கொரோனா வைரஸ் காலத்தில் சேமிப்பை எல்லாம் கரைத்துவிட்ட மக்கள், இப்போது உகந்த சேமிப்பு திட்டத்தை தேடிக் கொண்டிருக்கிறார்கள், வங்கி சேமிப்பு, போஸ்ட் ஆஃபீஸ் திட்டம் மற்றும் எல்ஐசி, பங்குச்சந்தைகளில் முதலீடு செய்து கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவரும் முதலீடு திட்டங்களின் காலவரம்பு, வருவாய், சேமிப்பு உத்தரவாதம் மற்றும் அதில் இருக்கும் பின் விளைவுகள் ஆகியவற்றை தெரிந்து கொண்டு உகந்த முதலீட்டு திட்டங்களை தேர்ந்தெடுக்கிறார்கள். அந்தவகையில் எல்ஐசியில் இருக்கும் நாள் ஒன்றுக்கு 138 ரூபாய் முதலீடு செய்து, 23 லட்சம் ரூபாய் ரிட்டன் கிடைக்கும் திட்டங்களைப் பற்றி இங்கே தெரிந்து கொள்வோம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எல்ஐசியின் பீமா ரத்னா திட்டம்


தனிநபர்களுக்கு சேமிப்பு மற்றும் நிதிப் பாதுகாப்பை வழங்குவதற்காக இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தால் உருவாக்கப்பட்ட திட்டம் LIC பீமா ரத்னா சேமிப்பு திட்டம் ஆகும். இந்த தனிநபர் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் கார்ப்பரேட் முகவர்கள், முகவர்கள், காப்பீட்டு சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் (IMF) மற்றும் LICயின் பொதுவான சேவை மையங்கள் (CSC) மூலம் கிடைக்கிறது.


மேலும் படிக்க | EPFO மிகப்பெரிய அப்டேட்: அதிகரிக்கிறது குறைந்தபட்ச மாத ஓய்வூதியம்!!


இத்திட்டத்தில் மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுதோறும் என நெகிழ்வான பிரீமியம் செலுத்திக் கொள்ளலாம். பிரீமியங்களுக்கு 30 நாட்கள் சலுகைக் காலம் வழங்கப்படுகிறது. மாதாந்திர பிரீமியங்களுக்கு 15 நாட்கள் சலுகைக் காலம் வழங்கப்படுகிறது. வருடாந்திர கொடுப்பனவுகளுக்கு 2% தள்ளுபடி மற்றும் அரையாண்டு கொடுப்பனவுகளுக்கு 1% தள்ளுபடியும் இந்தத் திட்டத்தில் உண்டு.


பாலிசியின் முதிர்வு காலம் 


இந்தப் பாலிசியின் முதிர்வு காலம் 10, 15, 20, 25 ஆண்டுகள் ஆகும். இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் நபர் தங்களுக்கு உகந்த ப்ரீமியம் காலத்தை தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும். 23 லட்சம் ரூபாய் கிடைக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் தினம்தோறும் முதலீடு செய்ய வேண்டும்.  


ரூ.23 லட்சம் பெறுவது எப்படி?


முதலீட்டுக்காக நீங்கள் எல்ஐசியில் இருக்கும் பீமா ரத்னா திட்டத்தை தேர்ந்தெடுத்து 20 ஆண்டுகால வரம்பில் பணத்தை முதலீடு செய்கிறீர்கள் என்றால் உங்களுக்கு முதிர்வு காலத்துக்குப் பிறகு 23 லட்சம் ரூபாய் கிடைக்கும். அதற்கு நீங்கள் தினமும் 138 ரூபாய் வீதம் ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். 20 ஆண்டுகளில் 10 லட்சம் ரூபாய் சேமித்திருப்பீர்கள். திட்டத்தின் முதர்ச்சியின்போது 23 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். நல்ல சேமிப்பு திட்டத்தை தேடிக் கொண்டிருப்பவர்கள் இந்த திட்டத்தை பரிசீலிக்கலாம். 


மேலும் படிக்க | EPFO:58 வயதுக்கு முன்னரே பென்ஷன் வேண்டுமா? அதற்கு என்ன செய்ய வேண்டும்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ