங் சேவை ஸ்விகி ஃபுட்ஸ் நிறுவனத்தின் Bundl Technologies Pvt.Ltd நிறுவனம் வாயிலாக நடைபெறும் என IRCTC அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்: அகவிலைப்படியுடன் உயரும் பிற கொடுப்பனவுகள்


இது குறித்து பேசிய ஐஆர்சிடிசி நிர்வாக இயக்குநர் சஞ்சய் குமார் ஜெயின்,  ஐஆர்சிடிசி நிறுவனம், ஏ மற்றும் ஏ1 வகுப்பில் பயணிப்பவர்களுக்கு சுமார் 350 நிலையங்களில் இ-கேட்டரிங் வசதியை வழங்கி வருவதாகவும், மெயில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இந்த நிலையங்களில் அதிக நேரம் நிற்கும், எனவே டெலிவரி செய்வது எளிமையாக இருக்கும் என கூறினார்.


மேலும், தாங்கள் ஏற்கனவே Zomato உட்பட 17 திரட்டிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும், தங்களது இ-கேட்டரிங் வணிகம் இந்த ஆண்டு ஏற்கனவே ரூ.30 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து ஒரு நாளைக்கு 60,000 உணவுகளை வழங்கி வருவதாகவும், இதுவரை 0 சதவிகிதம் புகார் வந்திருப்பதாகவும் தெரிவித்தார். 


உணவு டெலிவரி நிறுவனத்துடன் இரண்டாவது முறையாக கைக்கோர்த்த IRCTC:


கடந்த ஆண்டு, IRCTC நிறுவனம் Zomato உணவு டெலிவரி நிறுவனத்துடன் கைக்கோர்த்தது. இதன் மூலமாக புது டெல்லி, பிரயக்ராஜ், கான்பூர், லக்னோ, வாரணாசி ஆகிய ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு உணவு கிடைக்க ஏற்பாடு செய்தது. 


மேலும் படிக்க | வீட்டுக் கடன்... பிக்ஸட் அல்லது ப்ளோட்டிங் வட்டி... எது பெஸ்ட்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ