ஹூண்டாய் அல்கஸார்: கொரிய ஆட்டோமொபைல் நிறுவனமான ஹூண்டாய் தனது புதிய எஸ்யூவி ஹூண்டாய் அல்காசரை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. ஆனால் அறிமுகத்திற்கு முன்பே இந்த புதிய மாடல் எஸ்.யு.வி. காரின் பல விவரங்கள் கசிந்துள்ளன என்பதை உங்களுக்கு சொல்கிறோம். புதிய எஸ்யூவி அல்கஸார் (Hyundai SUV Alcazar) ஆறு வண்ணங்கள் மற்றும் ஆறு வகை மாடலில் அறிமுகப்படுத்தப்படும் என்று ரஷ்லேன் செய்தி தளம் தெரிவித்துள்ளது. மேலும், இது 6 இருக்கை மற்றும் 7 இருக்கைகள் கொண்ட மாடல்களில் கிடைக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களில் கிடைக்கும்:
இந்த புதிய எஸ்யூவி பெட்ரோல் எஞ்சின் மற்றும் டீசல் எஞ்சின் (Hyundai ALCAZAR Engine) பதிப்புகளில் கிடைக்கும் என்று செய்தி தளம்  தெரிவிக்கிறது. பெட்ரோல் பதிப்பில் 2.0 லிட்டர் எஞ்சின் உள்ளது. பெட்ரோல் எஞ்சின் 159 ஹெச்பி ஆற்றலை அளிக்கும் திறன் கொண்டது. மேலும் இது 192 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ஹூண்டாய் அல்கஸார் (Hyundai Alcazar Petrol) வெறும் 10 வினாடிகளில் பூஜ்ஜியத்திலிருந்து 100 கி.மீ வேகத்தில் இயங்கக்கூடியது.


ALSO READ  | புதிய கார்களில் 3 லட்சம் வரை பம்பர் தள்ளுபடி: அதிக சலுகை உள்ள கார்களின் பட்டியல் இதோ


டீசல் என்ஜின் (Diesel Engine) மாடல் எஸ்யூவி பற்றி பேசும்போது, ​​இது 1.5 லிட்டர், 4 சிலிண்டர், டர்போசார்ஜ் செய்யப்பட்ட டீசல் எஞ்சின் கொண்டிருக்கும். டீசல் எஞ்சின் 115 ஹெச்பி ஆற்றலை அளிக்கிறது மற்றும் 250 என்எம்  டார்க் திறனை வழங்கும். ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி ஈகோ (Eco) , சிட்டி (City) மற்றும் ஸ்போர்ட் (Sport) என மூன்று டிரைவ் முறைகளில் கிடைக்கும்.


டிரிம் மற்றும் மாறுபாடுகளை அறிந்து கொள்ளுங்கள் (Trims and Variants):
எஸ்யூவி சிக்னேச்சர், சிக்னேச்சர் (ஓ), பிரெஸ்டீஜ், பிரெஸ்டீஜ் (ஓ), பிளாட்டினம் மற்றும் பிளாட்டினம் (ஓ) வேரியண்ட்டுகளில் கிடைக்கும். 


ஹூண்டாய் அல்கஸார் எந்த வண்ணங்களில் வரும்? (Hyundai Alcazar Colours)
ஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி டைபூன் சில்வர், டைட்டன் கிரே, டைகா பிரவுன், ஸ்டாரி நைட், போலார் ஒயிட், பாண்டம் பிளாக் போன்ற வண்ணங்களில் வர இருக்கிறது என்று ரஷ்லேன் செய்தித்தளம் தெரிவிக்கிறது.


ஹூண்டாய் அல்காசார் எஸ்யூவி இந்தியாவில் ஹெக்டர் பிளஸ், எக்ஸ்யூவி 500 மற்றும் டாடா சஃபாரி போன்ற வாகனங்களுக்கு போட்டியாக வரவுள்ளது. 


ALSO READ  | Hyundai இன் சாண்ட்ரோ கார் விலை அதிகரிப்பு, எவ்வளவு விலை உயர்வு!


ஆட்டோமொபைல் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR