பெரிய அளவில் பணி நீக்கம் செய்ய தயாராகும் McDonald நிறுவனம்!

Mcdonald's Layoff: நிறுவனம் தனது அமெரிக்க ஊழியர்களுக்கு திங்கள் முதல் புதன்கிழமை வரை வீட்டிலிருந்து வேலை செய்யத் தொடங்குமாறு கடந்த வாரம் ஒரு அஞ்சல் அனுப்பியது. இந்த வாரம் திட்டமிடப்பட்ட அனைத்து தனிப்பட்ட சந்திப்புகளையும் ரத்து செய்யுமாறு பணியாளர்களை கேட்டுக் கொண்டுள்ளது.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 3, 2023, 11:48 AM IST
  • அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிநீக்கங்களால் அதிகம் பாதிக்கப்படுபவர்களில் இந்தியர்களும் உள்ளனர்.
  • விசாவில் அமெரிக்காவில் வசிக்கும் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் வேலையில்லாமல் உள்ளனர்.
பெரிய அளவில் பணி நீக்கம் செய்ய தயாராகும் McDonald நிறுவனம்! title=

Mcdonald's US Office Layoff: உலகின் மிகப்பெரிய துரித உணவு சங்கிலிகளில் ஒன்றான McDonald's இந்த வாரம் அமெரிக்காவில் உள்ள அதன் அனைத்து அலுவலகங்களையும் தற்காலிகமாக மூடவுள்ளது. புதிய சுற்று ஆட்குறைப்பு குறித்து தனது நிறுவன ஊழியர்களுக்கு தெரிவிக்க நிறுவனம் தயாராகி வருகிறது. வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. திங்கள் முதல் புதன்கிழமை வரை வீட்டிலிருந்து வேலை செய்யத் தொடங்குமாறு நிறுவனம் தனது அமெரிக்க ஊழியர்களுக்கு கடந்த வாரம் மின்னஞ்சல் அனுப்பியது. மெக்டொனால்டு இந்த முடிவை எடுத்துள்ள நிலையில், இதனால் பணிநீக்கங்கள் குறித்த தகவல்கள் வெளியாகலாம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எத்தனை ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

கடினமான முடிவுகள் எடுக்கப்படும் என தகவல்

McDonald's மின்னஞ்சலில், "ஏப்ரல் 3 வாரத்தில், நிறுவனத்தில் உள்ள பணியாளர் நிலைகள் தொடர்பான முக்கியமான கடினமான முடிவுகளை உங்களுக்குத் தெரிவிப்போம்." என்று கூறிய நிலையில், இந்த வாரம் திட்டமிடப்பட்ட அனைத்து தனிப்பட்ட சந்திப்புகளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜனவரியில் ஆட்குறைப்புக்கான சமிக்ஞைகளை கொடுத்த மெக்டொனால்டு

துரித உணவு சங்கிலி நிறுவனமான மெக்டொனால்டு, புதுப்பிக்கப்பட்ட வணிக மூலோபாயத்தின் ஒரு பகுதியாக கார்ப்பரேட் பணியாளர்களின் திறனை மதிப்பாய்வு செய்வதாக ஜனவரி மாதம் கூறியது. இது சில துறைகளில் பணிநீக்கங்களுக்கும், சில துறைகளில் விரிவாக்கத்திற்கும் வழிவகுக்கும். புதன்கிழமைக்குள் பணிநீக்கங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்துள்ளன

உலகளாவிய பொருளாதார மந்தநிலை மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கத்தை எதிர்த்துப் போராட நிறுவனங்கள் முயற்சிப்பதால் பணி நீக்கங்கள் அதிகரித்து வருகின்றன. கூகுள், அமேசான் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட பல தொழில்நுட்ப நிறுவனங்களும் சமீபத்தில் தங்கள் செயல்பாடுகளை வெகுவாகக் குறைத்துள்ளன.

மேலும் படிக்க | ராக்கெட் வேகத்தில் உயரும் விலைவாசி! ரமலான் மாதத்தில் கண்ணீர் விடும் பாகிஸ்தானியர்கள்!

ஆட்குறைப்பு நடவடிக்கையால் இந்தியர்களும் பாதிக்கப்பட்டனர்

அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களில் அதிக அளவிலான பணிநீக்கங்களால் அதிகம் பாதிக்கப்படுபவர்களில் இந்தியர்களும் உள்ளனர். தற்காலிக விசாவில் அமெரிக்காவில் வசிக்கும் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் வேலையில்லாமல் உள்ளனர். மேலும் புதிய விசாவைப் பெற இன்னும் சிறிது காலம் உள்ள நிலையில், வேலையில்லாமல் உள்ள H-1B விசா வைத்திருப்பவர்கள், அவர்களுக்கு ஸ்பான்சர் செய்ய புதிய வேலை கண்டுபிடிக்காமல் போனால், 60 நாட்களுக்கு மட்டுமே சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் தங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மெக்டொனால்டு உலகளவில் 150,000 க்கும் மேற்பட்ட நபர்களை கார்ப்பரேட் பணிகளிலும் மற்றும் அதன் சொந்தமான உணவகங்களிலும் பணியமர்த்தியுள்ளது. இதில் 70% மாற்பட்ட உணவகங்கள் அமெரிக்காவிற்கு வெளியே உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | 5 பயணிகளை விட்டுவிட்டு பறந்த விஜயவாடா - குவைத் விமானம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News