எல்ஐசி ஜீவன் ஆனந்த்: மாதம் ரூ.1358 முதலீடு செய்து ரூ.25 லட்சம் பெறலாம்!
LIC Jeevan Anand: நீண்ட காலம் முதலீடு செய்ய வேண்டும் என நினைப்பவர்களுக்கு எல்ஐசி ஜீவன் ஆனந்த் ஒரு சிறந்த விருப்பமாகும், இது ஒரு நீண்ட கால சேமிப்பு திட்டம்.
இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமாக திகழும் எல்ஐசி எனும் லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் மக்களுக்கு பலவித சிறப்பான காப்பீட்டு விருப்பங்களை வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் மூலம் வழங்கப்படும் காப்பீட்டு திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நமது எதிர்கால மற்றும் அவசர தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடிகிறது. எல்ஐசி தொடர்ந்து பல பாலிசிகளை வழங்கி வளரும் நிலையில் தற்போது எல்ஐசி ஜீவன் ஆனந்த் எனும் ஒரு பாலிசியை வழங்கி வருகின்றது. இந்த பாலிசியில் குறைந்த அளவு முதலீடு செய்வதன் மூலம் உங்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கிடைக்கும்.
மேலும் படிக்க | ஆதார் கார்ட் தரவுகளை பாதுகாக்க அதை லாக் / அன்லாக் செய்யலாம்: செயல்முறை இதோ
நீண்ட காலம் முதலீடு செய்ய வேண்டும் என நினைப்பவர்களுக்கு எல்ஐசி ஜீவன் ஆனந்த் ஒரு சிறந்த விருப்பமாகும், இது ஒரு நீண்ட கால சேமிப்பு திட்டம். இந்த திட்டத்தில் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் உங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கப்பெறும் மற்றும் இந்த திட்டத்தின் இடையிலேயே பணத்தை எடுக்காமல் திட்டத்தின் முதிர்வில் பணத்தை பெறுபவர்களுக்கு சிறந்த பலன் கிடைக்கும். எல்ஐசி ஜீவன் ஆனந்த் பாலிசி திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு முதலீட்டு போனஸ் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளர் இறந்துவிட்டால் அவரது நாமினிக்கு 125 சதவீதம் இறப்பு பலன் கிடைக்கும்.
எல்ஐசி ஜீவன் ஆனந்தில் குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ.1 லட்சம் மற்றும் இதில் அதிகபட்ச தொகைக்கு வரம்பு இல்லை. இந்த காப்பீட்டு திட்டத்தில் ரூ.25 லட்சம் பெற விரும்புபவர்கள் தினமும் ரூ.45 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். தினம் ரூ.45 என கணக்கிட்டால் ஒரு மாதத்திற்கு ரூ.1358 வரும், இந்த தொகையை நீங்கள் 35 ஆண்டுகள் வரையிலும் டெபாசிட் செய்ய வேண்டும். இந்த திட்டத்தின் 35 ஆண்டுகால முதிர்விற்கு பிறகு முதலீட்டாளருக்கு ரூ.25 லட்சம் கிடைக்கும்.
மேலும் படிக்க | PM Kisan eKYC: பிரதமர் கிசான் சம்மான் நிதி 13ம் தவணை வாங்க இதை செய்யுங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ