மிகப்பெரிய மற்றும் பழமையான ஆயுள் காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா மக்களின் நலனுக்காக பல திட்டங்களை வழங்கி வருகிறது.  இந்த நிறுவனத்தில் கோடிக்கணக்கான நபர்கள் பாலிசியை எடுத்து பயன்பெற்று வருகின்றனர்.  சந்தையில் பல முதலீட்டு விருப்பங்கள் இருந்தாலும், மக்கள் எல்ஐசியில் முதலீடு செய்வதை பெரிதும் விரும்புகின்றனர்.  இப்போது எல்ஐசி வழங்கும் புதிய பிரீமியம் எண்டோவ்மென்ட் திட்டத்தில் நீங்கள் தினமும் ரூ.71 முதலீடு செய்ய வேண்டும்.  இந்த திட்டத்தின் முதிர்வில் உங்களுக்கு மொத்தம் ரூ.48.75 லட்சம் வருமானமாக கிடைக்கப்பெறும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | 500 ரூபாய் நோட்டு குறித்து அரசு வெளியிட்ட முக்கிய தகவல்


புதிய பிரீமியம் எண்டோவ்மென்ட் திட்டம் என்பது தனிநபர் ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். இந்தத் திட்டத்தில் நீங்கள் பங்களிப்பதன் மூலம் சேமிப்பு மற்றும் காப்பீட்டுத் தொகை ஆகிய இரண்டின் பலன்களையும் பெற்றுக்கொள்ளலாம்.  இந்த திட்டத்தில் பங்களிக்கும் முதலீட்டாளர் இறந்துவிட்டால், அவருடைய நாமினிக்கு டெபாசிட் தொகை வழங்கப்படும் மற்றும் திட்டத்தின் முதிர்வு காலம் வரை பாலிசிதாரர் உயிரோடு இருந்தால் அவருக்கு முழுப் பணம் கிடைக்கும்.  இதுதவிர இந்த திட்டத்தில் பங்களிக்கும் முதலீட்டாளருக்கு கடன் வசதியும் வழங்கப்பட்டு வருகிறது.



இந்த திட்டத்தில் உங்கள் குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ.1 லட்சம் ஆகும்.  குறைந்தபட்சம் 8 வயது முதல் அதிகபட்சமாக 55 வயது வரை இந்த திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம்.  இந்த திட்டத்தின் அதிகப்பட்ச முதிர்வு வயது 75 ஆகும் மற்றும் பாலிசியின் காலம் 12 முதல் 35 ஆண்டுகள் ஆகும்.  உதாரணமாக 18 வயதில் எல்ஐசியின் புதிய எண்டோவ்மென்ட் திட்டத்த்தில் நீங்கள் சேர்ந்து 35 வருடம் முதலீட்டு காலத்தை தேர்வு செய்தால் ரூ. 10 லட்சம் காப்பீட்டுத் தொகைக்கு, ஒவ்வொரு ஆண்டும் நீங்கள் ரூ.26,534 வருடாந்திர பிரீமியமாகச் செலுத்த வேண்டும்.  இரண்டாவது ஆண்டில் பிரீமியம் தொகை ரூ.25,962 ஆக குறைக்கப்படும்.


மேலும் படிக்க | 7th Pay Commission: 18 மாத அரியர் தொகை விரைவில் கிடைக்கவுள்ளதா? அப்டேட் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ