லித்தியம் ’வெள்ளை தங்கம்’


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

’வெள்ளை தங்கம்’ என அழைக்கப்படும் லித்தியம் இன்னும் சில ஆண்டுகளில் உலகின் எரிபொருள் தேவைக்கு பயன்படுத்தப்படும் பெட்ரோல் - டீசல் இடத்தை நிரப்பப்போகும் மாற்று சக்தியாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஆட்டோமொபைல் துறையை புதிய பரிமாணத்துக்கு எடுத்துச் செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் இப்போது உலகம் எரிபொருள் வாகனங்களுக்கு மாற்றாக அயன் பேட்டரிகள் மூலம் இயக்கப்படும் மின்சார வாகனங்களை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவும் மின்சார வாகன உற்த்தியை அதிகப்படுத்தும் நோக்கில் அது சார்ந்த கட்டமைப்புகள் உருவாக்கத்துக்கு மிகப்பெரியளவில் முன்னுரிமை கொடுத்து வருகிறது.


மேலும் படிக்க | லித்தியம் அதிகம் இருக்கும் டாப் 5 நாடுகள்


லித்தியம் கண்டுபிடிப்பு


தமிழ்நாடு அரசும் புதிதாக மின்சார வாகன உற்பத்தி கொள்கை ஒன்றையே வெளியிட்டிருக்கிறது. இன்னும் 10 ஆண்டுகளில் மின்சார வாகனத்துறையை முழுமையாக நடைமுறைக்கு கொண்டு வரும் நோக்கில் திட்டங்களை வகுத்து அரசுகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில் மின்சார வாகனங்களின் அயன் பேட்டரி உருவாக்கத்தில் லித்தியத்தின் பங்கு தான் முதன்மையானது. இதனால், உலக நாடுகள் அனைத்தும் தங்கள் நாடுகளில் இருக்கும் லித்தியம் மூலப் பொருள் கணக்கெடுப்பை தொடங்கியுள்ளன. இந்தியாவில் பல்வேறு இடங்களில் லித்தியம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அதில் ஜம்மு காஷ்மீரில் மிகப்பெரிய அளவில் அதாவது 5.9 மில்லியன் டன்கள் லித்தியம் இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 


லித்தியம் சுத்திகரிக்கும் ஆற்றல்


இந்த கண்டுபிடிப்பு இந்தியாவுக்கு லித்தியம் தேவையில் மிகப்பெரிய நம்பிக்கை கொடுத்திருந்தாலும், அதனை சுத்திகரிக்கும் ஆற்றல் இந்தியாவிடம் இல்லை. உலகளவில் லித்தியத்தை பிரித்தெடுக்கும் கட்டமைப்புகள் சுமார் 60 விழுக்காடு சீனாவிடம் மட்டுமே உள்ளது. அந்நாட்டுடன் ஒப்பிட்டால் இந்தியா இன்னும் வெகு தொலைவில் பின்னுக்கு உள்ளது. ஒருவேளை இந்தியா லித்தியம் பிரித்தெடுக்கும் பணியில் இறங்கினால் மிகப்பெரிய அளவிலான கட்டமைப்புகள் அவசியம். அத்தகைய கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு இந்தியாவுக்கு இன்னும் பல தசாப்தங்களும், மிகப்பெரிய முதலீடுகளும் தேவைப்படுகிறது. 


லித்தியம் பிரித்தெடுக்கும் முறை


லித்தியம் என்ற கனிமம் நேரடியாக பூமியில் இருந்து அப்படியே கிடைத்துவிடாது. மற்ற தாது மற்றும் கனிமப் பொருட்களைப்போல் லித்தியத்தையும் பிரித்தெடுக்க வேண்டும். காஷ்மீரிலும் பாக்சைட் பாறைகளில் உள்ள லித்தியத்தை பிரித்தெடுப்பது என்பது மிகப்பெரிய அறிவியல் நடைமுறைகள் அவசியம் என்பதால் காஷ்மீர் லித்தியம், இந்தியர்களின் பாக்கெட்டுகளில் பேட்டரிகளாக மாறுவதன் பின்னணியில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த மத்திய அரசு மிகப்பெரிய செயல் திட்டங்களையும், முதலீடுகளையும் எதிர்நோக்கியுள்ளது. அதனைக் கடந்து நடைமுறைச் சிக்கல்களும் இருக்கின்றன. இவற்றை கடந்தபிறகே காஷ்மீர் லித்தியம் பேட்டரிகளாக மாறும்.


மேலும் படிக்க | இந்தியாவின் ’லித்தியம் புதையல்’ பேட்டரி துறையில் சீனாவை பின்னுக்கு தள்ளும்..! எப்படி?


மேலும் படிக்க | இந்தியாவை விட லித்தியம் கொட்டி கிடக்கும் குட்டி நாடு...! சீனா - அமெரிக்கா இல்லை


மேலும் படிக்க | Lithium Battey: அடிக்கடி தீ விபத்தில் சிக்கும் மின்சார வாகனங்கள்...! தவிர்க்க சிறந்த வழி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ