Mass Layoffs: தொழில்நுட்ப உலகின் பா முன்னணி நிறுவனங்கள் ஊழியர்களை அதிரடியாக பணியில் இருந்து நீக்கி வருகின்றன. அதுவும் பெரிய எண்ணிக்கையில் இந்த பணிநீக்கம் நடைபெற்று வருகிறது. அதில்,  மெட்டா, மைக்ரோசாப்ட், கூகுள், அமேசான் போன்ற மிகப் பெரிய நிறுவனங்களும் அடங்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மார்க்கெட்டிங், சைட் செக்யூரிட்டி, என்டர்பிரைஸ் இன்ஜினியரிங், புரோகிராம் மேனேஜ்மென்ட், கன்டென்ட் ஸ்ட்ரேட்டிஜி மற்றும் கார்ப்பரேட் தகவல் தொடர்பு என பல்வேறு குழுக்களில் பணிபுரியும் ஏராளமான பணியாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதில், 11 முக்கிய நிறுவனங்கள் செலவுக் குறைப்பு நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக பெரிய அளவில் பணியாளர்களைக் குறைத்துள்ளன.


சமீபத்தில் பணிநீக்கங்களை அறிவித்த நிறுவனங்களின் பட்டியல் இது.


கூகுள் நிறுவனத்தின் பணிநீக்கம்


9to5Google இன் கூற்றுப்படி, கூகிள் அதன் சாதனங்கள் மற்றும் சேவைகள் குழுவை மறுசீரமைக்கிறது மற்றும் நிறுவனத்தில் பணிபுரியும் சில நூறு பேரை நீக்குவதாக தெரிகிறது. அதிலும், ஆக்மென்டட் ரியாலிட்டி வன்பொருள் குழுவில் உள்ளவர்களில் அதிகமானவர்களுக்கு பணி பறிபோயுள்ளது.


அமேசான் பணிநீக்கங்கள்


அமேசான் தனது ஆடிபிள் ஊழியர்களில் 5 சதவீதத்திற்கு மேலதிகமாக பிரைம் வீடியோ மற்றும் எம்ஜிஎம் ஸ்டுடியோவில் இருந்து நூற்றுக்கணக்கான நபர்களின் வேலைவாய்ப்பை நிறுத்துவதாக தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் செய்தி தெரிவிக்கிறது.


டிவிட்ச் பணிநீக்கங்கள்


ப்ளூம்பெர்க்கின் கூற்றுப்படி, லைவ்-ஸ்ட்ரீமிங் தளமான ட்விட்ச் (Twitch Layoffs)  500 தொழிலாளர்களை அதாவது அதன் பணியாளர்களில் 35 சதவீதத்தை பணிநீக்கம் செய்கிறது. பல உயர் பதவியில் உள்ள நிர்வாகிகள் வெளியேறிய பிறகு இந்த பணிநீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  


மேலும் படிக்க | SIP: வெறும் 500 ரூபாயில் முதலீட்டை தொடங்கி 21 லட்சத்துக்கு மேல் வருமானம் பெறுவது எப்படி?


யுனிட்டி சாஃப்ட்வேர்


 ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, வீடியோ கேம் மேம்பாட்டிற்கான கருவிகளை உற்பத்தி செய்யும் யூனிட்டி சாஃப்ட்வேர் (Unity Software) சுமார் 1,800 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.  


ஜெராக்ஸ் பணிநீக்கங்கள்


புதிய தலைமையின் கீழ் மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, ஜெராக்ஸ் (Xerox Layoffs)  அதன் 15 சதவீத தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தி வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் தெரிவிக்கிறது.


மெசஞ்சர் பணிநீக்கங்கள் (The Messenger Layoffs)


டிஜிட்டல் செய்திகளை வழங்கும் தொடக்க நிறுவனமான தி மெசஞ்சர், கையில் பணம் குறைவாக இருப்பதால் சுமார் இருபது ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக தி நியூயார்க் டைம்ஸ் தெரிவிக்கிறது.


மேலும் படிக்க | EPS-95 இன் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும்: வலுக்கும் ஓய்வூதியதாரர்களின் போராட்டம்


பிஸ்ஸா ஹட் பணிநீக்கங்கள்


மாகாணத்தின் குறைந்தபட்ச ஊதியம் ஒரு மணி நேரத்திற்கு $20 ஆக உயர்த்தப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு, தெற்கு கலிபோர்னியாவில் உள்ள பிஸ்ஸா ஹட் கடைகள் (Pizza Hut Layoffs) 1,200 க்கும் மேற்பட்ட டெலிவரி டிரைவர்களை விடுவித்ததாக லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.


நைக் பணிநீக்கங்கள்


சிஎன்பிசியின் கூற்றுப்படி, அடுத்த மூன்று ஆண்டுகளில் செலவினங்களை $2 பில்லியன் குறைக்கும் முயற்சியில், நைக் (Nike Layoffs)  அதிக அளவிலான தொழிலாளர்களை பணிநீக்கம் செய்கிறது, அது எவ்வளவு தொழிலாளர்களை நீக்கியது என்ற எண்ணிக்கை தெரியவிலை.  


டைடல் பணிநீக்கங்கள் (Tidal Layoffs)


இசைக்கான ஸ்ட்ரீமிங் சேவையான டைடல், சுமார் 40 ஊழியர்களை அல்லது அதன் பணியாளர்களில் 10 சதவீதத்தை வெளியேறியுள்ளது. பிளாக், ஜாக் டோர்சியின் பேமெண்ட் ஸ்டார்ட்அப், டைடலின் பெரும்பகுதியை சொந்தமாக வைத்துள்ளது, இது பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்க முயல்கிறது.


ட்விலியோ பணிநீக்கங்கள் (Twilio Layoffs)


ட்விலியோ 300 தொழிலாளர்களை அல்லது அதன் மொத்த பணியாளர்களில் 5 சதவீதத்தை நீக்கியுள்ளது. அதில், பெரும்பாலும் அதன் டேட்டா மற்றும் ஆப்ஸ் பிரிவில் உள்ள பணியாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.


Spotify பணிநீக்கங்கள்


டிசம்பர் தொடக்கத்தில், Spotify மூன்றாம் சுற்று பணிநீக்கங்களைச் செயல்படுத்துவதாகக் கூறியது, இதன் விளைவாக 1,500 ஊழியர்கள் அல்லது தோராயமாக 17 சதவிகித பணியாளர்கள் நீக்கப்படலாம்.  


மேலும் படிக்க | Budget 2024: சம்பள வர்க்கத்திற்கு மிகப்பெரிய நிவாரணம்.. ஸ்டாண்டர்ட் டிடக்ஷன் வரம்பில் மாற்றம்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ