மும்பை: பெண் குழந்தைகளுக்கான 'லேக் லட்கி திட்டத்தை' தொடங்க அண்மையில் மகாராஷ்டிர அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த திட்டம் ஏப்ரல் 1, 2023 முதல் அமலுக்கு வருகிறது. மார்ச் மாதம் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், பிறந்த பெண் குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று மகாராஷ்டிர மாநில அறிவித்திருந்தது. ஒரு பெண் குழந்தை பிறந்தது முதல் கொடுக்கப்படும் நிதி உதவி, குழந்தை மங்கையாகும் வரை தொடரும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சக்தியை வணங்குவோம்


நவராத்திரி கொண்டாட்டங்களுக்கு மத்தியில், பெண்களின் தெய்வீக சக்தியை போற்றும் வகையில் இந்த திட்டம் இருப்பதாக அனைவரின் பாராட்டையும் இந்தத் திட்டம் பெற்றுள்ளது. லேக் லட்கி திட்டத்தின் கீழ், ஆரஞ்சு மற்றும் மஞ்சள் ரேஷன் கார்டுகளைக் கொண்ட ஏழைக் குடும்பங்களுக்கு உதவும் அரசின் நோக்கம், மேலும் விரிவுபடுத்தப்படுகிறது.


மஞ்சள் மற்றும் ஆரஞ்சு ரேஷன் அட்டை


ஆண்டு வருமானம் 15,000 முதல் 1 லட்சம் வரை உள்ள குடும்பங்களுக்கு மகாராஷ்டிர அரசு ஆரஞ்சு ரேஷன் கார்டு வழங்குகிறது.வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு 'மஞ்சள் அட்டை' வழங்கப்படுகிறது. இந்த இரு ரேஷன் அட்டைகள் வைத்திருக்கும் குடும்பத்தில் பெண் குழந்தை பிறந்தால், அந்தக் குழந்தைக்கு இந்த நிதியுதவி கிடைக்கும்.


மேலும் படிக்க | தீபாவளி போனஸ்!! மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் செய்தி... அறிவிப்பு வெளியானது!!


நிதியதவி அட்டவணை


குழந்தை பிறந்தவுடனே 5,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். இரண்டாவது தவணை, சிறுமி 1ம் வகுப்புக்கு வரும்போது கொடுக்கப்படும். அப்போது 6,000 ரூபாயும், 6ம் வகுப்புக்கு செல்லும் போது, ​​7,000 ரூபாயும் வழங்கப்படும்.


18 வயதில் ரூ.75,000
அதேபோல், 9ம் வகுப்பில் சேரும்போது 8,000 ரூபாயும், 18 வயது பூர்த்தியானால், 75,000 ரூபாயும் வழங்கப்படும். அதாவது, இத்திட்டத்தின் கீழ், சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மொத்தம் ரூ.1,01,000 கிடைக்குக்ம். மகாராஷ்டிராவின் பொருளாதார ஆய்வு 2023 இன் படி, 2.56 கோடி குடும்பங்களிடமும் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு ரேஷன் அட்டைகள் உள்ளன. மாநிலத்தில் 1.71 கோடி ஆரஞ்சு அட்டைதாரர்களும், 62.60 லட்சம் மஞ்சள் ரேஷன் கார்டுதாரர்களும் உள்ளனர். 



பெண்களுக்கு கல்வி மூலம் அதிகாரம் 
பெரும்பாலும் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிற ரேஷன் கார்டுகளைக் கொண்ட குடும்பங்கள் பணப் பற்றாக்குறையால் பெண்களின் கல்வியில் சமரசம் செய்ய நேரிடுகிறது. அரசின் லேக் லட்கி திட்டம் மூலம், பெண்கள் கல்வி கற்று, அதிகாரம் பெறுவார்கள்.


மாநில அரசு பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் அளிக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது என்று கூறும் மாநில குழந்தைகள் மற்றும் நலத்துறை அமைச்சர் அதிதி தட்கரே, 'இந்த திட்டத்திற்கான பரிந்துரைகள் தொடர்ந்து பெறப்பட்டு வந்ததால், அதை செயல்படுத்த சிறிது காலம் பிடித்தது. தற்போது இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதன் மூலம் பெண் சிசுக்கொலை சம்பவங்கள் மற்றும் பள்ளி இடைநிற்றல் சம்பவங்களும் குறையும்’ என்று தெரிவித்தார்.


லேக் லட்கி திட்டத்தில் எப்போது எவ்வளவு பணம் கிடைக்கும்?
பெண் குழந்தை பிறக்கும்போது - 5,000 ரூபாய்
ஒன்றாம் வகுப்பில் சேரும்போது - 6,000 ரூபாய்
6ஆம் வகுப்புக்குச் செல்லும்போது - ரூ 7,000
9ம் வகுப்பில் சேரும்போது - ரூ.8,000
18 வயதாகும் போது - ரூ 75,000


மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அப்டேட்: தேசிய ஓய்வூதிய திட்டத்தில் வரும் லாபகரமான் மாற்றம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ